கிருமிகளை அழித்து-மலமிளக்கி -தோல் நோய் -குணப்படுத்தும் -மாணிபத்ர லேஹ்யம்
(ref-அஷ்டாங்க ஹ்ருதய - குஷ்டசிகித்ஸா)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
வெல்லம் – புராணகுட 480 கிராம்
இதைப் போதுமான அளவு தண்ணீரி விட்டுச் சிறிது சூடாக்கி வடிகட்டி கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன் அதில்,
1. வாயுவிடங்கம் – விடங்க 40 கிராம்
2. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் 40 “
3. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் 40 “
4. சிவதை வேர் – த்ரிவ்ருத் 120 “
இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தைக் கலந்து பத்திரப்படுத்தவும்.
- மாறாக பாகு எடுக்காமல் பொடியைச் சேர்த்து இடித்து லேஹ்யம் தயாரிப்பதும் உண்டு.
அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை சூடான தண்ணீருடன் இரவு படுக்கும் போது.
தீரும் நோய்கள்:
பெருவயிறு (மஹோதர (அ) உதர), மண்ணீரல் நோய்கள் (ப்லீஹரோக), வயிற்றுப்பூச்சிகள் (க்ருமி), நாட்பட்ட மலச்சிக்கல் (புராண மலபந்த), நாட்பட்ட மூலம் (புராண அர்ஸஸ் (அ) அர்ஷ), நெறி கட்டும்போதேற்படும் வலி (க்ரந்திருக்), வெண்குட்டம் (ஸ்வித்ர) மற்றும் நாட்பட்ட தோல் நோய்கள் (புராண குஷ்ட), இது நல்லதொரு மலமிளக்கி, பூச்சிக்கொல்லி, ரத்த சுத்திகரிப்பி.
குறிப்பு:
இதற்கு “மாணிபத்ர யோக”, “மாணிபத்ரகுட” என்றும் பெயர்கள் உண்டு.
- வயிற்றில் உள்ள பூச்சிகள் எதுவானாலும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
- இந்த மருந்தை தொடர்ந்து எடுத்த பின் -பேதிக்கும் மருந்து சாப்பிடுவது நல்லது
- இரத்தம் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்
- தோல் நோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது மற்ற மருந்துகளுடன் இந்த மருந்தை சேர்த்து சாப்பிட -விரைவில் பலன் தெரியும்
- இந்த மருந்து மிக எளிதாக செய்ய கூடிய மருந்து
- அல்பெண்டாசொல்,மேபெண்டாசொல் போன்ற ஆங்கில கிருமி வேலை செய்யாத இடத்திலும் இந்த மருந்தை கொடுத்து -குழந்தைகளின் வயிற்றில் உள்ள பெரிய பெரிய பூச்சிகளையும் வெளியே தள்ளலாம்
- அதிகம் சாப்பிட்டால் பேதியாகும் வாய்ப்புள்ளது .
- கை பக்குவமாக -ஒரு மூலிகை -எல்லா விதமான கிருமிகளை வெளியேற்ற பயன்படுத்தமுடியும் -அந்த மருந்தை பின்னூட்டத்தில் சரியாக யார் எழுதுவார்கள் என்று பார்போம் ( கிருமிக்கு மிக சிறந்த -எளிமையான -நல்ல மூலிகை பெயர் ஒன்றை சொல்லுங்கள் -பார்போம்? -பின் குறிப்பு வேப்பிலை ,பாகற்காய் இல்லை அது )
2 comments:
வணக்கம் நண்பரே ,
குடல் பூச்சிக்கு சிறப்பான மருந்து அருமை .புதிதாக புதிர் வேறு கேட்டுள்ளிர்கள் ம்ம்ம்ம்ம்ம் மூளைக்கு வேலை மூளை சிறப்பாக வேலைசெய்ய ஒரு மருந்து பற்றி எழுதவும் .நண்பரே குடல் புழுக்களுக்கு மாதுளம்பழம் சாபிடலாம் மாதுளம்பழ வேர் சுத்தம் செய்து நீரில் கொதிக்க வைத்து அந்த நீர் பருகலாம் ,அண்ணாச்சி பழம் சாப்பிடலாம் ,வாய்விலங்கா பொடியை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து தரலாம் .
அன்புடன்
கோவை சக்தி
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய மருந்து சார்.
கருத்துரையிடுக