புற்று நோயில்,எயிட்ஸ் நோயில் -பயன்படும் அமிர்த பல்லாதகம் லேஹியம்
(ref-யோகரத்னாகர - வாஜீகரணாதிகார)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. சுத்தி செய்த சேராங்கொட்டை – ஷோதிதபல்லாதக 1.280 கி.கிராம்
2. தண்ணீர் – ஜல 5.120 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 1.280 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி ஆறியபின் அதில்
சர்க்கரை – ஸர்க்கர 0.640 கி.கிராம்
சேர்த்துச் சிறிது சூடாக்கி கரைத்து வடிகட்டி அத்துடன் பசுவின் பால் (கோக்ஷீர) 1.280 கி.கிராம் கலந்து கொதிக்க வைத்து பாகம் வந்தவுடன் மேற்கொண்டு அதில் பசுவின் நெய் (க்ருத) 285 கிராம் சேர்த்து அத்துடன்,
1. சுக்கு – சுந்தீ 10 கிராம்
2. மிளகு – மரீச்ச 10 “
3. திப்பிலி – பிப்பலீ 10 “
4. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் 10 “
5. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 10 “
6. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் 10 “
7. ஜடாமாஞ்சில் – ஜடாமாம்ஸி 10 “
8. சிவதை வேர் – த்ரிவ்ருத் 10 “
9. மூங்கிலுப்பு – வம்ஸலோசன 10 “
10. கருங்காலி – கதிர 10 “
11. சந்தனம் – சந்தன 10 “
12. அக்கராகாரம் – அக்காரகரபா 10 “
13. திப்பிலி – பிப்பலீ 10 “
14. வால்மிளகு – கங்கோல 10 “
15. இலவங்கம் – லவங்க 10 “
16. நிலப்பனைக் கிழங்கு – முசலி 10 “
17. தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ 10 “
18. தக்கோலம் – தக்கோல 10 “
19. இலவம்பிசின் – சால்மலீ நிர்யாஸ 10 “
20. சீரகம் – ஜீரக 10 “
21. கிர்மானி ஜீரகம் – பாரசீக யவனி 10 “
22. கிரந்தி தகரம் – தகர 10 “
23. யானை திப்பிலி – கஜ பிப்பலீ 10 “
24. பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ 10 “
25. ஜாதிக்காய் – ஜாதீபல 10 “
26. கோரைக்கிழங்கு – முஸ்தா 10 “
27. ஜாதிபத்திரி – ஜாதி பத்ரி 10 “
28. கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக 10 “
29. அகில் கட்டை – அகரு 10 “
30. கடல் நுரை – ஸாமுத்ர பீன 10 “
31. மேதா – மேதா 10 “
32. மஹாமேதா – மஹ மேதா 10 “
இவைகளைப் பொடித்துச் சலித்துச் சேர்க்கவும். ஆறிய பின்னர்
1. அயபற்பம் – லோஹபஸ்ம 10 கிராம்
2. ஏககுண சிந்தூரம் (ரஸ்ஸிந்தூரம்) 10 “
3. வெள்வங்க பற்பம் – வங்கபஸ்ம 10 “
4. அப்பிரகபற்பம் – அப்ரகபஸ்ம 10 “
5. சீந்தில் சர்க்கரை – பொடித்த குடுசீஸத்வம் 10 “
6. பொடித்த பச்சைக் கற்பூரம் – கற்பூர 10 “
7. பொடித்த குங்குமப்பூ – குங்குமகேஸர 10 “
இவைகளைச் சேர்த்து நன்கு கலந்து ஏழு நாட்கள் வைத்துப் பிறகு உபயோகிக்கவும்.
குங்குமப்பூவைச் சிறிது அதே பாகுவிட்டு நன்கு அரைத்துப் பாகம் வருவதற்குச் சில நிமிஷங்கள் முன் அக்கலவையில் சேர்ப்பது வழக்கம்.
