வியாழன், ஜூன் 29, 2017

ஓஜஸ் எனும் உயிர்சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி -உயிர் ஆற்றல் -ஓஜஸ் 


டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .சுதா ., BAMSஉடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்று பலரும் இப்போது ஆயுர்வேத மருத்துவத்தை நாடி வருகிறார்கள் .உடலின் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு மாத்திரையை தொடர்ந்து சாப்பிட கிடைத்து விடுமா ? வெறும் சத்து மாத்திரைகளை உண்டு வந்தால் அந்த நோய் எதிர்ப்பு சக்தி கூடி விடுமா ?. இந்த கேள்விக்கு பதில் நாம் ஓஜஸ் பற்றி தெரிந்து கொண்டால் கிடைத்து விடும்
ஆயுர்வேதத்தில் ஒஜஸ் என்பது சப்த தாதுக்களின் ( ஏழு தாதுக்கள் ) சாரம்சமாகும். ஆரோக்யமான உடலின் ஏழு தாதுக்களும் ஓஜஸின்- நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. உடலை நோயில் இருந்து விலக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.ஓஜஸ் எங்கிருக்கிறது ?
உடல் முழுவதும் பரவி இருக்கிறது ..
இதயத்தை ஸ்தானமாக கொண்டு உடல் முழுவதும் பரவி உடலை இயக்குகின்றது


ஓஜஸ் குணம்:

ஸ்நிக்தம் - எண்ணெய்த்தண்மை
சோமாத்மகம் - நீர் போன்று
சந்த - தெளிவாக
ஈசத்லோனபீதகம் - கொஞ்சம் மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு
சரகரின் கூற்றுப்படி ஓஜஸ் 10 குணமுடையது.

குரு - கனமானது
சீத       -         குளிர்ச்சியானது
ம்ருது        -         மிருதுவான
ஷ்லக்ஹனம்        - மென்மையானது
பஹல       -        அடர்த்தியானது
மதுரம்        - இனிப்பு சுவையுடையது
ஸ்திரம் - திடமானது
ப்ரசன்னம் - தெளிவானது
பிச்சிலம் - பிசுக்குத்தன்மை
ஸ்நிக்தம் - எண்ணெய்த்தன்மை


ஓஜஸ் எப்படி இருக்கும் ?

நிறம் நெய் போன்றும் , சுவையானது தேன் போன்றும் , வாசம் வறுத்த நெய் போன்றும் இருக்கும்.


ஓஜஸ் எப்படி உருவாகிறது ?


ஓஜஸ் கரு வயிற்றில் உருவாகும்போதே உருவாகின்றது. கரு வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கிறது. கரு வயிற்றில் இருக்கும்போதே ஓஜஸ் ஆனது அதனுடைய இடமான இதயத்தை சென்றடைகின்றது.

ஓஜஸ் என்னும் உயிர்சக்தி குறைவாக இருந்தால் மனிதனின் ஆயுட்காலமும் குறைவுதான்ஓஜஸின் வகைகள் எத்தனை ?.

பர மற்றும் அபர என்று இரண்டு விதமான ஓஜஸ்கள் உண்டு.


பர ஓஜஸ் :

மிக முக்கியத்தவம் வாய்ந்த வாழ்க்கை சார்ந்து இருந்தது
இதயத்தை இடமாக கொண்டுள்ளது
அளவு : 8 சொட்டு


அபர ஓஜஸ்:

இது உடல் நலத்தை சார்ந்தது
இது உடல் முழுவதும் பரவி காணப்படும்
அளவு : அர்த்த அஞ்சலி ப்ரமானம் அதாவது அரை கை அளவு - 10 - 15 மிலி


ஓஜஸ் குறைய காரணங்கள்:

