போலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 20, 2022

போலி கரிசங்கண்ணி அடையாளம் காணுங்கள்

 போலி கரிசாலாங்கண்ணி ஆபத்து –அறிவது அவசியம்.


டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,MD (Ayu),M.Sc.,MBA உணவில் கலப்படம்- மனிதனின் பேராசை. மூலிகையில் கலப்படம் –மனிதனின் உயிருக்கே ஆபத்து. மூலிகை பற்றி சரியான தெளிவு இருத்தல் மிக மிக அவசியம் . கரிசாலை என்னும் கரிசாலாங்கண்ணி மூலிகை –மஞ்சள் காமாலை மற்றும் முடி வளர மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அனால் அவர்கள் பயன்படுத்துகிற அந்த மூலிகை கரிசாலையா என்றால் அது மிகவும் சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது . தாடி வைத்து காலையில் டிவியில் வைத்தியம் சொல்கிற அவர்க்கு அசோகம் எது –நெட்டிலிங்கம் எது என்கிற அறிவு இல்லை. நெட்டிலிங்க மர இலையை பயன்படுத்தி பெண்களின் மாதவிலக்கு நோய்க்கு சிகிச்சை செய்ய சொல்கிறார் அவர் . கரிசாலையில் போலி மூலிகை உள்ளது ,நான் படத்தில் காட்டிய இந்த இரண்டு போலி கரிசாலை மூலிகைகளை -மதுரையில் உள்ள திலகர் திடலில் மூலிகை விற்பனை நிலையத்தில் இரண்டு வகை போலிகளை மஞ்சள் கரிசலாங்கண்ணி என்ற விளக்கம் வேறு. பச்சை மூலிகையில் எளிதாக ஏமாற்றி விட முடிகிறது என்றால் –காய்ந்த இந்த போலி கரிசாலை எப்படி கண்டு பிடிக்க முடியும். கரிசாலையில் இரண்டு வகையான போலி கரிசாலை உள்ளது .அதனுடைய தாரவியல் பெயருடன் படங்கள் விளக்கத்துடன் கொடுக்கபட்டுள்ளது சம்பவம் ஒன்று - வயிறு வீங்கி மூச்சு விட சிரமத்துடன் –கண்ணில் மஞ்சள் நிறத்துடன் ஒரு இருப்பத்தைந்து வயது மிக்க ஒரு இளைஞர் என்னிடம் மஞ்சள் காமாலை சிகிச்சைக்கு வந்தார்..சார் பக்கத்து வீட்டு அம்மா தினமும் எனக்கு மஞ்சள் கரிசாலையை கிட்டதட்ட ஒரு வாரம் கொடுத்தார்கள் ஆனாலும் மஞ்சள் காமாலை பிலுரூபின் அளவு அதிகமாகி கொண்டே சென்றதே தவிர கொஞ்சம் கூட மாற்றம் இல்லை என்றார் . கையில் ஒரு மஞ்சள் பூ உள்ள செடியை காட்டி அவர் ­–இது எங்களது வீட்டு அருகே அதிகமாக உள்ளது இது மஞ்சள் கரிசாலை தானே என்று கேட்டார் . கிட்டத்தட்ட சாவின் விளிம்பு வரை அவரை அழைத்து சென்றது அவரது அறியாமை என்று சொல்வதா ? பக்கத்துக்கு வீட்டு திடீர் வைத்திய பெண்மணியை சொல்வதா ? sphagneticola trilobata என்கிற மஞ்சள் கரிசாலை போன்று மஞ்சள் பூ பூக்கிற அழகு குரோடன்ஸ் செடியை அவர் கரிசாலை என்று பச்சையாக சாறு எடுத்து குடித்து வந்திருக்கிறார் . அப்புறம் அவருக்கு தக்க சிகிச்சை அளித்து அவரது மஞ்சள் காமாலையை முற்றிலுமாக குணப்படுத்தினோம் என்பது மற்ற தகவல் . சம்பவம் இரண்டு மகளுக்கு முடி கூடுதலாக கொட்டுகிறது என்று சொன்ன அந்த அம்மா ..இந்த மஞ்சள் போலி கரிசலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வந்திருக்கிறார். கரிசாலையில் எந்த பலனும் இல்லை என்று –மூலிகையை குறை கூறிய அவர்களுக்கு தக்க விளக்கம் போலி கரிசாலை பற்றி அளிக்கபட்டது . எனவே –தெளிவான மூலிகை அறிவே நல்லது .சரியான மூலிகைகளை பயன்படுத்து சிகிச்சை செய்கிற –தகுந்த தகுதி வாய்ந்த மருத்துவர்களை கண்டு சிகிச்சை எடுத்தல் அவசியம் #பருங்கராஜ் #duplicateeclipta #alshifaayush #கரிசாலை #கரிசலாங்கண்ணி #பொலிமூலிகை #ayush #மருத்துவம் #தவறு #tamilhealth #ayurvedadoctor #dravayaguna #tamilmoolikai

