வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் - பில்வாதி லேஹ்யம்
(ref-ஹைஸ்ரயோகம் - லேஹ்யப்ரகரணம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. வில்வவேர் – பில்வமூல 1.280 கிலோ கிராம்
2. தண்ணீர் –ஜல 5.120 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 1.280 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதில் பழைய வெல்லம் (புராணகுட) 640 கிராம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகு வரும்போது,
1. கோரைக்கிழங்கு – முஸ்தா 10 கிராம்
2. கொத்தமல்லி விதை – தான்யக 10 “
3. சீரகம் – ஜீரக 10 “
4. ஏலக்காய் – ஏலா 10 “
5. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 10 “
6. சிறுநாகப்பூ - நாககேஸர 10 “
7. சுக்கு – சுந்தீ 10 “
8. மிளகு – மரீச்ச 10 “
9. திப்பிலி – பிப்பலீ 10 “
இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தைச் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்.
அளவு:
2 முதல் 5 கிராம் வரை இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
வாந்தி (சர்தி), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அ) உணவில் விருப்பமின்மை (அருசி (அ) அரோசக), பித்தம் அதிகரித்து அதிக உமிழ் நீர் சுரத்தல் (ப்ரஸேக) போன்ற பலவித பித்த நோய்கள் மற்றும் கழிச்சல் (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சீதபேதி (ரக்தாதிஸார) போன்ற பலவித வயிற்றுப் போக்குகள்.
0 comments:
கருத்துரையிடுக