செவ்வாய், ஜூன் 14, 2011

ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்


ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்
 (ref-சரகசம்ஹிதா காஸ சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:







1.            வில்வவேர் பில்வமூல                    100 கிராம்
2.            முன்னைவேர் அக்னிமாந்த                 100        
3.            பெருவாகை வேர் ஸ்யோனாக              100        
4.            குமிழ்வேர் காஷ்மரீ                       100        
5.            பாதிரி வேர் பாட்டால                      100        
6.            மூவிலை சாலிபர்ணீ                       100        
7.            ஓரிலை ப்ரிஸ்னிபர்ணீ                     100        
8.            கண்டங்கத்திரி கண்டகாரீ                  100        
9.            முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ                 100        
10.          நெருஞ்சில் கோக்ஷூர                     100        
11.          பூனைக்காலி வேர் ஆத்ம குப்தாமூல        100        
12.          காக்கரட்டான் வேர் சங்க புஷ்பீமூல         100        
13.          கிச்சிலிக் கிழங்கு ஸட்டீ                   100        
14.          சித்தாமுட்டிவேர் பலாமூல                 100        
15.          யானைத் திப்பிலி கஜ பிப்பலீ              100        
16.          நாயுருவி வேர் அபமார்கமூல               100        
17.          மோடி பிப்பலீமூல                         100        
18.          கொடிவேலி வேர் சித்ர மூல               100        
19.          கண்டு பாரங்கி பார்ங்கீ                     100        
20.          புஷ்கர மூலம் கோஷ்ட                    100        
21.          நன்கு முதிர்ந்த கடுக்காய் ஹரிதகீ         100 எண்ணிக்கைகள்
22.          யவை அரிசி யவா                       3.200 கி.கிராம்
23.          தண்ணீர் ஜல                           16.000 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து யவை அரிசி வெந்தவுடன் வடிகட்டவும். அவ்விதம் வடிகட்டிய கஷாயத்தில் 5.000 கிலோ கிராம் வெல்லம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வெல்லம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி அதில் முன்பு கஷாயத்தில் வெந்த 100 கடுக்காய்களை சேர்த்துக் கொதிக்க வைத்துப் பாகத்தில்

1.     பசுவின் நெய் க்ருத                                     200 கிராம்
2.     நல்லெண்ணெய் திலதைல                               200        
3.     வறுத்துப் பொடித்துச் சலித்த திப்பிலி பிப்பலீ சூர்ண         200        

                                இவைகளை முறையே சேர்த்துக் கிளறி ஆறிய பின்னர் தேன் (மது) 200 கிராம் சேர்த்துப் பத்திரப்படுத்தவும்.

ஆனால் சம்பிரதாயத்தில்
                கஷாயச் சரக்குகள் (யவை அரிசி தவிர)    2.000 கி.கி
                தண்ணீர்                                  16.000 லிட்டர்


                இவைகளுடன் 100 கடுக்காய்களையும் மூட்டையாகக் கட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து 4.000 லிட்டர் ஆகக் குறுக்கிக் கஷாயம் வடிகட்டப்படுகிறது.

                வெந்த கடுக்காய்கள், மூட்டையில் இருந்து எடுக்கப் பட்டுக் கொட்டைகள் நீக்கப்படுகின்றன. பின்னர் அவைகளை ஆட்டுக்கல்லில் நன்கு அறைத்து விழுதாக்கி துணியின் வழியே தேய்த்து (வஸ்திரகாளனம்) நார் முதலியன நீக்கப்படுகின்றன.

                பின்னர் மேலே குறிப்பிட்ட

1.            வடிக்கட்டிய கஷாயம்            4.000 லிட்டர்
2.            வெல்லம் குட                5.000 கி.கிராம்
இவைகளைச் சிறிது சூடாக்கி வடிகட்டி அத்துடன் முன்பு சித்தமாக்கிய கடுக்காய் விழுது நன்கு கலக்கப்படுகிறது. அக்கலவையுடன் தனியாக 4 பங்கு தண்ணீரில் யவம் நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டித் தயார் செய்யப்பட்ட யவை அரிசி கஷாயமும் சேர்க்கப்பட்டுக் கொதிக்க வைக்கப்படுகிறது. பின்னர் பாகத்தில் முன் கூறியபடி நெய் முதலியன சேர்க்கப்பட்டு பத்திரப் படுத்தப்படுகிறது.

                சிலர் கஷாயத்தில் வெந்த கடுக்காயைக் கொட்டை நீக்கி வெய்யிலில் வைத்துக் காய்ந்த பின் பொடித்துச் சலித்துப் பாகுடன் சேர்ப்பர்.

குறிப்பு:     

இதற்கு அகஸ்திய ஹரீதகீஎன்றும், “அகஸ்த்ய ஹரீதகீரஸாயனஎன்றும் பெயருண்டு.


அளவும் அனுபானமும்:     

 1 முதல் 2 கடுக்காய் வரை ஒரு டீஸ்பூன் லேஹ்யத்துடன் இரு வேளைகள் (அ) 6-12 கிராம் லேஹ்யம் 2-3 வேளைகள் பால் அல்லது வெந்நீருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  



இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் (ஸ்வாஸகாஸ), பீனசம் (பீனஸ), விக்கல் (ஹிக்க), நச்சுக்காய்ச்சல் (விஷமஜ்வர), பலக்குறைவு (க்ஷய), குன்மம் (குல்ம), நாட்பட்ட பெருங்கழிச்சல் (கிராணி). இது ஒரு ரஸாயனமாகக் கருதப்படுகிறது.

தெரிந்து  கொள்ள வேண்டியவை
  1. ஆஸ்த்மாவிற்கு இந்த லேஹியத்துடன் தஷமூலகடுத்ரயாதி கஷாயம் ,நாயோபாயம் கஷாயம் ,வ்யோஷதி வடகம் போன்ற மருந்துகளோடு எடுத்து கொள்ள நிரந்தர தீர்வை தரும்
  2. நோய் எதிர்ப்பு சக்தி பெருகிட -தொடர்ந்து சாப்பிட்டால் -சளி தொந்தரவுகள் விட்டொழிந்து போகும்
  3. அகஸ்த்ய ரசாயனம் -இருமலை  சரி செய்யும்


Post Comment

0 comments:

கருத்துரையிடுக