மலமிளக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலமிளக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 08, 2021

மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு | Natural way to get rid of co...


மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு Natural way to get rid of constipation இயற்கை மருத்துவம் #மலச்சிக்கல் #constipation #மலச்சிக்கலுக்குதீர்வு #naturopathytreatementforconstipation #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

ஞாயிறு, ஜனவரி 13, 2013

பேதி உண்டாக்கும் மாத்திரை -இச்சாபேதி ரஸ (ICCHA BEDHI RAS)


பேதி உண்டாக்கும் மாத்திரை -இச்சாபேதி ரஸ  (ICCHA BEDHI RAS)                                                                                     
(ref-பஸவராஜீயம் - வாதரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக         20           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன் நன்கு பொடித்துச் சலித்த

1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       60 கிராம்
2.            சுக்கு – சுந்தீ                                            50           “
3.            மிளகு – மரீச்ச                                         30           “

இவற்றின் சூர்ணம்

4.            நன்கு பொரித்துப் பொடித்த வெங்காரம் – டங்கண பஸ்ம  40           “

ஆகியவற்றை ஒன்று சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்து மாத்திரை உருட்டத்தக்க பதத்தில் அத்துடன் தனியே நன்கு அரைத்து விழுதாக்கிய சுத்திசெய்த நேர்வாளப்பருப்பு (ஷோதித தந்தீபீஜ) 120 கிராம் சேர்த்து ஒன்றுபட அரைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

பெரியவர்களுக்கு ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை குளிர்ந்த நீருடன், காலை எழுந்தவுடன் ஒரு வேளைமட்டும் வெறும் வயிற்றில் கொடுக்கவும். குழந்தைகளுக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் குறைவான மாத்திரையைக் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:



வயிற்றுப் பொருமல் (ஆனாக), வயிற்றுக் கோளாறுகள் (உதர ரோக), மலச்சிக்கல் (மலபந்த), நன்கு பேதியை உண்டாக்கி மேற்கூறிய நிலைகளில் நிவாரணமளிக்கிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. சிறிய கடுகு அளவே உள்ள ஒரு மாத்திரையும் பெருங் கழிச்சலை உண்டு செய்து -தோஷங்களை வெளியேற்றும் 
  2. சிலருக்கு இந்த மாத்திரை வாந்தியையும் உண்டு பண்ணும் 
  3. கடுகளவே உள்ள இந்த மாத்திரையை  பத்தில் ஒரு பங்கு கொடுக்க நாள்பட்ட மலச்சிக்கலும் போகும் 

Post Comment

வெள்ளி, ஜனவரி 27, 2012

கல்லீரல் மண்ணீரல் வீக்கத்திற்கு க்ஷீரபிப்பலி -Ksheera Pippali


கல்லீரல் மண்ணீரல் வீக்கத்திற்கு க்ஷீரபிப்பலி -Ksheera Pippali
 (ref-சக்ரதத்த)\

தேவையான மருந்துகள்:

1.            திப்பிலி – பிப்பலீ      போதுமான அளவு
2.            கள்ளிப்பால் – ஸ்னுஹிக்ஷீர போதுமான அளவு

செய்முறை:     

 இவைகளை நுண்ணியதாக அரைத்துப் பதத்தில் 100 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்திப் பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது நெய்யுடன்.

தீரும் நோய்கள்:  


பசிக்குறைவு (அக்னி மாந்த்ய), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), கல்லீரல், மண்ணீரல் பெருக்கம் (யக்ருத்ப்லீஹ வ்ருத்தி), காய்ச்சல் (ஜ்வர), மிதமான மலமிளக்கி.

Post Comment

வெள்ளி, ஜூன் 24, 2011

கிருமிகளை விரட்டும் -மாணிபத்ர லேஹ்யம்


கிருமிகளை அழித்து-மலமிளக்கி -தோல் நோய் -குணப்படுத்தும் -மாணிபத்ர லேஹ்யம்
 (ref-அஷ்டாங்க ஹ்ருதய - குஷ்டசிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
 வெல்லம் – புராணகுட            480 கிராம்
                 
இதைப் போதுமான அளவு தண்ணீரி விட்டுச் சிறிது சூடாக்கி வடிகட்டி கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன் அதில்,

1.            வாயுவிடங்கம் – விடங்க                    40 கிராம்
2.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்           40           “
3.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  40           “
4.            சிவதை வேர் – த்ரிவ்ருத்                    120         “

                இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தைக் கலந்து பத்திரப்படுத்தவும்.

