செவ்வாய், ஜூன் 13, 2017

நீங்கள் இன்னும் அடிமையா ?

உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தேயிலைக்கு ( டீ )  நீங்கள் இன்னும் அடிமையா ?


டாக்டர். அ.முகமது சலீம் ( cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .வர்தினி .,BHMS.,



நம்மை அடிமையாக்க வந்த வெள்ளைக்காரன் –கிழக்கிந்திய டீ கம்பெனி வடிவில் டீ வியாபாரம் செய்ய வந்தான் . இலவசமாக முதலில் டீ பட்டி தொட்டி எல்லாம் கொடுத்து அடிமையாக்கினான் .இந்தியாவில் தேயிலை பயிரிட மலைகளை ஆக்கிரமித்தவன் –நம்மில் செம்மறியாட்டு கூட்ட மன நிலை தெரிந்து நம்மை பிரித்தாண்டு அடிமையாக்கினான் . வெள்ளைகாரன்  வெளியேறி விட்டாலும் நாம் இன்னும் டீ காபிக்கு அடிமையாகத்தான் இருக்கிறோம் .



தேநீர் உடல் நலத்திற்கு மிகவும் கேடானது.  இது ஒரு கசப்பான உண்மை தேநீர் கேடானது என்று சொன்னால், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம்மிடத்தில் இல்லை.



இப்போது காலையில் எழுந்ததும் ஒரு கப் தேநீர் குடித்தால் தான், அந்த நாளை புத்துணர்வு பெரும் நாளாக இருக்கிறது. அப்பேற்பட்ட காலகட்டத்தில் இருக்கும்  நாம் காலை ஒரு நேரம் மட்டுமா தேநீர் அருந்துகிறோம்.? இல்லவே இல்லை.!


காலையில் கொஞ்சம் தேநீர், மாலையில் சுறுசுறுப்பாக இன்னும் வெளியில் எங்கையாவது போனால் தேநீர், விருந்தாளிகள் வந்தால் அப்போதும் தேநீர் , Function – னிலும் தேநீர்விரத நாட்களில் உணவே தேநீர் தான்.


ஆக அன்றாட வாழ்வில் தேநீர் நமது வாழ்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் தேநீர் நமது வாழ்விற்கு கேடு என்றால் அதை யாரும் நம்ப போவதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நான் 40 வருடமாக தேநீர் தானே குடித்துக்கொண்டு இருக்கிறேன் என் ஆரோக்கியத்திற்கு என்ன கேடு என்பார்கள். தேநீர் கேட்டது என்கிறீர்களே



அப்படி என்ன தான் தேநீர்- ல் இருக்கும்.

தேநீர் ல் Tanine  என்கிற கெமிக்கல் இருக்கும். இது மிகவும் கேடானது. மேலும் 30,40 வருடமாக டீ குடிப்பவர்க்கு அவர்களின் எலும்புகளின் உறுதி இழந்து காணப்படுவார்கள். மேலும் பித்தம் அதிகரிக்கும் தலைமுடி நரைக்கும். இதனால் நமக்கு மட்டுமல்ல நமது வருங்கால சன்னதியர்களுக்கு அவதிப்படுகிறார்கள். ஊக்கமுண்டாக்கும் குணம் உள்ள டீ வயிற்றில் உள்ள செரிமானத்திற்கு உதவும் சுரப்பிகளை கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து போக செய்து விடும் – Addiciton என்ற நிலைக்கு தள்ளப்பட வைக்க கல்லீரலை பாதிக்கும் பல வேதி பொருட்களும் இயற்கையாக டீ யில் உள்ளது



தேநீரை எப்படி பயன்படுத்த வேண்டும்.?


       தேயிலை சில நாடுகளில் முக்கிய  பங்கு வகுக்கிறது. ஏனினும் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் பயன்படுத்தும் அளவு  மற்றும் முறை.


அவர்கள்  தண்ணீரை  கொதிக்கவிட்டு இரண்டு தேயிலை (இலை) இரண்டு  மணித்துளிகள்  மட்டுமே  கொதிக்கவிட்டு பின்பு அருந்துவார்கள். இது நலம் பயக்கும்.


ஆனால், நாம் செய்வது தேயிலை பவுடர் தான் நமக்கு கிடைகிறது. சூப்பர் டஸ்ட் டீ என்று வெறும் கழிவே நமக்கு கிடைக்கிறது .அது உண்மையிலே தேயிலை தானா  என்று ஒரு சந்தேகம். அதிலும் பாலை சேர்த்து நாம் அருந்துகிறோம்.இவ்வாறு செய்வதால் அதில் நமக்கு என்ன ஆரோக்கியம்.


இப்போது நமக்கு கிடைக்கும் தேயிலைகள் மற்றும் அனைத்து Tea Bag ஆகிய எல்லாவற்றிலும் இருப்பது என்ன.? பூச்சிக்கொல்லி மருத்துகளே.!