Post Comment

புதன், ஜூன் 14, 2017

பொன்னாங்கண்ணி – போலி எது ? உண்மை எது ??

தவறாக அடையாளப்படுத்தபடும் போலி பொன்னாங்கண்ணி கீரை



டாக்டர் .அ.முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA



பொன்னாங்கண்ணி என்று ஏமாந்தவரா நீங்கள் ?



பொன்னாங்கண்ணி என்று நீங்கள் பயன்படுத்தி வருவது உண்மை பொன்னாங்கண்ணி இல்லை அதிர்ச்சி தகவல் . கண்ணுக்கு நல்லது ,தோலுக்கு நல்லது என்று ஆண்டு முழுவதும் நாம் இப்போது கிடைக்கிற பொன்னாங்கண்ணி உண்டு வந்தாலும் தர போவதில்லை என்பது ஒரு நம்ப முடியாத உண்மை .




Alternanthera sessilis என்கிற தாவர பெயர் உடைய கீரையே உண்மையான பொன்னாங்கண்ணி . இதன் படம் இங்கே கொடுக்கபட்டுள்ளது .கொடுப்பை ,சீதை என்று வேறு பெயரில் அழைக்கப்படும் இந்த கீரைகளின் அரசனை போல் உள்ள பொன்னாங்கண்ணி நமக்கு கிடைப்பது உண்மை இல்லை என்பது தான் அதிர்ச்சி தகவல்






சென்னை கிருஸ்துவ கல்லூரியின் தாவரவியல் ,தாவர  உயிரித் தொழில்நுட்பத்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் .நரசிம்ஹன்  தனது ஆராய்ச்சியில் இப்போது கிடைக்கிற சீமை பொன்னாங் கண்ணி என்கிற Alternanthera philoxeroides , Alligator weed -என்கிற வகை வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து நமது நீர் நிலைகளின் கரைகளில் தானாக வளரக்கூடிய இந்த அழகு செடி நமது கீரை சந்தையை கிட்டத்தட்ட முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது என்கிறார் .கழிவு நீர் ஓடை அருகில் ,தொழிற்சாலை கழிவு அருகில் எளிதாக வளர கூடிய இந்த சீமை பொன்னாங்கண்ணியில் காரீயம் ,பாதரசம் ,அம்மோனியா போன்ற மோசமான விஷ சத்துக்களும் புதைந்து இருக்கும் . இவை நமக்கு நல்லதை செய்யாமல் மிக பெரிய கெடுதலை உருவாக்க வாய்ப்புள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர் .



சிவப்பு பொன்னாங்கண்ணி என்கிற Alternanthera bettzickiana  தாவரியல் பெயர் உடைய இந்த செடி வெளிநாட்டில் இருந்து வந்தது ,அலங்கார செடி தான் இது . இது உண்ண தகுந்ததல்ல என்கிறது அறிவியல் . நம்மிடையே இப்போது அதிகம் கிடைப்பது இந்த சிவப்பு வகை தான் .. உண்மையை சொல்லப்போனால் சித்த மருத்துவ பண்டைய நூல்களில் பொன்னாங்கண்ணியில் வகைகள் இல்லை . பச்சையான ஒரு வகையை மட்டும் விளக்குகிறது சித்த மருத்துவ குணபாட நூல் .