- மாறாக பாகு எடுக்காமல் பொடியைச் சேர்த்து இடித்து லேஹ்யம் தயாரிப்பதும் உண்டு.

அளவும் அனுபானமும்:     

 5 முதல் 10 கிராம் வரை சூடான தண்ணீருடன் இரவு படுக்கும் போது.

தீரும் நோய்கள்: 


பெருவயிறு (மஹோதர (அ) உதர), மண்ணீரல் நோய்கள் (ப்லீஹரோக), வயிற்றுப்பூச்சிகள் (க்ருமி), நாட்பட்ட மலச்சிக்கல் (புராண மலபந்த), நாட்பட்ட மூலம் (புராண அர்ஸஸ் (அ) அர்ஷ), நெறி கட்டும்போதேற்படும் வலி (க்ரந்திருக்), வெண்குட்டம் (ஸ்வித்ர) மற்றும் நாட்பட்ட தோல் நோய்கள் (புராண குஷ்ட), இது நல்லதொரு மலமிளக்கி, பூச்சிக்கொல்லி, ரத்த சுத்திகரிப்பி.

குறிப்பு:     
இதற்கு “மாணிபத்ர யோக”, “மாணிபத்ரகுட” என்றும் பெயர்கள் உண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. வயிற்றில் உள்ள பூச்சிகள் எதுவானாலும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
  2. இந்த மருந்தை தொடர்ந்து எடுத்த பின் -பேதிக்கும் மருந்து சாப்பிடுவது நல்லது
  3. இரத்தம் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்
  4. தோல் நோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது மற்ற மருந்துகளுடன் இந்த மருந்தை சேர்த்து சாப்பிட -விரைவில் பலன் தெரியும்
  5. இந்த மருந்து மிக எளிதாக செய்ய கூடிய மருந்து
  6. அல்பெண்டாசொல்,மேபெண்டாசொல்  போன்ற ஆங்கில கிருமி வேலை செய்யாத இடத்திலும் இந்த மருந்தை கொடுத்து -குழந்தைகளின் வயிற்றில் உள்ள பெரிய பெரிய பூச்சிகளையும் வெளியே தள்ளலாம்
  7. அதிகம் சாப்பிட்டால் பேதியாகும் வாய்ப்புள்ளது .
  8. கை பக்குவமாக -ஒரு மூலிகை -எல்லா விதமான கிருமிகளை வெளியேற்ற பயன்படுத்தமுடியும் -அந்த மருந்தை பின்னூட்டத்தில் சரியாக யார் எழுதுவார்கள் என்று பார்போம் ( கிருமிக்கு மிக சிறந்த -எளிமையான -நல்ல மூலிகை பெயர் ஒன்றை சொல்லுங்கள் -பார்போம்? -பின் குறிப்பு வேப்பிலை ,பாகற்காய் இல்லை அது )

Post Comment

ஞாயிறு, ஜூன் 12, 2011

குழந்தையின்மைக்கு மருந்தாகும் -சுகுமாரம் ரசாயனம் லேஹியம்


குழந்தையின்மைக்கு மருந்தாகும் - ஸுகுமார ரஸாயனம்
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – வித்ரதி விருத்தி சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            மூக்கிரட்டைவேர் – புனர்னவ                 9         கிலோ
2.            தசமூலம் – தசமூல                         900         கிராம்
3.            கீரைப்பாலை – ஜீவந்தி                       900         “
4.            ஆமணக்குவேர் – எரண்டமூல                900         “
5.            அமுக்கராக் கிழங்கு – அஸ்வகந்தா           900         “
6.            தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ        900         “
7.            தர்பை – தர்பா                                900         “
8.            ஆற்று தர்பை – வம்ஸமூல?                                         900         “
9.            அமவேர் – கான இக்க்ஷமூல                 900         “
10.          குசவேர் – குஸ                             900         “
11.          கரும்புவேர் – இக்க்ஷூமூல                  900         “
12.          கொட்டைக்கரந்தை – ஹப்புஸ               900         “

