திங்கள், ஜூன் 23, 2014

விலை கொடுத்து வாங்கும் நாம் அறியா விஷம் -ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப்

எத்தனை மக்களுக்கு இந்த விஷயம் தெரியும் என்று தெரியவில்லை ..ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப் என்னும் மெல்ல கொல்லும் விஷம் பற்றி ..

இந்த விஷம் எந்த உணவுகளில் இருக்கிறது ?


செயற்கையாக தயாரிக்கப்படும் கட்டி தயிரில் 
வெள்ளை நிற பிரெட் என்னும் ரொட்டிகளில் 
தக்காளி சாஸில் 
பிட்சாவில் 
கெட்சப்பில்
இருமல் சிரப்பில்
டிராப்பிகானா ஜூஸில் 
பெப்சி ,கொக்கோ கோலா மற்றும் அனைத்து சாப்ட் ட்ரிங்க்குகளில் 
அனைத்து சாக்லேட்டுகளில் 
கிட்டத்தட்ட அனைத்து இனிப்புகளில் 
கிரீம் பிஸ்கெட்டில் 
பேக்கரி கிரீம்களில் ...


கடைசியில் எதில் தான் இது இல்லை என்று தேடத்தான் வேண்டும் ..

ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப்எப்படி தயாரிக்கிறார்கள் ?

மரபணு மாற்றப்பட்ட சோளத்தில் இருந்து ..இந்த சோளத்தினால் கோடிக்கணக்கான தேனீக்கள் இறக்கின்றது யாருக்கு தெரியும் ?

இந்த ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப் சேர்ந்த உணவுகளை உண்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் ?

  1. உடலில் கொழுப்பு எரிக்கபடாமல் -சேர்த்து வைக்கப்படும் 
  2. இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு கூடும் -கொலஸ்ட்ரால் கூடும் 
  3. சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும் 
  4. கல்லீரலை சேதபடுத்தும்
  5. இரத்த அழுத்தம் என்னும் பி பி நோயை அதிகபடுத்தும் 
  6. இதய நோய்களை வரவேற்க உடல் விரைவாக தயாராகும் 
  7. மைக்ரேன் தலைவலிக்கு ,சதா தலை வலிக்கும் காரணமாகும் 
  8. உடல் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் 
  9. கிட்னி நோய்க்கு காரணமாகும் ADHD,CRF,ARF,MRD  போன்ற நோய் வரும் 
  10. சீக்கிரமாக முதுமை வரும் -தோல் சுருங்கும் 
  11. பாதரசம் சேர்ந்துள்ளது -பாதரச பாதிப்புகள் வெளிப்படும் 
  12. பற்கள் சிதையும் -உங்கள் பல் மருத்துவர் பணக்காரர் ஆவர் 
  13. வயிறு பிரச்னைகள் -வாயு தொல்லை ,ஏப்பம் ,வயிறு உப்புசம் ,காரணம் தெரியாத பேதியாதல் ,அல்சர் வரும் 
  14. செல்லுளைட்டீஸ் என்னும் இரத்த குழாயின் சுவர் வீங்கி தடித்துவிடும் 
  15. முடி கொட்டும் -HFCS  சில் உள்ள பாதரசத்திற்கு நன்றி 
  16. கண் பார்வை மங்கும் ,விழி திரை பிரச்சனை - Retinal Deattachment  ஏற்படும் 
  17. முக பரு உண்டாகும் 
  18. உடல் நடந்தால் மூச்சு வாங்கும் 
  19. யூரிக் அசிட் அதிகமாகி -மூட்டு வலி ,வீக்கம் உண்டாகும் 
  20. கேன்சர் வர வாய்ப்புகளை அதிகமாக்கும் -மார்பக புற்று நோய்க்கு உத்திரவாதம் .

தீர்வு தான் என்ன ?

மருந்து தயாரிப்பில் -சிரப் தயாரிப்பில் இந்த ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப் இருப்பது தான் கொடுமை ..
கிட்டத்தட்ட எல்லா சிரப் மருந்து இதை கொண்டு தான் தயாரிக்கபடுகிறது என்பது மிகவும் வேதனையான என்னை சிந்திக்க வைத்த விஷயம் ...

நாட்டு சர்க்கரை ,பனை வெல்லம்(பனை மரம் பார்த்தவர்கள் சொல்லுங்கள் ),வெல்லம் ,கருப்பட்டி ..போன்ற இயற்க்கை இனிப்புகளை பயன்படுத்தலாம் ..





Post Comment

1 comments:

Mahalakshmi சொன்னது…

Oh god why people introduce all these unwanted harmful things in to children's most wanted consumptions. How much cautious we could be????????????? always.

கருத்துரையிடுக