புதன், ஜூன் 22, 2011


வாஸாகண்டகாரீ லேஹ்யம்
(ref-சஹஸ்ர யோகம் ?)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            ஆடாதோடை வேர் வாஸாமூல           5.000 கிலோ கிராம்
2.            கண்டங்கத்திரி சமூலம் கண்டகாரீமூல     5.000                    
3.            தண்ணீர் ஜல                           102.400  லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 25.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன் சர்க்கரை (ஸர்க்கர) 4.000 கிலோ கிராம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன் நெய் (க்ருத) 400 கிராம் சேர்த்து அதில்

1.            சுக்கு சுந்தீ                     50 கிராம்
2.            மிளகு மரீச்ச                   50          
3.            திப்பிலி பிப்பலீ                 50          
4.            சித்தரத்தை ராஸ்னா            50          
5.            சீந்தில்கொடி குடூசி             50          
6.            கொடிவேலிவேர் சித்ரக          50          
7.            கர்க்கடகசிருங்கி கர்க்கடகச்ருங்கி 50          
8.            கண்டுபாரங்கி பார்ங்கீ           50          
9.            கோரைக்கிழங்கு முஸ்தா        50          
10.          மோடி பிப்பலீமூல              50          
11.          சிறுகாஞ்சூரிவேர் துராலபா       50          
12.          மூங்கிலுப்பு வம்ஸலோசன      50          
13.          திப்பிலி பிப்பலீ                 50          

                இவைகளைப் பொடித்துச் சலித்து சூர்ணத்தைக் கலந்து ஆறிய பின்னர் தேன் (மது) 400 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவு:          

5 முதல் 10 கிராம் வரை இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:  இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), காய்ச்சல் (ஜ்வர), க்ஷயம் (ராஜயக்ஷ்மா), உடலுள்ளுறுப்புகளிலேற்படும் ரத்தப்போக்கு (ரக்தபித்த), செரியாமை (அஜீர்ண), உணவில் விருப்பமின்மை (அரோசக), கல்லீரல், மண்ணீரல் பெருக்கம் (யக்ருத்ப்லீஹ வ்ருத்தி)


தெரிந்து கொள்ள வேண்டியவை -

  1. கண்டங்கத்தரி லேஹியத்தை விட மிக மிக சிறந்த ஒன்று இது
  2. காசநோயில் வரும் வறட்டு இருமலையும் நிறுத்தும்
  3. ஹீமொபீளியாவில் இந்த மருந்து -பிளாஸ்மா இரத்தம் ஏற்றுதலை தவிர்க்க இந்த மருந்து மற்ற துணை மருந்துகளோடு கொடுத்ததில் நல்ல பலன் உள்ளது
  4. கல்லீரல் நோயில் ஏற்படும் -இரத்த உறைதலில் ஏற்படும் சிக்கலை போக்க இந்த மருந்தை பயன்படுத்தலாம்
  5. இருமல் எந்த ரூபத்தில் ,எந்த நோயினால் ஏற்பட்ட இருமலானாலும் நன்றாக வேலை செய்யும்
  6. பசியின்மை போக்க -பயன்படுத்தலாம் .

Post Comment

1 comments:

கருத்துரையிடுக