                இவைகளை 10 ½ மடங்கு தண்ணீருடன் கொதிக்க வைத்துத் தண்ணீர் 1/8 பங்காக வற்றியவுடன் வடிகட்டிய கஷாயத்தில்

13.          வெல்லம் – குட                          9         கிலோ
                சேர்த்துக் கரைத்து வடிகட்டி பால் (க்ஷுர) 6 கிலோ சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பாகு பக்குவமான நிலையில் அத்துடன்

14.          நெய் – க்ருத                                6              கிலோ
15.          ஆமணக்கு எண்ணெய் – எரண்டதைல        6         கிலோ

சேர்த்துப் பிறகு

16.          திப்பிலி – பிப்பலீ                          150 கிராம்
17.          திப்பிலி மூலம் – பிப்பலீமூல                150         “
18.          இந்துப்பு – ஸைந்தவ லவண                 150         “
19.          அதிமதுரம் – யஷ்டீ                         150         “
20.          திராக்ஷை – த்ராக்ஷா                        150         “
21.          ஓமம் – அஜமோதா                         150         “
22.          சுக்கு – சுந்தீ                                150         “

                இவைகளின் சலித்த நுண்ணிய சூரணத்தையும் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவும்  அனுபானமும்:   

  2 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: 




 வயிற்றுவலி (உதரசூல), குன்மம் (குல்ம), பிறப்பிறுப்பு சார்ந்த நோய்கள் (ஜன்னேந்திரிய ரோக), நீடித்த மலச்சிக்கல் (வர்கோவிபந்த) (அ) புராணமலபந்த). கருவுற்றிருக்கும் போது தொடர்ந்து சாப்பிட சிக்கலற்ற பிரஸவத்திற்கு உதவுகிறது. பிறப்புறுப்பு மண்டலத்தைத் தூண்டவல்லது. நீர் பெருக்கி, மிதமான மலமிளக்கி.


தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. காரணம் தெரியாத மலட்டு தன்மைக்கு இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  2. அடி வயிறு  சார்ந்த நோய்கள் ,அபான வாயுவின் தடை போன்றவற்றிக்கு இந்த மருந்து நல்ல மருந்து
  3. அடி வயிற்றில் ஏற்படும் கட்டிகள் -பொதுவாக பெண்களின் கருப்பையில் ஏற்படும் கட்டிகளுக்கு ,பைப்ராய்ட்  கட்டிகள் ,சதைக்கட்டிகள் ,நீர்க்கட்டிகள் ,பாலி சிஸ்டிக் ஓவரி போன்ற பிரச்சனைகளுக்கு -தனியாகவோ ,த்ர்யாயந்த்யாதி கஷாய்த்துடனோ சேர்த்து பருக விரைவில் கரைந்து -அறுவை சிகிச்சை வேண்டாம் என்று ஆங்கில மருத்துவர்களே சொல்வார்கள் என்பது உறுதி
  4. சூட்டு வலி ,சூதக வலி -மாத விடாய் வலிகளுக்கு -தக்க துணை மருந்துகளோடு தர -சூலம்  என்னும் வலிகள் மாயமாய் மறைந்து போகும்
  5. இந்த ஒரு மருந்தை வைத்தே -பல குழந்தையின்மை தம்பதிகளுக்கு ஏக இறைவனின் துணை கொண்டு குழந்தை பாக்கியம் பெற்று தர உதவியது ,உதவுகிறது ..
  6. இந்த சுகுமாரம் மருந்து -லேஹியமாக ,சுகுமாரம் கஷாயமாக  ,சுகுமாரம் கிருதம் என்னும் நெய் மருந்தாக ,சுகுமாரம் அரிஷ்டமாக -பல வடிவங்களில் ,பல நிலைகளில் ,பல விதமாக கிடைக்கிறது -

Post Comment