பெரிய பொன்னாங்கண்ணி என்று சந்தையில் விற்கபடும் கீரையையும் இங்கே படம் பதிவேற்றி உள்ளேன் .இதுவும் உண்ண தகுந்ததல்ல



Alternanthera paronychioides (smooth joyweed ) என்கிற வகையும் பொன்னாங்கண்ணி என்று தவறுதலாக அடையாளம் காட்டபடுகிறது



Allien Plant என்கிற ஒரு வகை –கிட்டத்தட்ட பச்சை அசல் பொன்னாங்கண்ணியை போல் உள்ள இந்த கீரை தண்டு ,இலைகள் தடித்து காணப்படும் . உண்மையான பொன்னாங்கண்ணி தண்டு ,இலைகள் மிக மிருதுவாக இருக்கும் –அதற்க்கான படமும் இணைக்கப்பட்டுள்ளது
இதே போல் தான் போலி கரிசாலை பற்றியும் இதற்க்கு முன் கட்டுரை எழுதி இருந்தேன் .அதன் லிங்க் http://ayurvedamaruthuvam.blogspot.com/2017/04/blog-post_8.html


பொன்னாங்காணி மூலிகையின் பயன் :-

‘காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
கூசும் பீலிகம் குதாங்குரநோய் - பேசிவையால்
என்னாங்கா ணிப்படிவம் எமமம் செப்பலென்னைப்
பொன்னாங்கா ணிக்கொடியைப் போற்று’
- தேரையர் குணபாடம்.

கண்காசம்,  கருவிழி நோய், கண் புகைச்சல், வதம், பித்தம், கூச்சமுண்டாக்கும் கோழை,  வாயில் உண்டாகும் நோய்கள் போவதோடு பொன்னிறமான உடலையும் கொடுப்பதால் பொன்னாங்கண்ணியைப் போற்றியுண்ணல் வேண்டும் என்பது மேற்கூறிய பாடலின்  பொருளாகும்

‘கல்ப மருந்தாக பொன்னாங்கண்ணியை உண்டு வந்தால்  பகலில்கூட நட்சத்திரங்களைப் பார்க்க இயலும்’ என்று சித்தர்களின் கூற்று .

*இன்று தங்க பஸ்பம் என்பது கோடீஸ்வரர்களுக்குக் கூட எட்டாத ஒரு மருந்தாகி விட்டது. ஆனாலும், அதை ஏழைகளும் பலன் பெறும் விதத்தில் இறைவன் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருப்பது வியக்கத்தக்க ஒன்று.

பொன்னாங் கண்ணி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஒரு துணை மருந்து ஆகிறது.

தகவல் ரெபரன்ஸ் –இணைப்புகள்



நன்றி –மரு.ஸ்ரீராம் MD (S) அவர்கள் மற்றும் சித்த மருத்துவ டெலிகிராம் குழு

அரைகுறை மூலிகை அறிவு எந்த நல்ல பலனையும் தராது ..ஆயுள் முழுவதும் தவறாக புரிந்து சாப்பிடும் மூலிகைகள் பலனை தராது . சரியான மூலிகை அறிவை கொண்ட அனுபவ அறிவும் உள்ள தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மட்டுமே சிகிச்சை பெறுவது நல்லது .இந்த தகுதிகளை பெற்ற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )








Post Comment

சனி, ஏப்ரல் 22, 2017

அனுமதியின்றி விற்பனையாகும் உணவு என்ற பெயரில் மூலிகை மருந்துகள் –அபாயகரமான எச்சரிக்கை ..

அனுமதியின்றி விற்பனையாகும் உணவு என்ற பெயரில் மூலிகை மருந்துகள் –அபாயகரமான எச்சரிக்கை ..
(பாகம் ஒன்று )

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.வர்தினி .,BHMS.,

முன்பெல்லாம் இந்திய மருத்துவ பிரிவில் ஒரு ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்துக்கு லைசன்ஸ் பெற வேண்டும் என்றால் மிக எளிதாக இருந்தது. சட்டங்கள் கடுமையாக்கபட்ட பிறகு பழங்கால சாஸ்திரிக் என்கிற மருந்துகளை மட்டும் இப்போது அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எளிதாக பெற்று விட முடியும்..அனால் பேடன்ட் மருந்துகளை அதாவது –கேப்ஸ்யூல் ,சிரப் ,மாத்திரைகளை ,டானிக் போன்ற பழங்கால கிரந்தங்களின் ரெபரன்ஸ் இல்லாமல் –பெறுவது கிட்டத்தட்ட நிறுத்தி வைக்கபட்டுள்ளது .

