கலப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 02, 2017

உங்கள் வீட்டு பால் –உங்கள் நலத்திற்கு கேடா ? MILK ADULTERATION

உங்கள் வீட்டு பால் –உங்கள் நலத்திற்கு கேடா ?

டாக்டர். அ.முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA.,
டாக்டர். வர்தினி .,BHMS.,

MILK  ADULTERATION

பிறந்த குழந்தை முதல் முதியவர் வரைஎல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. ஏதோ ஒரு காரணத்தால் சிலகுழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போனால்,அதற்கு மாற்று பசும்பால் தான்.கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும்,குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும் பாலில் மட்டும்தான் இருக்கிறது. பால்,மாட்டின் ரத்தம் இல்லை.அது தாவரங்களின் உயிர்ச்சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது. இப்படிப்பட்ட பாலில் கலப்படம்என்றால் ஆச்சரியம் தான்.


இப்போது கிடைக்கிற பால் 64 % கலப்பட பால் என்கிறது ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்


உலகளவில் பால் மிக முக்கிய பங்கு வகிக்கிறது பல சத்துக்களை அடக்கிய பாலில் பல்வேறு கலப்படங்கள் உள்ளது. மனிதர்கள் முதல் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வரை பால் ஒரு அத்தியாவசிய உணவாகும். எனினும் இதில் பல்வேறு கலப்படங்கள் இருந்தாலும் பிறந்த குழந்தைக்கும் சரி,செல்லப்பிராணிகளுக்கும் சரி பாரபட்சம் பார்க்காமல் ஒரே பால் தான் நாம் தருகிறோம்.ஏன்னென்றால்,பாலில் என்ன கலப்படம்? தண்ணீர் தானே கலக்கிறார்கள் அப்படி நினைக்கும் நமக்கு பல அதிர்ச்சியான விஷயங்களை இங்குநான் தெரியப்படுத்துகிறேன்.



பால் கலப்படத்தால் அதன் தரம் மட்டும் குறையாமல்,சுகாதாரத்தை பாதிக்கும் அபாயம் பல உள்ளது. பால் மற்றும் பால் உற்பத்திகளில் உள்ள பாலுணர்வை கொண்டிருக்கும் பால்,புரதங்கள், மோர் புரதங்கள், மெலமைன் மற்றும் யூரியா, காய்கறி அல்லது விலங்கு கொழுப்புகள், மற்றும் பல பொருட்களை பாலில் கலந்துள்ளனர்.



பாலில் தண்ணீர் கலப்பது மிக வழக்கமே.! பாலில் தண்ணீர் சேர்ப்பது மூலம் அதன் ஊட்டச்சத்து குறையாது. மாறாக அசுத்தமான தண்ணீர் சேர்ப்பதன் மூலம் சுகாதார பிரச்சனைகள் பல ஏற்படக்கூடும்.

பாலில் எதை சேர்த்து கலப்படம் செய்கிறார்கள் ?

முக்கியமாக சோப்பு,கொழுப்பு, ஷ்டார்ச்,சோடியம்,ஹைட்ராக்ஸைடு (காஸ்டிக் சோடா),சர்க்கரை, யூரியா,குளம்நீர், உப்பு,மால்டோடெக்ஸ்ட்ரிக்,சோடியம் கார்போனைட்,ஃபார்மல்லின் மற்றும் அம்மோனியம் சல்பேட் ஆகியவையும் பயன்படுத்தடுகின்றன.



பாலில் சோப்பு பயன்படுத்துவதால் இரைப்பை குடல் சிக்கல்கள் ஏற்படுத்தும். அதன் அதிகார அளவை உடல் திசு சேதப்படுத்தி புரதங்களை அழிக்கவும் முடியும். பிற செயற்கை கூறுகள் குறைபாடுகள்,இதய பிரச்சனைகள்,புற்றுநோய் அல்லது மரணம் கூட ஏற்படலாம்.

கலபட பாலினாலே தான் இந்தியா நீரழிவு நோயில் உலக அளவில் முதல் இடம் வகிக்க போகிறது .


யூரியா, காஸ்டிக் சோடா மற்றும் போலாசலின் பயன்படுவதால் உடனடி விளைவாக காஸ்ட்ரோநெரெட்டிஸ் (Gastroenteritis), மற்றும் நீண்டகால விளைவுகள் மிகவும் தீவிரமானவை.



