புதன், ஆகஸ்ட் 26, 2015

மூலிகை போலி கதைகள் -உயிரையே பறித்து விடும் -எச்சரிக்கை பதிவு

எங்கு திரும்பினாலும் இலவச மருத்துவ குறிப்புகள் ..
Facebook,watsapp ,net,blog எங்கு திரும்பினாலும் இப்போது மருத்துவ குறிப்புகள் குவிந்து கிடக்கிறது ..எது உண்மை ..எது பொய் ..யார் எழுதியது ..இந்த குறிப்புகளின் உண்மை தன்மை என்ன ?

நிறைய போலி மருத்துவர்களும்
நிறைய போலி மருத்துவ குறிப்புகளும்
நிறைய  போலி மருத்துவ இலவச ஆலோசனைகளும் ..உயிரையே பதித்து விடும் ..

இந்த பதிவு யாருடைய மனத்தையும் புண் படுத்தும் நோக்கில் எழுதும் நோக்கில் எழுத பட்டதில்லை ..
இந்த பதிவை எழுதியவரும் தெரியாமல் எழுதி இருக்கலாம் ..ஆனால் எவ்வளவு பெரிய தவறு அது ..ஒரு வேளை இதை எந்த நோயாளியாவது அவர் சொன்னது போல் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆயிருக்கும் ..அவரது லிங்க்
https://www.facebook.com/photo.php?fbid=282382635298597&set=a.118190841717778.1073741825.100005805882875&type=1&fref=nf&pnref=storyஇந்த பதிவர் ..மிக அற்புதமான மருந்தை பற்றி எழுதியுள்ளார் ...

அகத்தியர் குழம்பு ..இது ஒரு சித்த மருத்துவத்தின் மிக மிக அற்புதமான மருந்து ..எல்லா நோய்க்கும் இது மருந்தாகும் ...ஆனால் இந்த மருந்தை நோயாளிக்கு கொடுக்க வேண்டிய அளவு ..ஒரு மிளகு எடை அல்லது அதிக பட்சம் நான்கு மிளகு எடை அளவு -அதாவது 200 mili gram ,500 mili gram(mg) வரை மட்டும் தான் ..அனுபானம் மாற மாற அதற்கு தக்க மிக சிறந்த பலனை தர வல்லது ..இந்த மருந்தை கொடுத்தால் நன்கு வயிறு சுத்தமாகும் அதாவது பேதியாகும் ..வயிற்றின் கழிவுகள் அனைத்தும் போகும் ..
எந்த மருத்துவரும் பத்து கிராம் அளவுக்கு கொடுப்பதில்லை ..கொடுத்ததுமில்லை ..கொடுக்க போவதும் இல்லை ..நீர் வற்றி உயிர் இழக்கும் அபாயம் உள்ளது ..இந்த மருத்துவம் அறியாத இந்த பதிவர் மூன்று வேளை அதிகபட்சம் இருபது கிராம் கொடுக்க சொல்கிறார் ..என்ன நடக்கும் என்று நினைக்கவே மனம் பதறுகிறது ..


அவரது பதிவை கிட்டதட்ட 115 share செய்துள்ளார்கள் என்பதும் பலர் like and comment போட்டுள்ளார்கள் என்பதும் கூடுதல் தகவல்


இதே போல் பல போலி பதிவுகளை மக்கள் எச்சரிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இதை எழுதுகிறேனே தவிர ..யாரையும் புண் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லவே இல்லை என்று மீண்டும் ஒரு முறை பதிவு செய்கிறேன் ...


உதாரணம் இரண்டு .


இந்துப்பு மூன்று வேலை சமைத்து சாப்பிட்டால் பழுதான கிட்னி பழைய நிலைக்கு திரும்பும் –டயாலிசிஸ் தேவை இல்லை என்கிறது அந்த பதிவு .

