தாய்ப்பால் சுரக்க உதவும் -ஸௌபாக்ய சுண்டி
(ref-ரஸரத்ன ஸமுச்சயம் – உத்தர கண்டம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
வெல்லம் – குட 2.250 கிலோ கிராம்
தண்ணீர் – ஜல போதுமான அளவு
இவற்றைக் சூடு செய்து வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி, அதில் தனித்தனியே நன்கு பொடித்துச் சலித்த
சுக்கு – சுந்தீ 160 கிராம்
சதகுப்பை – ஸதபுஷ்ப 100 “
இவைகளை கரைத்துக் கொதிக்கவைத்துப் பாகு பதத்தில் நெய் (க்ருத) 240 கிராம் சேர்த்துக் கலக்கி அத்துடன்
1. கொத்தமல்லி விதை – தான்யக 60 கிராம்
2. வாயுவிடங்கம் – விடாங்க 20 “
3. சிறுநாகப்பூ – நாககேஸர 20 “
4. கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக 20 “
5. மிளகு – மரீச்ச 20 “
6. சீரகம் – ஜீரக 20 “
7. ஏலக்காய் – ஏலா 20 “
8. திப்பிலி – பிப்பலீ 20 “
9. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 20 “
10. கோரைக்கிழங்கு – முஸ்தா 20 “
இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தையும் சேர்த்து நன்கு கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:
2 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள். (ஆட்டுப்பாலுடன் கொள்வது சிறப்பானது).
தீரும் நோய்கள்:
சீரணக் கோளாறுகள் (அக்னி மாந்த்ய), பலவீனம் (பலக்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), பிரஸவித்தப்பின்னேற்படும் கோளாறுகள் (ஸூதிகாரோக), வீட்டுவிலக்குக் கோளாறுகள் (ருதுதோஷ (அ) ஆர்த்தவ தோஷ), தாய்பால் இன்மை, யோனி நோய்கள், ஆண்மைகுன்றுதல். இது கருப்பைக்கு வலுவூட்டவல்லது.
தெரிந்து கொள்ளவேண்டியவை -
- பிரசவத்திற்கு பின் ஆறுமாத காலம் வரை சாப்பிட -பிரசவத்திற்கு பின் வரும் உடல் எடை கூடல் ,பலஹீனம் ,தாய்பால் குறைவு ,எலும்பு தெம்பு இன்மை ,இடுப்பு வலி ஆகியவற்றை போக்கும் ..
- இந்த மருந்தின் அருமை தெரிந்து -மத்திய அரசு எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பெரிய அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் அனைவர்க்கும் கொடுத்து எல்லா தாய்மார்களுக்கும் இலவசமாக கொடுக்க செய்துள்ளது ..
- நல்ல பசி உண்டாக்கி
1 comments:
வாழ்த்துக்கள்...
தகவலுக்கு நன்றி...
கருத்துரையிடுக