போலி கரிசாலாங்கண்ணி ஆபத்து –அறிவது அவசியம்.
டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,MD (Ayu),M.Sc.,MBA உணவில் கலப்படம்- மனிதனின் பேராசை. மூலிகையில் கலப்படம் –மனிதனின் உயிருக்கே ஆபத்து. மூலிகை பற்றி சரியான தெளிவு இருத்தல் மிக மிக அவசியம் . கரிசாலை என்னும் கரிசாலாங்கண்ணி மூலிகை –மஞ்சள் காமாலை மற்றும் முடி வளர மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அனால் அவர்கள் பயன்படுத்துகிற அந்த மூலிகை கரிசாலையா என்றால் அது மிகவும் சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது . தாடி வைத்து காலையில் டிவியில் வைத்தியம் சொல்கிற அவர்க்கு அசோகம் எது –நெட்டிலிங்கம் எது என்கிற அறிவு இல்லை. நெட்டிலிங்க மர இலையை பயன்படுத்தி பெண்களின் மாதவிலக்கு நோய்க்கு சிகிச்சை செய்ய சொல்கிறார் அவர் . கரிசாலையில் போலி மூலிகை உள்ளது ,நான் படத்தில் காட்டிய இந்த இரண்டு போலி கரிசாலை மூலிகைகளை -மதுரையில் உள்ள திலகர் திடலில் மூலிகை விற்பனை நிலையத்தில் இரண்டு வகை போலிகளை மஞ்சள் கரிசலாங்கண்ணி என்ற விளக்கம் வேறு. பச்சை மூலிகையில் எளிதாக ஏமாற்றி விட முடிகிறது என்றால் –காய்ந்த இந்த போலி கரிசாலை எப்படி கண்டு பிடிக்க முடியும். கரிசாலையில் இரண்டு வகையான போலி கரிசாலை உள்ளது .அதனுடைய தாரவியல் பெயருடன் படங்கள் விளக்கத்துடன் கொடுக்கபட்டுள்ளது சம்பவம் ஒன்று - வயிறு வீங்கி மூச்சு விட சிரமத்துடன் –கண்ணில் மஞ்சள் நிறத்துடன் ஒரு இருப்பத்தைந்து வயது மிக்க ஒரு இளைஞர் என்னிடம் மஞ்சள் காமாலை சிகிச்சைக்கு வந்தார்..சார் பக்கத்து வீட்டு அம்மா தினமும் எனக்கு மஞ்சள் கரிசாலையை கிட்டதட்ட ஒரு வாரம் கொடுத்தார்கள் ஆனாலும் மஞ்சள் காமாலை பிலுரூபின் அளவு அதிகமாகி கொண்டே சென்றதே தவிர கொஞ்சம் கூட மாற்றம் இல்லை என்றார் . கையில் ஒரு மஞ்சள் பூ உள்ள செடியை காட்டி அவர் –இது எங்களது வீட்டு அருகே அதிகமாக உள்ளது இது மஞ்சள் கரிசாலை தானே என்று கேட்டார் . கிட்டத்தட்ட சாவின் விளிம்பு வரை அவரை அழைத்து சென்றது அவரது அறியாமை என்று சொல்வதா ? பக்கத்துக்கு வீட்டு திடீர் வைத்திய பெண்மணியை சொல்வதா ? sphagneticola trilobata என்கிற மஞ்சள் கரிசாலை போன்று மஞ்சள் பூ பூக்கிற அழகு குரோடன்ஸ் செடியை அவர் கரிசாலை என்று பச்சையாக சாறு எடுத்து குடித்து வந்திருக்கிறார் . அப்புறம் அவருக்கு தக்க சிகிச்சை அளித்து அவரது மஞ்சள் காமாலையை முற்றிலுமாக குணப்படுத்தினோம் என்பது மற்ற தகவல் . சம்பவம் இரண்டு மகளுக்கு முடி கூடுதலாக கொட்டுகிறது என்று சொன்ன அந்த அம்மா ..இந்த மஞ்சள் போலி கரிசலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வந்திருக்கிறார். கரிசாலையில் எந்த பலனும் இல்லை என்று –மூலிகையை குறை கூறிய அவர்களுக்கு தக்க விளக்கம் போலி கரிசாலை பற்றி அளிக்கபட்டது . எனவே –தெளிவான மூலிகை அறிவே நல்லது .சரியான மூலிகைகளை பயன்படுத்து சிகிச்சை செய்கிற –தகுந்த தகுதி வாய்ந்த மருத்துவர்களை கண்டு சிகிச்சை எடுத்தல் அவசியம் #பருங்கராஜ் #duplicateeclipta #alshifaayush #கரிசாலை #கரிசலாங்கண்ணி #பொலிமூலிகை #ayush #மருத்துவம் #தவறு #tamilhealth #ayurvedadoctor #dravayaguna #tamilmoolikai
0 comments:
கருத்துரையிடுக