அளவுக்கு அதிகமான கோபம் , பசி , கவலை , பேராசை , பொறாமை , சோர்வு , அதிக உடற்பயிற்சி , அதிக உபவாசம் இருப்பது , அளவுக்கு குறைவாக உணவு உட்கொள்வது , மதுபழக்கம் , பயம் ,  கலப்பட உணவு , பழைய உணவுகள் , இரவில் கண் விழித்தல் , இரவு தூக்கத்தை தவிர்ப்பது , கெட்ட கிருமிகளின் தாக்குதல் , பாக்டீரியா மற்றும் நுண்கிருமிகள் , வைரஸ் தாக்குதல்கள் , விபத்துகள் மூலம் அதிகப்படியான இரத்தப்போக்கு , விந்து அதிகமாக விரயம் , விஷம் எடுத்துக்கொள்வது போன்றவற்றால் ஓஜஸ் ஆனது விரைவில் குறையக்கூடும்.


இப்படி குறையும்போது உடலில் உள்ள உயிர்சக்தியே இல்லாமல் போகின்றது
ஓஜோ நாசம் / சிதைவு


சுஷ்ருதசம்ஹிதா சூத்திர ஸ்தானத்தில் ஓஜோ சிதை 3 விதத்தில் நடைபெறுகிறது.


ஓஜோ விஸ்ரமம்

அறிகுறிகள்

சந்தி விஷ்லோஷனம் - அனைத்து  மூட்டுகளிலும் வலி மற்றும் மற்றும் பலகீனம்
காத்ரசத     -        விரைவில் தளர்ச்சி , களைப்பு அடைதல்
தோஷ்ச்யவன  -     உடலில் உள்ள அனைத்து தோஷங்களையும் அதிகரிக்கும்
க்ரிய சன்னிரோதம் - உடல் இயக்கங்கள் அனைத்தும் தடைபெறும்

ஓஜோ வயாபத்:

ஸப்த குருதாத்ரதா - உடல் கனமாகவும் மற்றும் இழுத்துப்பிடிப்பது
வாத சோபம் - வாததோஷ அதிகரித்து உடல் முழுவதும் கட்டிகளை உருவாக்கும்.
வர்ணபேதா - தோலில் கருந்திட்டுகள்
க்ளானி - விரைவில் சோர்வு
தந்ரா - களைப்பு , ஒழுங்கற்ற முறையில் உடல் உறுப்புகள் செயல்படும்
நிரே - அதிகப்படியான உறக்கம்


ஓஜோக்ஷயம்:

1. மூர்ச்சா - சுயநினைவு இல்லை
2. மாம்சக்‘யம் - உடல் தசை குறைப்பாடு
3. மோக - திரிபுணர்ச்சி
4. ப்ரலாப - பொருத்தமில்லாமல் பேசுவது , உளறுவது
5. மரணம் - மரணம்

இவ்வாறாக ஓஜஸ் உயிர்சக்தி நமது உடலில் குறையும் போது மரணத்தை எட்டுகிறது.


ஓஜஸை அதிகப்படுத்த செய்ய வேண்டியவை:

பால் , நெய் மற்றும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவு
யோகா , பிரணாயாமம் , உடற்பயிற்சி , மனபயிற்சி , மனதை ஒரு நிலைப்படுத்துதல்
இறைவனை வேண்டுதல்


ஆயுர்வேத மருந்துகள் :

ச்யவனப்ராஷ்
சாரஷ்வதாரிஷ்;டம்
ப்ரம்ம ரசாயனம்
அமலக இரசாயனம்
குடுச்சி ( சீந்தில் கொடி )
ஆம்லா ( நெல்லிக்காய் )
அஸ்வகந்த ( அமுக்கிரா கிழங்கு )
சதாவரி ( தண்ணீர்விட்டான் கிழங்கு )
திரிபலா ( நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் )
அஸ்வகந்தாரிஷ்டம்
பலாரிஷ்டம்
அஷ்வகந்தாதி லேகியம்
ஷீரபலா தைலம்
பலாஅஸ்வகந்தாதி தைலம்
மகாராஜாபிரசரின்யாதி தைலம்
சிலாது
மகா கல்யாணக க்ருதம்
ப்ரம்மி வடி

ஓஜஸ் –உயிர் சக்தியை –நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆலோனைக்கு
ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


Post Comment

0 comments:

கருத்துரையிடுக