வீட்டிலேயே பாலில் கலப்படம் கண்டறிய எளிய வழி :-



பாலில் தண்ணீர்  கலந்துள்ளதை என்று கண்டறிய :-

பளபளப்பான சாய்வான மேற்பரப்பில் ஒரு துளி பாலை விடுவதால், பால் துளி மெதுவாக ஒரு வெள்ளை பாதையாக போனால் அது தூய பால், மாறாக விட்ட உடனடியாக ஓட்டம் விட்டால் பாலில் தண்ணீர் கலந்துள்ளது.


பாலில் ஸ்டார்ச் கலந்துள்ளதை என்று கண்டறிய :- 

பாலில் சிறு துளிகள் அயோடின் சேர்க்கவும், பாலின் நிறம் நீலமாக மாறினால் அதில் ஸ்டார்ச் கலந்துள்ளது.


பாலில் யூரியா இருப்பதை அறிய :- 

ஒரு சோதனை குழாயில் ஒரு டீஸ்பூன் பால்எடுத்து அதில் சோயாபீன் அல்லதுஅஹார் பவுடர் அரை  டீஸ்பூன் சேர்க்கவும்,பின்பு அதை நன்றாக கலக்கவும். 5நிமிடங்களுக்கு பிறகு அதில் சிவப்பு லிட்மஸ் காகிதத்தை முக்க வேண்டும் அரை நிமிடத்திற்கு பிறகு காகிதத்தை அகற்றவும். பால் சிவப்பு நிறத்தில் இருந்து நீல நிறத்தில் மாறினால் பாலில் யூரியா கலந்துள்ளது என்று அறியலாம்.


பாலில் சோப்பு இருப்பதை அறிய :-

பாலையும்,தண்ணீரையும் சம அளவில் எடுத்து குலுக்கவும், பின்பு அதில் நுரை போன்று தென்பட்டால் பாலில் சோப்பு கலந்துள்ளது என்று அறியலாம்.


நாம் அருந்தும் பால் செயற்கையானது என்று சந்தேகம் இருந்தால். 

அந்த பாலை இரு கைகளுக்கு இடையில் வைத்து தேய்க்கும் பொழுது நுரையாகவோ அல்லதுசூடாக்கினால் மஞ்சளாகவும் மாறும்.மேலும் அந்த பாலை சுவைத்தால், சுவைக்கு பின் கசப்பானதாக இருக்கும். (வண்ண நீர்,பெயிண்ட், எண்ணெய்,அல்காலி, யூரியா மற்றும் சோப்பு முதலியன செயற்கையான பாலில் சேர்க்கப்படுகிறது).


பாலில் யூரியா உள்ளதை கண்டறிய 

யூரேஸ் பட்டைகளை பயன்படுத்தி பால் எளிதில் சோதிக்கப்படலாம். 
யூரேஸ் கீற்றுகளில் உள்ள வண்ண விளக்கப்படம் பாலில் உள்ள யூரியா அளவை சரியாக காட்டுகிறது.


பாலில் க்ளுகோஸ்  உள்ளதை கண்டறிய 

Diacetric துண்டை பாலில் 30 விநாடி முதல்1 நிமிடம் வரை பாலில் முக்க வேண்டும். அந்த துண்டு நிறம் மாறினால் மாறினால் பாலில் குளுக்கோஸ் உள்ளது என்று அறியலாம். துண்டுகள் நிறம் மாறவில்லை என்றால் க்ளுகோஸ் இல்லை .



இவ்வாறு நாம் வீட்டிலேயே பாலில் என்னென்ன கலப்படம் உள்ளது என்று அறியலாம். மேலும் இதை தவிர்த்து பாலில் வனஸ்பதி,ஃபார்மலினைஅம்மோனியம் சல்பேட்,உப்பு, ஹைட்ரஜன் ஃபெராக்சைடு,சர்க்கரை, சோடியம் பைகார்பனைட்,ஃபோரிக் அமிலம்,கொழுப்பு ஆகியவற்றை கண்டறிய ஆய்வகங்களில் சோதனை நடத்தி அறியலாம்.


