உங்கள் உணவில் பிளாஸ்டிக் உள்ளதா ?
டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA
பிளாஸ்டிக் அரிசி என்று பயமுறுத்தும் இந்த தகவல்
தொழில் நுட்ப உலகம் –எது உண்மை எது பொய் என்று தெரிந்து கொள்ள மறுத்து வெறும்
பீதியை மட்டுமே பரப்புகிறது .
உங்களுக்கு தெரிந்த பிளாஸ்டிக் உணவுகள் சில
- ஆப்பிளின் வெளிப்பகுதி மெழுகு பிளாஸ்டிக்
- குர்குரே ,லேஸ்,சிப்ஸ் வகைகளில் பிளாஸ்டிக் மூல பொருட்கள் கலந்துள்ளது
- செயற்கை வாழை இலையின் மேல் பகுதி பிளாஸ்டிக் தான்
- டிஸ்போசபில் கப் –டீ,ஜீஸ் கப்பின் உள் பகுதி மெழுகு பிளாஸ்டிக்
- நூடுல்ஸ் செய்ய சில பிளாஸ்டிக் வேதி பொருட்கள் தேவை
- கலப்பட கடல் பாசி –அகர் அகர் பிளாஸ்டிக் மூல பொருளின் ஒரு பகுதி உள்ளது
- நாற்பது மைக்ரான் அளவுக்கு மேல் தான் எந்த பிளாஸ்டிக் பை உணவுகள் –உடலில் கலக்காது ..ஆனால் இங்கே எல்லா பிளாஸ்டிக் பையும் சூடான உணவோடு கலக்கும் போது பிளாஸ்டிக்கை தன்னுள் கொண்டுள்ளது ஏனெனில் எதுவும் முப்பது மைக்ரானுக்கு கீழே உள்ள பை தான்
- இட்லி அவிக்க ஹோட்டலில் பிளாஸ்டிக் தாளை பயன்படுத்து இப்போது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்
- தண்ணீர் பாக்கெட்டை பிளாஸ்டிக் கவரில் வாங்க மறுக்கும் நமது வீட்டில் பால் வருவதோ பிளாஸ்டிக் கவரில் தான்
- தாலேட் ,டாயாகிஸ்ஸின் உள்ளுக்கு தள்ளி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலும் ,உணவு குடுவையும் எல்லா பக்க விளைவுக்கும் முக்கிய காரணம்
- குழந்தைகளின் பபுள் கம்மில் பிளாஸ்டிக் மூல பொருள் அதிகம்
- பல் துலக்கும் பிரஷ் ,குழந்தைகள் வாயில் வைக்கும் விளையாட்டு பொருட்கள் எல்லாம் பிளாஸ்டிக் மயம்
- மைக்ரோ ஓவனில் வைத்து சமைக்க உதவும் பல பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகள் உணவோடு கலப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி படுத்தி உள்ளார்கள்
- ஊறுகாய் போன்ற பல அசிடிக் உணவுகள் பிளாஸ்டிக் டப்பாவில் வைப்பது உடலுக்கு மிக மிக கேடு
- பிளாஸ்டிக் உறையில் அடைத்து விற்கப்படும் அனைத்து உணவுகளும் குறிப்பிட்ட காலத்திற்கு பின் உணவோடு கலக்கிறது .
- பிளாஸ்டிக் பொருட்கள் தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது. இதில் ஏழு வகையான தாலேட்ஸ்கள் மிக ஆபத்தானவை. நாம் வாங்கும் வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியைப் பார்த்தால், முக்கோண வடிவில் எண் 1 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல பாட்டிலின் லேபிளிலும் ‘ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நாம் கவனிக்காமல் பல நாட்களுக்கு அதே பாட்டிலைப் பயன்படுத்தி வருகிறோம். மலிவான விலையில் உற்பத்தியாகும் பாட்டிலில் இருந்து டி.இ.எச்.பி (Di(2-Ethylhexyl) Phthalate (DEHP)) என்ற ரசாயனம் வெளியாகி நீருடன் கலக்கும். இது புற்றுநோய் உண்டாக்கும் காரணியாக மாறுகிறது.
- ஹோட்டலில் 40 மைக்ரான்கள் கொண்ட கவர்களில்தான் உணவை பேக் செய்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆவி பறக்க, சூடான சாம்பார், ரசம், பொரியல் என பேக் செய்யும் கவர்கள் நிச்சயம் அதிக மைக்ரான்களால் தயாரிக்கப்படுவது இல்லை. கவரில் உள்ள டயாக்சின் (Dioxin) என்ற ரசாயனம் உணவோடு சூடாகக் கலக்கும்போது வயிற்றுக் கோளாறு, பசியின்மை, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும்.
- குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கும்போது பி.பி.ஏ ஃப்ரீ (BPA Free), தாலேட்ஸ் ஃப்ரீ (Phthalates free) மற்றும் பி.வி.சி ஃப்ரீ (P.V.C free) என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். அவெனில் (Oven) சமைக்க, எவ்வளவு பெரிய பிராண்ட் தயாரிப்பாக இருந்தாலும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது. கண்ணாடிப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டுக்கு வாங்கும் தண்ணீர் கேனின் எண் 2, 4, 5 என அச்சிடப் பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நெருப்பிலிருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் தள்ளியே வைக்க வேண்டும்.
- உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் பாது காக்கும் பிளாஸ்டிக் பைகளில் பிஸ்பீனால்-ஏ (Bisphenol-A) என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். இது மூளை மற்றும் இனப்பெருக்க மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிஸ்பீனால்-A பற்றிய விரிவான ஆராய்ச்சியை கனடா மேற்கொண்டு, பீஸ்பீனால் ஏ-யை பிளாஸ்டிக்கில் சேர்க்கத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சாம்பார் பொடி முதல் பேரீச்சம் பழம் வரை பீஸ்பினால் கலந்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்கிறார்கள்.
- ஜூஸ், பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை அடைத்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு பாலியோலெஃபின்ஸ் (Polyolefins) என்று பெயர். இதில் பென்சோபீனோன் (Benzophenone) என்கிற ரசாயனம் இருக்கிறது. இது பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தைப் பாதித்து, மாதவிடாய்ப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு
பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளங்கலாம்
1 Polyethylene terephtalate (PETE or PET) – தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.
2 High density polyethylene (HDPE) – பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.
3 Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய்
பாக்கெட் மற்றும் பாட்டில்கள்.
4 Low density polyethylene (LDPE) – மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்
5 Polypropylene – தயிர் கப்,
யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.
6 Polystyrene/Styrofoam – மருந்து பாட்டில்கள், மின்விளக்கு
ஸ்விட்ச்
7 எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி
இருப்பார்கள். சிடி, கணினி பகுதிகள்,
பேபி பாட்டில் போன்றவை
இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக்
கூடாது.
·
குறைந்த மோசமான
பிளாஸ்டிக் எண்கள் – 2, 4, 5
·
குறைந்த மோசமான
பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது – 1
·
மிகவும் மோசமான
பிளாஸ்டிக் எண்கள் – 3, 6, 7
இயற்கையான வாழ்க்கை –இன்பத்தை தரும் .இயற்க்கை
மருத்துவத்தால் என்றுமே நலம் பெறுவோம் .ஆயுஷ் மருத்துவம் வாழ்க்கையை எப்படி வாழ
சொல்கிறதோ அப்படி வாழ்வோம் .
ஆயுஷ் மருத்துவமனை ஆலோசனை பெற –
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )
0 comments:
கருத்துரையிடுக