உண்மையில் இந்துப்பு நல்ல உப்பு என்றாலும் கூட –கிட்னி பெயிலியர் நோயில் நோயின் தீவிர தன்மைக்கு ஏற்ப முற்றிலும் எந்த உப்பையும் (இந்துப்பையும் சேர்த்து ) தான் தவிர்க்க வேண்டும். முற்றிலும் பழுதான கிட்னி உள்ளவர்கள் இந்துப்பை நோய் சரியாகும் என்று சாப்பிட்டால் என்ன ஆகும் ? உண்மையில் மிக மிக மோசமான உடல் பாதிப்பை ஏற்படுத்தி உயிர்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் –எந்த ஒரு ஆதாரம் இல்லாத உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த கருத்தையும் தயவு செய்து ஷேர் செய்யாதீர்கள் .எழுதாதீர்கள் . எதோ ஒருவர் சரியானார் என்று சப்பை கட்டும் –ஒரு நோயாளிக்கு சரியானாதால் எல்லோருக்கும் சரியாகும் என்று தவறாக எழுதாதீர்கள். ஆயிரக்கணக்கான கிட்னி பெயிலியர் நோயாளிக்கு சிகிச்சை செய்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன் –எந்த உப்பும் கிட்னி பெயிலியருக்கு உதவாது ..

அனுபவ அறிவும் ,மனிதாபிமானம் உள்ள , மருத்துவ அறிவு உள்ள தக்க மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள் .
குறிப்பு ஒன்று -வீண் தர்க்கத்தை தவிர்க்க இந்த பதிவுக்கு நான் பின்னோட்டம் இட போவதில்லை
குறிப்பு இரண்டு – நீங்கள் தவறு இழைத்து விட்டீர்கள் என்று சுட்டி காட்ட இந்த பதிவு இல்லை –தவறு இருந்தால் இக்கணமே வருத்தம் தெரிவிக்கிறேன்

தரமான ஆயுர்வேத & ஆயுஷ்  மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை     9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)Post Comment

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

தற்கொலைக்கு தூண்டுமா மன அழுத்த மருந்துகள் ? -இலவச CD பெற வேண்டுமா ?

மனித உயிர்களை ஒட்டு மொத்தமாகவும் ,மிகவும் வேகமாகவும் ,யாருக்கும் தெரியாமல் மறை முகமாகவும் பாதிக்கிற தொற்றா நோய்கள் தான் இப்போது மிக பெரிய சவால் ..

வாழ்வியல் நோய்கள் ..வாழ்க்கை முறை மாறியதால் வந்த நோய்கள் அனைத்திற்கும் அடிப்படை தூக்கமின்மை . தூக்கம் தொலைத்த இரவுகள் இப்போது எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது என்பதில் யார்க்கும் சந்தேகம் இல்லை..

டாக்டர் ..எனக்கு சரியாக தூக்கம் வர மாட்டேன்கிறது ..என்றவுடன் நமக்கு ஆங்கில மருத்துவர் Alprozolam என்ற மன அழுத்தத்தை சரியாக்கும் தூக்கம் உண்டாக்கும் மருந்தை நமக்கு எழுதுவார்  ..இந்த மருந்து Trika 0.5, Alproz 0.5, Restyl 0.5 என்று பார்மஸியில் இந்தியாவில் எங்கும் எளிதாக கிடக்கிற மருந்தாக உள்ளது ..

கிட்டத்தட்ட ஆறில் ஒரு நபருக்கான மருத்துவ சீட்டில் இந்த மருந்து நிச்சயம் இடம் பெறுகிறது என்கிறது ஒரு ஆய்வு .மெடிகலில் வருட கணக்கில் இந்த மருந்தை அடிமை போல் சாப்பிடுவார்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டும் என்கிறது இன்னொரு ஒரு ஆய்வு ..