பால் கலப்படத்திற்கான முக்கிய காரணம் நிதி ஆதாயம் ஒன்று மட்டும் கிடையாது உலகெங்கிலும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு போதுமான அளவில் சரிவர பாலை விநியோகிக்க முடியாத காரணமும் கூட தான். போதுமான கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்கம் இல்லாததால் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இந்த சிக்கல் தீவிரமாக உள்ளது.


வெளுத்தல்லாம் பால் இல்லை –நாட்டு மாடு வளர்ப்பவர்களை ஆதரிப்போம் . நம்மால் எதை உறுதியாக நம்ப முடியோமோ அந்த பாலை பயன்படுத்துவோம். வெள்ளையன் வெளியேறி விட்டான் நாம் இன்னும் அவன் கொடுத்த டீ யில் அடிமையாகத்தான் இருக்கிறோம் . நோய்கள் உண்டாக்கும் கலப்பட பாலை அருந்துவதை விட பாலை தவிர்த்தலே நல்லது .

இயற்கை மருத்துவத்தில் பாலை தவிர்க்க சொல்கிறது .இயற்கை –ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)


கலப்படம் இல்லா உலகுக்கு விழிப்புணர்வே முதல் படி ..உங்களால் முடிந்தால் இந்த பதிவை பகிருங்கள்


Post Comment

புதன், ஏப்ரல் 12, 2017

உடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள் –ஜூஸ்கள்

உடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள் –ஜூஸ்கள்

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure) .,BAMS.,M.Sc.,MBA

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்கும் என நினைக்கிற வீட்டில் எல்லாம் ஜீஸ் பவுடர் ஒரு வர பிரசாதம், முன்பெல்லாம் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் டப்பா டப்பாவாக வாங்கி வர சொல்லி வீட்டில் எல்லோரும் பருகுகிற பானமாக இருந்த இந்த டே...  ஜீஸ் –இப்போது எல்லா மளிகை கடைகளிலும் எளிதாக கிடைக்கிறது .

சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த ஜீஸ் பவுடரை சாப்பிடாதவரே இருக்க முடியாது ..

உண்மையில் இது என்ன என்று பார்த்தால் .
அழகான பெயின்ட் பவுடர் என்று நாம் அதில் உள்ள சேர்மான பொருட்களை லேபிளை பார்த்தாலே நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்

குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி குறைவு முதல் ,ஞாபக மறதி, பசியின்மை போன்ற சிறிய நோய் முதல் புற்று நோய் வரை வர வைக்க கூடிய பல தீங்கு செய்யும் பொருட்கள் அதனில் உள்ளதை லேபிளை படித்தாலே நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும் .


ஜூஸ் பவுடர்கள் –ஜூஸ்கள் .

பல ஆண்டுகாலம் இந்தியா மற்றும் எல்லா நாடுகளிலும் பல குளிர் பானங்கள் கிடைக்கபெற்றாலும் அவைகளில் டே...  ,ர......போன்ற பவுடர் ஜீஸ் வகைகள் எல்லோருடைய வீட்டிலும் எளிதாக ஆக்கிரமித்துள்ளது . சமிபகாலத்தில் நடந்த ஓர் ஆராய்ச்சியில் இந்த ஜூஸ் பவுடர்களில்  பல தீங்கு பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவற்றுள் சிட்ரிக் அமிலம் Trisodium Citrate, Tricalcium Phosphate, ஸாந்தன் கம், கம் அரபு, பீட்டா-கரோட்டின், போலிக் ஆசிட் மற்றும் பல.


இந்த கட்டுரையில் ஜூஸ் பவுடர்கள்  –அதிலும் டே....க்,   ர..  பற்றி சில தீங்கான உண்மைகளை பற்றி பார்ப்போம்.