இந்திய மருத்துவ லைசன்ஸ் இல்லாமல் மருந்தை விற்க முடியாது என்ற நிலையில் வியாபாரிகளுக்கு கிடைக்கபட்ட ஒரு குறுக்கு வழி தான் இப்போது உள்ள FSSAI அதாவது Food safety And standards Authoriy of India  என்கிற இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இருந்து Food supplement உணவு என்கிற பெயரிலே பல்வேறு மூலிகை கலவை கலந்த உணவு பொருட்கள் விற்பனைக்கு வருகிறது .

FSSAI ன் முதல் முக்கிய விதியே –இந்த உணவு இதை குணமாக்கும் ,இந்த நோயை சரியாக்கும் என்று தவறான விளம்பரம் செய்யவே கூடாது என்பது தான். அதை லேபிளில் போட கூடாது .அதாவது உடலை குறைக்கும் ,நோயை நீக்கும் என்றும் அந்த உணவு பொருளின் அட்டையில் போடவே கூடாது ..அனால் இங்கே அவை பின்பற்ற படுகிறதா என்பதே மிக முக்கிய கேள்வி ..

ஒவ்வொரு உணவு பொருளுக்கும் தனி தனி லைசன்ஸ் எடுக்க வேண்டும் என்பது  சட்டம் ..ஒரே லைசன்ஸ்ஸில் பல பொருட்களை விற்கும் பல உணவு என்ற பெயரிலே போலி நிறுவனங்கள் இங்கே பல உள்ளது. இதை கட்டுபடுத்த ஆட்கள் பலம் இல்லை என்பதும் பெரிய உண்மை .

எந்த மருத்துவ ஆராய்ச்சிக்கும் உட்படுத்த படாமல் ,பல கலப்பட அங்கீகாரம் இல்லாத வேதியியல் பொருகளின் கலவையை கலந்து –வியாபாரம் பார்கிறார்கள் ..உண்மையிலே இங்கே மருந்தே உணவு என்கிற ஒரே சொல் ..மாறிப்போய் உணவே மருந்து என்று போலியாய் வளம் வருகிறது. அதில் உள்ள சேர்மானங்களை கட்டுபடுத்த முடியாது என்பது போய் அதன் விலையையும் கட்டுபடுத்த முடியாத நிலை உருவாக்கி –பூதாகரமாகி உள்ளது என்று மக்களுக்கு தெரியப்படுத்த பெரிய ஒரு பயம் வருகிறது .



விழிப்புணர்வே இக்கண தேவை என்று அடிப்படையில் சில கருத்துகளை பகிர விரும்புகிறேன் .

“உணவே மருந்து. மருந்தே உணவு"  என்கிற மகத்தான தத்துவத்தை இங்கு எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை..இந்த தத்துவம் பாக்கெட்டில் அடைத்து விற்கும் எந்த உணவு என்ற பொருளுக்கும் பொருந்தாது .

வகை வகையாக உண்டதால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கேடுகள் தான். வரை முறையில்லா உணவுப்பழக்க வழக்கங்களால் பல வியாதிகள் குறிப்பாக மலச்சிக்கல், அதைத் தொடர்ந்து தலைவலி, அஜீரணம், வாயுத்தொல்லை என ஏராளம். ஆனால், இவையெல்லாம் இயற்கை உணவு முறைக்கு மாறிய பிறகு இருந்த இடம்தெரியாமல் ஓடிவிடும். நமது வீட்டுச் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் நம் ஆரோக்கியத்திற்கான மருந்துகள் உள்ளது என்பதை பலரும் அறிந்ததில்லை.

முதலில் ஒரு மனிதனுக்கு சாப்பாட்டைஎப்படி முறையாக சாப்பிட வேண்டும் என்பது தெரிகிறதா என்பது சந்தேகம் தான். அசனம், ஆசனம் என இரண்டை மனிதன் கடைப் பிடித்தாலே வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக வாழ முடியும். அசனம் என்பது நாம் உண்ணும் ஆகாரத்தையும், ஆசனம் என்பது யோகாசனத்தையும் குறிக்கும்.அசனம் என்கிற இயற்கை சார்ந்த ஆஹாரம்.