இந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால் பல மோசமான பக்க விளைவுகள் நிச்சயம் ..தற்கொலை மனப்பான்மையை அதிகபடுத்தி  தற்கொலை செய்ய வைத்திருக்கிறது என்பது நிருப்பிக்கபட்ட உண்மையான ஆராய்ச்சி ..
IT மற்றும் bpo நிறுவனங்கள் வந்த பிறகு நம் வாழ்க்கைமுறை முன்போல் கிடையாது. அதிக வேலை செய்தால், இன்னும் அதிக பணம் என ஓடியதன் விளைவு, மன அழுத்தம் வாழ்வின் முக்கியப் பகுதியாக உருவாகியது. உலகளவில், ஆரோக்கியக் குறைபாடுகளின் தலையாயக் காரணமாக மன அழுத்தம் மாறியுள்ளது. ஆனால், இந்த மன அழுத்தத்துக்கான மருத்துவமுறைகள் இந்தியாவில் முறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. 10-ல் 8 மன அழுத்தத்துக்கான மருந்துகளும், 10-ல் 7 மன நோய்களுக்கான மருந்துகளும் முறையான அனுமதி பெறாதவை என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?

அனுமதி பெற்றிருந்தாலும் எவ்வளவு பக்க விளைவுகள்  இந்த மருந்துகள் .
மன நல மருத்துவமனைகளின் சிகிச்சைகள் எப்போதும் மன நோயாளியாகவே ஆயுள் முழுமைக்கும் வைத்திருக்கும் கொடுமைகள் எத்தனை பேருக்கும் தெரியும் .ECT என்னும் எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மென்டுகள்  மனிதர்களை வதைக்கும் மிக பெரிய கொடுமை.


சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகள் அனைத்தும் மிக பெரிய பக்க விளைவுகளை கொண்டவை 


சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகள் அனைத்தும் நிறுத்த முடியாத ஆயுள் முழுவதும் மன நோயாளியாக வாழ வைக்கும் சக்தி கொண்டவை .

இந்த விஷயத்தை அறிவியல் பூர்வமாக -ஆராய்ச்சி பூர்வமாக அணுகும் அமெரிக்காவை சார்ந்த தொண்டு நிறுவனம் ..சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகளின் பக்க விளைவுகளை உலகெங்கும் எடுத்து சொல்கிறது ...


800 பில்லியன் வர்த்தகம் கொண்ட சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகள் அனைத்தும் மக்களை சாவுக்கு தான் அழைத்து செல்கிறது என்கிறது இந்த ஆராய்ச்சி நிறுவனம் .

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயர் 

மனதை பதற வைக்கும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்ள இலவச CD ஐ நாம் அமரிக்காவில் இருந்து பெறலாம் ..
அமெரிக்கா லாஸ் ஏஞ்சேலில் இருந்து இலவச CD பெறலாம் .


மன அழுத்த நோய்க்கு ..
பக்க விளைவுகள் இல்லாமல் நல்ல உறக்கத்திற்கு ..ஆயர்வேத மருந்துகள் பற்றி வரும் காலங்களில் பார்போம்

Post Comment

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

மருத்துவம் வளர்கிறது -நோய்கள் குறைந்தபாடில்லை -ஏன் ?

மருத்துவம் வளர்கிறது -நோய்கள் குறைந்தபாடில்லை -ஏன் ?திரும்பிய பக்கம் எல்லாம்   பார்மசி -கிளினிக் -மருத்துவமனைகள் -நோய்கள் குறைந்து விட்டதா ? இல்லையே ..வயிற்றில் உள்ள  குழந்தை முதல் மிகவும் வயதான  பெரியவர் வரை -நோய் தனது ரூபத்தை காட்டி கொண்டே இருக்கிறது ..மருத்துவம் வளர்ந்தால் நோய்கள் குறைந்து அல்லவா இருக்க வேண்டுமே ?..நோய் என்ன என்றே தெரியாமல் மருந்தை தேடும் நிரந்தர நோயாளிகள் ..
சிறிய நோய்க்கு பர்ஸை கரையவைக்கும் தேவையில்லா பரிசோதனைகள் ..
எல்லா அறிவையும் கூகிள் தந்துவிடும் என்று தேடி தெரிந்து கொள்ளும் அபாயகரமான மருத்துவ அறிவுகள் ..
கோடி கணக்கில் முதலீடு செய்த மருத்துவ வியாபாரிகள் ..