ஜீஸ் பவுடர்களில்  சேரக்கூடிய சேர்மான பொருட்கள் ( அவர்கள் லேபிளில் குறிப்பிட்டது போல் )

             சர்க்கரை

             சிட்ரிக் அமிலம்

             Trisodium Citrate

             Tricalcium Phosphate

             ஸாந்தன் கம்

             கம் அரபு,

             சோடியம் Carboxymethyle Cellulose

             வைட்டமின் சி

             உப்பு

             நிறங்கள் டைட்டானியம் டை ஆக்சைடு / Tatrazine / Sunset மஞ்சள் FCF

             பீட்டா-கரோட்டின்

             போலிக் ஆசிட்

             வைட்டமின் B2


1.            சர்க்கரை

ஜீஸ்களில்  முக்கிய மூலப்பொருள் சர்க்கரை. சர்க்கரை நமது உடல்த்திற்கு எவ்வளவு கேடு என்பது நமக்கு தெரியும். அதனால் அதை பற்றி பேச அவசியம் இல்லை..


2.            சிட்ரிக் அமிலம்

பொது பல் மருத்துவ அகாடமி படி, ஹைட்ரோ க்ளோரிக் அல்லது கந்தக அமிலம் விட சிட்ரிக் அமிலம் பல் எனாமலுக்கு மிகவும் கேடு.இப்போது கிடக்கிற இந்த சிட்ரிக் அமிலம் முழுக்கு முழுக்க ஆய்வகத்தில் தயாரிக்கபடும் ஒரு வேதியியல் கலவை .

3.            Trisodium Citrate

அளவுக்கு அதிகமான ஓர் சேர்க்கை உறுப்பான Trisodium Citrate உபயோகிப்பதனால் சிறுநீரக சீயழிலப்பு ஆபத்து அதிகரிக்கபடுகிறது. மேலும் சில மக்களுக்கு ஓவ்வாமை எதிர்வினைகளுக்கும் ஏற்படலாம். நிச்சயமாக கர்ப்பிணி பெண்களும் ,குழந்தைகளும் இதை பயன்படுத்தவே கூடாது .

4.            Tricalcium Phosphate


இது ஒரு ரசாயன் சேர்மம் ஆகும். ஜீஸ்களில்   சேர்க்கப்படும் Tricalycium பாஸ்பேட், பெரும் அளவில் சொப்புகள், சோப்பு பவுடர் மற்றும் பிற சுத்தம் செய்யப்படும் பொருட்களில் அதிகமாக பயன்படுத்தபடுகிறது.

இதனால் சிறுநீர் அதிகரித்தல், உலர் வாய், தாகம் அதிகரித்தல், பசியின்மை, மலச்சிக்கல், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். புற்று நோய் கூட உருவாகும் .மூத்திரப்பை சார்ந்த நோய்கள் எளிதாக உருவாக காரணமாகும் இந்த பெயின்ட் பவுடர் .

5.            அஸ்பார்டேம்

இது ஜீஸ்களில்  உபயோகிக்கும் ஓர் செயற்கையான. இனிப்பு இது தொடர்ந்து பயன்பத்துவதன் மூலம் மூளை திசுக்களின் துளைகள் ஏற்படலாம் . கர்ப்பமான பெண்கள் இதை அருந்துவதால் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு மூளை மற்றும் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது, மேலும் இது வலிப்பு, தலைவலி, ஒற்றைத்தலைவலி, சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்று நோயை கருவில் விளைவிக்கிறது.

இந்த மூலக்கூறான அஸ்பார்டேம் முற்றிலும் சந்தையில் இருந்து அகற்றபட்ட வேண்டியது அவசியம். தற்போது இது ஆரஞ்சு கலந்த ஜீஸ்களில்  காணப்படுகிறது.

6.            அக்சல் ப்ளேம் பொட்டசியம் (Acesulfame Potassium)

FDA ஒப்புதலின் படி இந்த செயற்கையான இனிப்பை ஜீஸ் பவுடர்களில் பயன்படுத்தப்படுகிறது என்பது ஓர் கேள்விக் குறியாகவே உள்ளது. சமிபத்தில் நடந்த ஓர் ஆய்வின் படி இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றது என்று கூறபடுகிறது.

மேலும் ஆராய்ச்சியின் படி இது மார்பக மற்றும் நுரையிரல் கட்டிகள், நாள்ப்பட்ட சுவாச நோய் மற்றும் லுகேமியா நோய் வருவதற்கு இது வழிவகுக்கின்றது. ஜீஸ் பவுடர்களில் இந்த ரசாயனம் பயன்படுத்தபடுகிறது.