பச்சைக்காய்கறிகள், பழ வகைகள்,கஞ்சி, கூழ் என ஏதோ ஆதிகால மனிதர்களைப் போல எல்லோரும்சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் கிடையாது. உடலுக்குக் கேடு விளைவிக்காத சமைத்த உணவு இரண்டு வேளையும், இயற்கை உணவு ஒரு வேளையும் உண்டாலே போதுமானது.

ஆனால், நாம் எத்தனை பேர் இயற்கை தரும் ஆரோக்கிய உணவை விடுத்து டப்பாக்களில் விற்கும் மருந்துகளை உணவு என்று வாங்குகிறோம்.

பாலில் இல்லாத calcium-அ நமக்கு calcium மாத்திரை தரபோகிறது.

பழங்களில் இல்லாத Vitamin-களா நமக்கு Vitamin மாத்திரை தரபோகிறது.

அளவுக்கு அதிகமான விட்டமின்கள் எவ்வளவு பெரிய ஆபத்து என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

நம்மில் பெரும்பாலோனோர் இப்படி தான். இயற்கை தரும் பழங்களை விடுத்தது, Vitamin Tablet-களை வாங்கி செல்கிறோம், கூடவே பக்கவிளைவுகளையும் இலவசமாக வாங்கிசெல்கிறோம்.

அங்கீகாரம் கிடைக்காத மருந்துகளை உணவுகள் என்று விற்கிறார்கள். அதையும் நாம் நம்பி ஏமாந்து வாங்குகிறோம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் மிகவும் பெயர்போன நிறுவனம் ஆன ஆMWAY Product-இல் வரும் ..ந்utrilite Cal Maக்-d, ..ந்utrilite Bio-சி .., ..ந்utrilite Iron Folic Tablets, ..ந்utrilite ..நேatural-B Tablets ஆகியவை மருந்துகள் FSSAI-இல் நிராகரிக்கப்பட்டவை. இதில் Calcium மற்றும் Magnisium அளவுக்கு அதிகமாக இருப்பதே இது நிராகரிகப்பட  காரணம். இதை பயன்படுத்துபவர்களுக்கு வேறு பல உபாதைகளும் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. விலையோ யானை விலை ,குதிரை விலை

இதேபோல், “Forever Version” இவை Ultra-Violet Radiation தடுக்க பயன்படுகிறது. ஆனால் இதை உணவு போல் உட்கொள்வதால் கண்களில் மற்றும் நாக்கில் வறட்சி ஏற்ப்படுதல், சுவாச கோளாறுகள், வாந்தி, மயக்கம், தலை வலி போன்றவை ஏற்படும் .

இதே போல் 400-க்கும் மேற்ப்பட்ட பொருட்களை FSSAI (Food Safty & Standard Of India)  நிராகரிக்கப்பட்டவை.

இதனால், நாம் உணவு பொருட்கள் என்று கடைகளில் கிடைக்கும் டப்பாக்களை (Bottle Products) தவிர்த்து நமது பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.

அதேபோல், உடலில் ஏதேனும் பிரச்சனைகளுக்கு, சுயமாக மருந்து எடுத்துகொள்ளாமல் தகுந்த மருத்துவ பாரம்பரியமான முறையான AYUSH-ஐ பயன்படுத்தி நோயின்றி வாழலாம்.

தக்க ஆயுர்வேத சித்த யுனானி இயற்கை நேச்ரோபதி –ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை.
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை     9043336000

Post Comment

சனி, ஏப்ரல் 08, 2017

போலி கரிசாலாங்கண்ணி ஆபத்து –அறிவது அவசியம்.

போலி கரிசாலாங்கண்ணி ஆபத்து –அறிவது அவசியம்.

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA

உணவில் கலப்படம்- மனிதனின் பேராசை.
மூலிகையில் கலப்படம் –மனிதனின் உயிருக்கே ஆபத்து.
மூலிகை பற்றி சரியான தெளிவு இருத்தல் மிக மிக அவசியம் . கரிசாலை என்னும் கரிசாலாங்கண்ணி மூலிகை –மஞ்சள் காமாலை மற்றும் முடி வளர மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அனால் அவர்கள் பயன்படுத்துகிற அந்த மூலிகை கரிசாலையா என்றால் அது மிகவும் சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது .

தாடி வைத்து காலையில் டிவியில் வைத்தியம் சொல்கிற அவர்க்கு அசோகம் எது –நெட்டிலிங்கம் எது என்கிற அறிவு இல்லை. நெட்டிலிங்க மர இலையை பயன்படுத்தி பெண்களின் மாதவிலக்கு நோய்க்கு சிகிச்சை செய்ய சொல்கிறார் அவர் .

கரிசாலையில் போலி மூலிகை உள்ளது ,நான் படத்தில் காட்டிய இந்த இரண்டு போலி கரிசாலை மூலிகைகளை -மதுரையில் உள்ள திலகர் திடலில் மூலிகை விற்பனை நிலையத்தில் இரண்டு வகை போலிகளை மஞ்சள் கரிசலாங்கண்ணி என்ற விளக்கம் வேறு. பச்சை மூலிகையில் எளிதாக ஏமாற்றி விட முடிகிறது என்றால் –காய்ந்த இந்த போலி கரிசாலை எப்படி கண்டு பிடிக்க முடியும்.

கரிசாலையில் இரண்டு வகையான போலி கரிசாலை உள்ளது .அதனுடைய தாரவியல் பெயருடன் படங்கள் விளக்கத்துடன் கொடுக்கபட்டுள்ளது





உண்மை கரிசாலை –எப்படி இருக்கும் ?
படம் இணைக்கப்பட்டுள்ளது

சம்பவம் ஒன்று -

வயிறு வீங்கி மூச்சு விட சிரமத்துடன் –கண்ணில் மஞ்சள் நிறத்துடன் ஒரு இருப்பத்தைந்து வயது மிக்க ஒரு இளைஞர் என்னிடம் மஞ்சள் காமாலை சிகிச்சைக்கு வந்தார்..சார் பக்கத்து வீட்டு அம்மா தினமும் எனக்கு மஞ்சள் கரிசாலையை கிட்டதட்ட ஒரு வாரம் கொடுத்தார்கள் ஆனாலும் மஞ்சள் காமாலை பிலுரூபின் அளவு அதிகமாகி கொண்டே சென்றதே தவிர கொஞ்சம் கூட மாற்றம் இல்லை  என்றார் .  கையில் ஒரு மஞ்சள் பூ உள்ள செடியை காட்டி அவர் ­–இது எங்களது வீட்டு அருகே அதிகமாக உள்ளது  இது மஞ்சள் கரிசாலை தானே என்று கேட்டார் .

கிட்டத்தட்ட சாவின் விளிம்பு வரை அவரை அழைத்து சென்றது அவரது அறியாமை என்று சொல்வதா ? பக்கத்துக்கு வீட்டு திடீர் வைத்திய பெண்மணியை சொல்வதா ? sphagneticola trilobata  என்கிற மஞ்சள் கரிசாலை போன்று மஞ்சள் பூ பூக்கிற அழகு குரோடன்ஸ் செடியை அவர் கரிசாலை என்று பச்சையாக சாறு எடுத்து குடித்து வந்திருக்கிறார் . அப்புறம் அவருக்கு தக்க சிகிச்சை அளித்து அவரது மஞ்சள் காமாலையை முற்றிலுமாக குணப்படுத்தினோம் என்பது மற்ற தகவல் .

சம்பவம் இரண்டு

மகளுக்கு முடி கூடுதலாக கொட்டுகிறது என்று சொன்ன அந்த அம்மா ..இந்த மஞ்சள் போலி கரிசலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வந்திருக்கிறார். கரிசாலையில் எந்த பலனும் இல்லை என்று –மூலிகையை குறை கூறிய அவர்களுக்கு தக்க விளக்கம் போலி கரிசாலை பற்றி அளிக்கபட்டது .


எனவே –தெளிவான மூலிகை அறிவே நல்லது .சரியான மூலிகைகளை பயன்படுத்து சிகிச்சை செய்கிற –தகுந்த தகுதி வாய்ந்த மருத்துவர்களை கண்டு சிகிச்சை எடுத்தல் அவசியம் .சிறந்த ஆயுஷ் சிகிச்சைக்கு
#அல்_ஷிபா_ஆயுஷ்_மருத்துவமனை
#கடையநல்லூர் 90 4222 5333
#திருநெல்வேலி 90 4222 5999
#ராஜபாளையம் 90 4333 6888
#சென்னை 90 4333 6000

Post Comment