இப்போது
ஆயுர்வேதம் என்றால் மசாஜ்
ஆயுர்வேதம் என்றால் சோப் ,ஷாம்பூ ,தைலங்கள் ..

அனால் அது உண்மை இல்லையே ..


ஆயுர்வேதம் சொல்வது எளிமையானது ..
ஆயுர்வேதம் சொல்வது அறிவியல் பூர்மானது ..
ஆயுர்வேதம் சொல்வது வாழ்க்கை முறை கல்வி ..
ஆயுர்வேதம் சொல்வது எல்லோருக்கும் ஆரோக்கியம் ..

சரி ..ஆயுர்வேதம் அறிவோம் இனி ..

Post Comment

வியாழன், ஆகஸ்ட் 20, 2015

தொடர்ச்சியாக மீண்டும் எழுதப் போகிறேன்ஆயுர்வேதம் அகிலம் அறிய வேண்டும் 
இந்திய மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் -இதுவே எனது கனவு .....


போலி மருத்துவர்கள் ..
போலி மூலிகை கதைகள் ...
போலியான மருந்துகள் ...
பணத்திற்கு பின் ஒளிந்திருக்கும் போலி முகங்கள் ..

எதிலும் உண்மை இல்லை ..
எதிலும் தெளிவு  இல்லை 
எதிலும் நேர்மை இல்லை 
எதிலும் அறம் இல்லை ....


காபி அடிக்கும் வலை தளங்கள் ..
காபி அடிக்கும் போலி மருத்துவர்கள்..


உணர்வுகள் மழுங்கி போய் ...
எழுவே வேண்டாம் என்று வெறுத்து போய் ...


என் கடமை பிணி நீக்குவதே ..
சேவையே பிரதானம் ..
நெல்லுக்கு இழைத்த நீர் ....புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது  போல் ...
களைக்கு நீர் போவதை தடுக்க இயலாது என்று எனக்கு நானே தேற்றிகொண்டவனாக ..
நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ..தொடர்ச்சியாக ஏக இறைவனின் நாட்டப்படி எழுதப்போகிறேன் ..
Post Comment

புதன், ஆகஸ்ட் 05, 2015

இராஜபாளையத்தில் கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை 03/08/2015 திறப்பு விழாராஜபாளையம் கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை கிளையை  03/08/2015 திங்கள் மாலை இராஜபாளையம் சிறப்பு ஹோமியோபதி மருத்துவர் .மு . தலமலை BHMS  அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது .

திறப்பு விழாவுக்கு பல துறை மருத்துவர்கள் ,மருந்து விற்பனை பிரதிநிதிகள் ,நண்பர்கள் ,மற்றும் பல நல்ல உள்ளங்கள் கலந்து கொண்டார்கள் .அனைவர்க்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

Post Comment

இராஜபாளையத்தில் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை கிளை 03/08/2015 திறப்பு விழாஆயுர்வேதம்  மற்றும் ஆயுஷ் மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தணியாத கனவுடன்  சேவை ஒன்றையே குறிகோளாக  கொண்ட நமது மருத்துவமனையின் நான்காவது கிளை ராஜபாளையத்தில் 03/08/2015 திங்கள் மாலை முதல் செயல்பட துவங்கி உள்ளது ..

திறப்பு விழா சில புகைப்படங்கள்


ராஜபாளையம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை 03/08/2015 திங்கள் மாலை இராஜபாளையம் சிறப்பு ஹோமியோபதி மருத்துவர் .மு . தலைமலை BHMS  அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது .திறப்பு விழாவுக்கு பல துறை மருத்துவர்கள் ,மருந்து விற்பனை பிரதிநிதிகள் ,நண்பர்கள் ,மற்றும் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை உறுப்பினர்கள் மற்றும் பல நல்ல உள்ளங்கள் கலந்து கொண்டார்கள் .அனைவர்க்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

Post Comment