7.            Maltodextrin

இது ஜீஸ் பவுடர்களில்  ஒரு கைட்டிதன்மைக்காக பயன்படுத்தபடுகிறது. இது பல பக்க விளைவுகள் கொண்டவையாகும். மனிதன் இதை உட்க்கொள்ளும் அளவை பொறுத்து mild முதல் கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும் மேலும் இது நமது ஆரோகியதிற்கு ஆபத்தானது.

8.            ஸாந்தன் கம்

இதை பயன்படுத்துவதால் குடல் சார்ந்த விளைவுகள், ஏற்பட காரணமாக உள்ளது. ஜீஸ் பவுடர்களில்  இதை பயன்படுத்துவதால் குடல் சார்ந்த சிக்கலான வயிரறு வலி, மலச்சிக்கல், வீக்கம் மற்றும் தோல் எரிச்சல், தலைவலி, மூக்கு, தொண்டை மற்றும் நுறையீரல் எரிச்சல், வயிறு வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

9.            கம் அரபு (Gum அரபிக்)

இது ஒரு கெட்டி தன்மைக்காக கம் அரபு ஜீஸ் பவுடர்களில் பயன்படுத்தபடுகிறது. இதை பயன்ப்படுதுவதால் கொழுப்பு, ஒவ்வாமை, சுவாச பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகங்கள், கல்லீரல் சேதப்படுகிறது.

10.          சோடியம் Carboxymethyle Cellulose

இந்த மூலபொருள் மட்டும் பாதுகாப்பானது. மேலும் இதுவும் கனம் இரசாயன கலவை தான்.

11.          டைட்டனியும் டை ஆக்சைடே

இது நிறத்திற்காக ஜீஸ் பவுடர்களில் பயன்படுத்தபடுகிறது. தொழில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு படி இது மனிதனின் புற்று நோயை உருவாக்குகிறது

12.          Sunset Yellow FCF

இந்த நிறமி பெரும் மக்களுக்கு ஒரு ஓவ்வாமையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆஸ்பிரின் ஒவ்வாமை. உலக சுகாதார அமைப்பின்படி, இதனை நுகர்வதாலே  கட்டிகள் அதிகரிக்கும் தன்மை உண்டாக்குகிறது என்கிறது ஆய்வு ..அப்படியானால் இதை அருந்துபவர்கள் கதி ?

13.          Tartrazine

Tang இல் உபயோகிக்கப்படும் செயற்கை நிறமான “மஞ்சள் #5”. இதனை Tartrazine என்று கூறலாம். மேலும் இது சுவாச பிரச்சனை மற்றும் Hyperactivity போன்றவை அதிகரிக்க மிக முக்கிய காரணமாய் அமைகிறது

14.          வைட்டமின்கள்.

செயற்கையான பல வைட்டமின்கள் உள்ளடக்கியது..இதை பருக இயற்கையான பானங்களில் உள்ள வைட்டமின்களை கிரகிக்கும் தன்மையை உடல் இழந்து விடும்.


இந்த டே..,ர.. ஜீஸ் பவுடர்கள் இயற்கையான சிட்ரஸ் உள்ளடக்கிய ஜீஸ் பவுடர் அல்ல .செயற்கையான எசன்ஸ் கலந்த ,ஆய்வகத்தில் உண்டாக்கிய மிக மோசமான விளைவுகளை உருவாகும் ஒரு மிக மோசமான் பவுடர் பெயின்ட்டே ஆகும்

ஜீஸ் பவுடர்கள் அனைத்து சுகாதார இயற்கை சிட்ரஸ் நன்மைகள் கொண்ட Orange சாறு அல்ல; இது ஆரஞ்சு போன்ற சுவை வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பானம் ஆகும்.

இந்த கட்டுரை மொழியாக்கத்தில் உதவியர் டாக்டர்..வர்தினி BHMS

உடலுக்கு கேடான உணவு என்கிற போர்வையில் ஒளிந்துள்ள போலிகளை கண்டறிய ,சிறந்த ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000  (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை )

Post Comment

திங்கள், ஜூன் 23, 2014

விலை கொடுத்து வாங்கும் நாம் அறியா விஷம் -ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப்

எத்தனை மக்களுக்கு இந்த விஷயம் தெரியும் என்று தெரியவில்லை ..ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப் என்னும் மெல்ல கொல்லும் விஷம் பற்றி ..