பூச்சிக்கொல்லி எல்லா இடங்களிலும் உள்ளது. அதிலிருந்து நாம் தப்பிக்க, நாம் ஏதேனும் ஒரு வழியை கண்டுப்பிடிக்கிறோம். அவற்றை சாப்பிடுவதால் முன்பு அதை சுத்தம் செய்கிறோம். Organic  கடைகளில் வாங்குகுறோம் இருப்பினும் பூச்சிக்கொல்லிகள் தேயிலை வடிவமாக நாம் வீட்டுக்கு வருகிறது .



காய்கறியில் பூச்சி கொல்லி இருந்தால் வெந்நீரில் கழுவி சாப்பிடலாம் ..டீ யை எப்படி கழுவி அருந்துவது ?





லிப்டன் (Lipton), டெட்லி (Tetley),  ட்விங்கிங்ஸ்  (Twinings) ,த்ரீ ரோசஸ் ,சக்ரா கோல்ட் போன்ற உலகின் மிகவும் பிரபலமான தேயிலை பிராண்டுகளில் பதிமூன்று வகையான பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட பூச்சி கொல்லிகள் இரு நூறு மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் நிரூபிக்கிறது. ஆராய்ச்சியாளர் சுனிதா நாராயணன் இந்தியாவில் கிடைக்கிற பல தேயிலையில் உலக நாடுகள் தடை செய்யபட்ட பல பல பூச்சி கொல்லி மருந்துகள் இருப்பதை பல வருட ஆராய்ச்சிக்கு பின் உறுதி படுத்தி உள்ளார்.



புற்றுநோய்கள், இனப்பெருக்க தீங்கு மற்றும் ஹார்மோன் இடையூறு போன்ற நீண்ட கால தாக்கங்களும், தலைவலி மற்றும் குமட்டல் போன்ற குறுகிய கால தாக்கங்கள் பூச்சிக்கொல்லியால் பரந்த அளவிலான மனித சுகாதார நலன்களுடன் தொடர்புடையன என்பதை இப்போது ஆராய்ச்சி காட்டுகிறது.



மேலும் Lipton, Tetley, Twining, Red Rose, No Name, Uncle Lee's Legends Of China, King Cole, Signal ,இன்னும் பல பல போன்ற தேயிலையில் அதுகமான பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக நாம் அறிய வேண்டும்.


அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் :-


  • தேநீர் பழக்கத்தை மாற்ற வேண்டும்.
  • பால் சேர்க்காமல் தேநீர் அருந்துவது நல்லது.
  • தேயிலை பவுடர்கள் வாங்காமல் தேயிலையாக வாங்குவது நலம்.
  • ஒரு நாளைக்கு ஒரு வேலை மற்றும் அருந்தலாம்.
  • வெறும் வயிற்றில் டீ யை அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது
  • காலையில் கருப்பு Tea (Black Tea) மாலையில் Green Tea அருந்துதல் உடலுக்கு நலம். ஆனால் அது பூச்சி கொல்லி இல்லாததாக இருக்க வேண்டும்
  • சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி உபயோகிக்கலாம்.



தேநீருக்கு பதில் நாம் வேறு என்ன அருந்தலாம்.?


தேநீர் பழக்கத்தை மாற்ற தேநீருக்கு பதிலாக பழச்சாறுகள், இளநீர், கம்பு மற்றும் கேழ்வரகு கூழ், பதநீர், காய்கறி மற்றும் பழகலவை, மோர் போன்றவை அருந்தலாம்.


மூலிகை டீ கான ஒரு பார்முலா .

சுக்கு ,மிளகு ,திப்பலி , அக்கிரகாரம், சிற்றத்தை,அதிமதுரம் ,நறுக்கு மூலம் ,மல்லி ,கிராம்பு ,ஏலம் ,சோம்பு  சேர்த்து மூலிகை டீ தயாரிக்கலாம் ..இது உடலுக்கு ,செரிமானத்திற்கு நல்லது ,உற்சாகமும் தரும் .


இவ்வாறு அருத்துவதன் மூலம் நாம் ஆரோக்கியமான வாழ்வினை பெறலாம். டீ அடிமை தனத்தில் இருந்து விடு படுவோம் .உடல் ஆரோக்கியம் பேணிட தினம் தினம் ஆயுஷ் மருத்துவ அறிவியல் சொல்லும் இயற்கை நல வாழ்க்கை வாழுவோம் .

ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )




Post Comment

1 comments:

ர. சோமேஸ்வரன் சொன்னது…

அனைவருக்குமான அவசியமான நல்ல தகவல்களுடன் கூடிய பதிவு இது. "தேநீர் நமக்கு அறிமுகம் ஆகும் முன்பு தேன் கலந்த நீரை குடித்து கொண்டிருந்தோம் அதுதான் தேநீர் என்று" எங்கோ கேள்விப்பட்டது, தெளிவுப்டுத்தினால் நன்று.

கருத்துரையிடுக