செவ்வாய், ஜூன் 27, 2017

நீங்கள் அடுத்த வீட்டின் அந்தரங்கத்தை எட்டி பார்பவரா ?

உங்களது வீட்டில் நடப்பவற்றை யாராவது திருட்டுத்தனமாய் பார்க்க அனுமதிப்பீர்களா ?


டாக்டர் .அ .முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA


ஒட்டு கேட்பது குற்றமா ?

மறைந்து இருந்து நோட்டம் விடும் பழக்கம் பெரிய நோயா ?


ஒரு செயல் அதை  செய்யும் போது குற்ற உணர்வு உங்களுக்கு வரும் என்றால் அது ஒரு தவறாகத்தான் இருக்க முடியும் . மனித உணர்வுகள் புனிதமானவை ..மீடியாக்கள் –டிவி நிகழ்சிகள் அனைத்தும் நாம் செய்வது குற்றம் என்ற உணர்வுக்கே வர முடியாமல் தொடர வைத்து விடுகிறது .
இப்போது நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக நூல் பக்கத்தில் உள்ள வீடியோக்களை எதேச்சையாக பார்க்கும் போது கவனித்த விஷயம் –அந்த வீடியோவின் பார்வையாளர்கள் கிட்டத்தட்ட எழு லட்சம். நான் அந்த தொலை காட்சியின் டி ர் பி யை பற்றி கணக்கு எடுக்கவே இல்லை . நம்மை அடுத்த வீட்டை எட்டிபார்க்கும் ஒரு மிக மோசமான் ஒரு கீழ்த்தரமான எண்ணத்தை நமது மனதில் குப்பையாக விதைக்கபோகிறோம் .

நீங்கள் மன நோயாளியாக மாற விரும்புவீர்களா ?

 • அடுத்தவரை ஒப்பிட்டு வாழ்வதே நமது எல்லா மன நோய்க்கும் காரணம்


 • மற்றவரின் அந்தரங்கம் அறிந்து கொள்வது சரி என்று பட கூடிய மோசமான மன நிலைக்கு தள்ளபடுவோம்


 •  கீழ்த்தரமான மன நிலையை மாற்றாமல் நாம் செய்யும் தவறுக்கு நாம் வக்கீலாகவும் ,அடுத்தவர் தவறுக்கு நீதிபதியாகவும் மாறி –குறையை ஒத்து கொள்ளாத மன நிலைக்கு தள்ளபடுவோம்


 • அடிமையாகி விடுவோம் – நம்மை நமது மன நிலையை தூய்மையாக்க முடியாது என்ற நிலைக்கும் –அடுத்து என்ன ? என்று நமது நேரத்தை குப்பையாக்கி அடிமையாய் கிடப்போம்


 • பாசம் ,பணிவு ,அன்பு ,உறவுகள் என்ற சொற்கள் இனி கனவு உலகத்தில் மட்டுமே இருக்கபோகிறது .நிகழ் உலகத்தை மறந்து  நிழல் உலகத்தில் மீள முடியா மன நோயாடு வாழ்வோம்


 • உயிர் போகும் அளவுக்கு கண் முன் பிரச்சனை இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் நமது கவனம் வேறு எதை நோக்கியோ பயணிக்கும் ..


 • நமது பாரம்பரியத்தில் –கலாசார அடையாளம் எல்லாம் இழந்து வெறும் சதை பிணங்களாய் வாழ்வோம் . நீச்சல் உடை அணிந்து நடு வீட்டில் இருக்கலாம் என்ற மேற்கத்திய கலாசாரம் இதன் மூலம் புகுத்த படும் போது நமது சுய அடியாளம் இழந்து பரதேசிகளாய் மாறிப்போவோம்


 • காசுக்காக எதை செய்யவோம் துணிவோம் ..பணம் எல்லாம் செய்யும் என்ற மன அமைதி இல்லா நிலைக்கு தள்ளபடுவோம்


 • Moral Value , Attitude எல்லாம் தலை கீழாய் மாறிபோகும் –வாழ்க்கை சீரழிந்து போகும்


 • இது என்னை பாதிக்காது என்று உங்களது மன நிலைக்கு மட்டும் தான் தள்ள படுவீர்கள்


 • சம தோஷ சம தாது ..பிரசன்ன ஆத்மேந்திர்ய மன என்ற –ஆரோக்யமான மன நிலை என்று ஒன்று எதுவும் இருக்க போவதில்லை ..நமது மனம் கேவலமான மன நிலைக்கு வந்து அதுவே இல்ல உடல் மன நோய்க்கும் காரணமாய் மாறி விடும்


பொழுதுபோக்கு நமது ஆயுள் முழு பொழுதையும் போக்கிவிடும் பயன் இல்லாமல் –நோயுடன் ..நீங்கள் இந்த வலையில் சிக்க விரும்புகிறீர்களா ?

நிகழ் காலத்தில் –உணர்வோடு –அமைதியோடு வாழ இயற்கை சித்தாந்தகளை கடைபிடிப்போம் .மெய் உணர்வோடு வாழ்வோம் .
இயற்கை ஆயுஷ் மருத்துவம் மற்றும் மன நல ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


Post Comment

0 comments:

கருத்துரையிடுக