இந்த விஷம் எந்த உணவுகளில் இருக்கிறது ?


செயற்கையாக தயாரிக்கப்படும் கட்டி தயிரில் 
வெள்ளை நிற பிரெட் என்னும் ரொட்டிகளில் 
தக்காளி சாஸில் 
பிட்சாவில் 
கெட்சப்பில்
இருமல் சிரப்பில்
டிராப்பிகானா ஜூஸில் 
பெப்சி ,கொக்கோ கோலா மற்றும் அனைத்து சாப்ட் ட்ரிங்க்குகளில் 
அனைத்து சாக்லேட்டுகளில் 
கிட்டத்தட்ட அனைத்து இனிப்புகளில் 
கிரீம் பிஸ்கெட்டில் 
பேக்கரி கிரீம்களில் ...


கடைசியில் எதில் தான் இது இல்லை என்று தேடத்தான் வேண்டும் ..

ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப்எப்படி தயாரிக்கிறார்கள் ?

மரபணு மாற்றப்பட்ட சோளத்தில் இருந்து ..இந்த சோளத்தினால் கோடிக்கணக்கான தேனீக்கள் இறக்கின்றது யாருக்கு தெரியும் ?

இந்த ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப் சேர்ந்த உணவுகளை உண்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் ?

  1. உடலில் கொழுப்பு எரிக்கபடாமல் -சேர்த்து வைக்கப்படும் 
  2. இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு கூடும் -கொலஸ்ட்ரால் கூடும் 
  3. சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும் 
  4. கல்லீரலை சேதபடுத்தும்
  5. இரத்த அழுத்தம் என்னும் பி பி நோயை அதிகபடுத்தும் 
  6. இதய நோய்களை வரவேற்க உடல் விரைவாக தயாராகும் 
  7. மைக்ரேன் தலைவலிக்கு ,சதா தலை வலிக்கும் காரணமாகும் 
  8. உடல் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் 
  9. கிட்னி நோய்க்கு காரணமாகும் ADHD,CRF,ARF,MRD  போன்ற நோய் வரும் 
  10. சீக்கிரமாக முதுமை வரும் -தோல் சுருங்கும் 
  11. பாதரசம் சேர்ந்துள்ளது -பாதரச பாதிப்புகள் வெளிப்படும் 
  12. பற்கள் சிதையும் -உங்கள் பல் மருத்துவர் பணக்காரர் ஆவர் 
  13. வயிறு பிரச்னைகள் -வாயு தொல்லை ,ஏப்பம் ,வயிறு உப்புசம் ,காரணம் தெரியாத பேதியாதல் ,அல்சர் வரும் 
  14. செல்லுளைட்டீஸ் என்னும் இரத்த குழாயின் சுவர் வீங்கி தடித்துவிடும் 
  15. முடி கொட்டும் -HFCS  சில் உள்ள பாதரசத்திற்கு நன்றி 
  16. கண் பார்வை மங்கும் ,விழி திரை பிரச்சனை - Retinal Deattachment  ஏற்படும் 
  17. முக பரு உண்டாகும் 
  18. உடல் நடந்தால் மூச்சு வாங்கும் 
  19. யூரிக் அசிட் அதிகமாகி -மூட்டு வலி ,வீக்கம் உண்டாகும் 
  20. கேன்சர் வர வாய்ப்புகளை அதிகமாக்கும் -மார்பக புற்று நோய்க்கு உத்திரவாதம் .

தீர்வு தான் என்ன ?

மருந்து தயாரிப்பில் -சிரப் தயாரிப்பில் இந்த ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப் இருப்பது தான் கொடுமை ..
கிட்டத்தட்ட எல்லா சிரப் மருந்து இதை கொண்டு தான் தயாரிக்கபடுகிறது என்பது மிகவும் வேதனையான என்னை சிந்திக்க வைத்த விஷயம் ...

நாட்டு சர்க்கரை ,பனை வெல்லம்(பனை மரம் பார்த்தவர்கள் சொல்லுங்கள் ),வெல்லம் ,கருப்பட்டி ..போன்ற இயற்க்கை இனிப்புகளை பயன்படுத்தலாம் ..





Post Comment