சுத்தி செய்த சேராங்கொட்டையை உபயோகிப்பதால் நூலில் கூறிய அளவில் பாதியே எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கேற்ப சர்க்கரை முதலியவைகளும் கிரகிக்கப்படுகின்றன. பாலுக்கு பதில் நெய் சேர்ப்பது சம்பிரதாயம்.
அளவும் அனுபானமும்:
2 முதல் 5 கிராம் வரை பாலுடன் ஒரு வேளை மட்டும் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உட்கொள்ளவும்.
தீரும் நோய்கள்:
குஷ்டம் எனப்படும் பலவித நாட்பட்ட தோல் நோய்கள் (சர்ம ரோக) குருதிச் சீர்கேடுகள் (ரத்த தோஷ), பரங்கிப் புண் (பிரங்க ரோக), புண்கள் எனப்படும் இரணங்கள் (வ்ரண), பிரமேகம் (ப்ரமேஹ), பிரமேகக் கட்டிகள் (ப்ரமேஹ பிடக), ஆமவாதம் (ஆமவாத).
வெப்பமான உடற்கூறு உடையவர்களுக்கு (பித்த தேஹிகளுக்கு) கொடுக்கும் போதும், உஷ்ணமான காலங்களிலும் மிகுந்த கண்காணிப்புடன் இதைக் கொடுத்தல் வேண்டும்.
தெரிந்து கொள்ள வேண்டியவை
குறிப்பு -கடும் பத்தியம் தேவை படும் - வாஜி கரணம் என்னும் ஆயுர்வேத அற்புத சிகிச்சையில் பயன்படுகிறது
- எய்ட்ஸ் ,எச் ஐ வி -நோய் தொற்று உள்ள நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க பயன்படுகிறது
- நாள் பட்ட அனைத்து நோய்களுக்கும் இந்த மருந்து நல்ல மருந்து \
- புற்று நோய் சிகிச்சையில் இந்த மருந்து -நன்றாக பயன் படுகிறது
- தோல் நோய்கள் ,முடக்கு வாத சிகிச்சையில் -நல்ல பலன் தெரியும்
- சீந்தில் கொடி இருப்பதால் -உடல் நோய் எதிப்பு சக்தி பெருகிட இந்த மருந்து மிக மிக நல்ல மருந்து
- என்றும் இளமையாக இருக்க இந்த மருந்து -ரசாயனம் ஆக காய கல்பமாக பயன்படுகிறது
- சர்க்கரை நோயாளிகளின் நாள் பட்ட புண் ,ஆறாப்புண் ,அடிக்கடி ஏற்படும் புண் -கட்டிகளில் சிறந்து மருந்து இது
6 comments:
பகிர்வுக்கு நன்றி..வாழ்த்துக்கள்
சேராங்கொட்டை,கொடுவேலி போன்ற மூலிகைகள் உடம்புக்குள் சென்ற உடனே வேலை செய்வதுடன் மிகச் சிறந்த பலன் தருகிறது என்பதை பாவிப்பவர் அறிவர்......
இரண்டுமே விடம் கொண்டவையாதலால் சுத்தித்துச் சேர்த்தால் அது அமிர்தத்துக் கொப்பாம்..
இன்னும் ஆராய வேண்டிய விடயங்களில் இது முதன்மையானது...
பதிவுக்கு நன்றிகள்....வாழ்க...வெல்க...
சிறு இடைவெளிக்கு பிறகு நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.
பூண்டு இல் இருந்து சாறு இப்படி எடுப்பது ?
இந்த மருந்து ரெடிமேடாக எங்கு கிடைக்கும்... நண்பர் ஒருவருக்கு கேன்ஸருக்கு தெவைப்படுகிற்து. தகவல் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்...
இந்த மருந்து ரெடிமேடாக எங்கு கிடைக்கும்... நண்பர் ஒருவருக்கு கேன்ஸருக்கு தெவைப்படுகிற்து. தகவல் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்...
கருத்துரையிடுக