சனி, ஜூன் 11, 2011

உடல் உஷ்ணத்தை குறைத்து தாதுக்களை வலுப்படுத்தும் -கூஷ்மாண்ட லேஹ்யம்


உடல் உஷ்ணத்தை குறைத்து தாதுக்களை வலுப்படுத்தும் -கூஷ்மாண்ட லேஹ்யம்

 (ref-பைஷஜ்யரத்னாவளி ரக்த பித்தாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

                தோல், கொட்டை நீக்கிச் சொர சொரப்பான கண்களை உடைய சல்லடையில் தேய்த்து எடுத்த பூசணிக்காயின் வெண்ணிறமான கதுப்பு 5.000 கிலோ கிராமை நீராவியில் வேகவைத்துப் பிழிந்து, சிறிது வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் பசுவின் நெய் (க்ருத) 800 கிராம் சேர்த்து அகலமான பாத்திரத்திலிட்டு தேன் போன்ற நிறம் வரும் வரை வறுக்கவும். பிறகு அதில் கற்கண்டு 5.000 கிலோ கிராம் பொடித்துச் சேர்த்து நன்கு கிளறி கைவிரல் ரேகை பதியும் அளவு கெட்டியாகிப் பாகம் வந்தவுடன் அத்துடன்,

1.            திப்பிலி பிப்பலீ                 100 கிராம்
2.            சுக்கு சுந்தீ                     100        
3.            சீரகம் ஜீரக                     100        
4.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்  25          
5.            ஏலக்காய் ஏலா                  25          
6.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி   25          
7.            மிளகு மரீச்ச                  25          
8.            கொத்தமல்லி விதை தான்யக   25          

                இவைகளைப் பொடித்துச் சலித்துச் சேர்த்துத் திரும்பத் திரும்பக் கிளறி பத்திரப்படுத்தவும்.

ஆறியபின் தேன் (மது) 400 கிராம் சேர்க்கவும்.

குறிப்பு:    

 மேலே கூறிய முறைப்படி லேஹ்யம் செய்தால் சில நாட்களிலேயே லேஹ்யத்தில் பூர்ணம் பூத்துவிடுகிறது. எனவே சம்பிரதாயத்தில் செய்முறை சிறிது மாற்றப்படுகிறது.

                பூசனிக்காயைத் தோல் கொட்டை நீக்கிச் சொரசொரப்பான கண்களை உடைய சல்லடையில் தேய்த்துக் கேஸரமாக்கிப் பிழிந்து இட்டிலி செய்வது போன்று ஆவியில் வேகவைக்கவும். மேற்படி கேஸரத்தில் இருந்து பிழிந்தெடுத்த சாற்றில் செய்முறையில் கூறியுள்ள சர்க்கரையைக் கரைத்துச் சூடாக்கி வரவும்.

                வெந்த கேஸரத்தை சுத்தமான துணி அல்லது பாய் இவைகளில் தகடுபோல் பரப்பி வெய்யிலில் நன்கு உலர்த்தவும். உலர்ந்த பின்னர் அவற்றை எடுத்து செய்முறையில் கூறியுள்ளபடி நெய்யைச் சிறிது விட்டு வறுத்து மற்ற சரக்குகளுடன் பொடித்துச் சலித்துச் சித்தமாக்கவும். பின்னர் மேலே கூறிய சாறு, சர்க்கரை இவற்றின் கலவையை வடிக்கட்டிக் கொதிக்க வைத்துப் பதத்தில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துப் பின்னர் சலித்த சூரணத்தைத் தூவி கலந்து ஆறிய பின் தேன் சேர்த்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:   

5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு  வேளைகள்.

தீரும் நோய்கள்: 


 இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), பலவீனம் (பலக்ஷய (அ) அசக்த), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர), ரத்தம் துப்புதல் (உரக்க்ஷத (அ) க்ஷதக்ஷய), குருதியழல் (ரத்த பித்த), வெள்ளைப் போக்கு (ஸ்வேதப்ரதர), மூலம் (அர்ஸஸ்), குருதி யொழுகு மூலம் (ரக்தார்ஷ), இதய நோய் (ஹ்ருத்ரோக).

                உஷ்ணமும் இளைப்பும் கூடிய நிலையில் ஒரு நாளைக்கு இரு வேளை தரவும். வெள்ளை போக்கில் ப்ரதராந்தக ரஸத்துடன் தரப்படுகிறது. ரத்தமூலத்தில் ப்ப்பூலாரிஷ்டத்துடன் தரப்படுகிறது. 

நல்லதொரு பலவிருத்திச் செய்கை வேண்டின் சிறிது கஸ்தூரி, தங்கபற்பம் (அ) வெள்ளிபற்பம் (அ) மகரத்வஜ (அ) பூரணச் சந்திரோதயத்துடன் சேர்த்து அருந்தவும். 

கோடையில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளவும், பலவிருத்தி செய்கை வேண்டியும் எல்லோரும் உட்கொள்ளலாம். 

காமவிருத்தி செய்கை (வாஜீகரணம்) வேண்டின் இதனுடன் சாலாப்மிஸ்ரி, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, அக்ரோட், சாரைப்பருப்பு, நீர்முள்ளி வித்து, நெருஞ்சில் வித்து போன்றவற்றின் சூரணத்தையும் சேர்த்துண்ண வேண்டும். 

தெரிந்து கொள்ளவேண்டியவை
  1. வெண் பூசணியில் செய்யப்படும் இந்த லேஹியம் -உடல் எடை கூட பயன்படுத்தபடுகிறது
  2. பெண்களின் வெள்ளை படுதில் -முசலிகதிராதி கஷாயத்துடன் சாப்பிட நல்ல பலன் தரும்
  3. உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த மருந்தே எனது முதல் சாய்ஸ்
  4. பொதுவாக தினமும் சாப்பிட -உடல் வன்மை பெருகும் ,ஆண் பெண் மலட்டு தன்மை நீங்கும்
  5. சித்த மருத்துவத்தில் கிடைக்கும் வெண் பூசணி லேஹியம் இதுவும் குணத்தில் ஒன்றே ஆனாலும் தயாரிக்கபடும் முறை ,சேர்கின்ற மூலிகைகளில் வித்தியாசம் உள்ளது (பல கம்பெனிகள் -ஒரே மருந்தென்று லேபிளை மட்டும் மாற்றி விடுவர் )
  6. புளி தவிர்த்து இந்த மருந்தை உண்பது நல்லது ..

Post Comment

3 comments:

வானவன் யோகி சொன்னது…

தகவலுக்கு நன்றி..

எந்த நூலிலிருந்து எடுக்கப்பெற்றது...
எந்த அதிகாரத்தில் உள்ளது என்பது வரை தெளிவாகப் பதிவிடும் பாங்கு பாராட்டுக்குறியது....

மென்மேலும் நலன் பெற வாழ்த்துக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

Useful post. thank you for sharing.

jagadeesh சொன்னது…

நீங்களே செஞ்சு கொடுத்தா நல்லாருக்கும். யோசிச்சு சொல்லுங்க.

கருத்துரையிடுக