ஆண்மை வளர்க்கும் மூலிகைகளின் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்மை வளர்க்கும் மூலிகைகளின் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை final part-&உணவுகள் -

நாம எங்கெங்கோ தேடி தேடி அலைவோம் ஆனால் வீட்டிலே இத்தனை மூலிகைகள்,உணவு மூலிகைகள் ஆண்மையை பெருக்கும் என்பதை உணர்ந்து சாப்பிடுகிறோமா நாம்?.


முருங்கை ,முருங்கை விதை 



பாதாம் 

உளுந்து 

பேரிச்சம் பழம்

வெங்காயம்,வெங்காய விதை 


முந்திரி 

பிஸ்தா 

நிலக்கடலை 
முள்ளங்கி விதை 


ஆளியம்-ஆளி விதை 

இலவங்க பட்டை 



சாரப்பருப்பு 





இவை மட்டுமில்லை -பாதம் பிசின்,இலவம் பிசின்,முருங்கை பிசின் போன்றவைகளும்,சாலாமிசிரி,கரு வேலம்,காட்டு சதகுப்பை,தட்டை பயிறு,நாகமல்லி,நிலபூசணி,அக்ரோட்டு ,பருத்தி ,பனை,வில்வம்,வெண்டை போன்ற உணவுகளும் ஆண்மை பெருக்கும்-காதல் வளர்க்கும் .

Post Comment

ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்


ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை-அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன் .
Botonical name-withania somnifera .

சீமை அமுக்கிரா & நாட்டு அமுக்கிரா என்று வகை இரண்டுண்டு.இதில் சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது..
மூலிகை வயாக்ரா-என்ற பெயரும் உண்டு.
இந்திய ஜின்செங் -என்ற பெயரும் உண்டு .

............................கோல 
நகுட வெருண்டுதிர நாட்டுவையேன் மேலை 
நகுட வெருண்டு று வாழ் நாள் .. அகத்தியர் குணபாடம்.

சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து உண்ண விந்துவை பெருக்கும்.
சமீப கால ஆராய்ச்சிகளிலிருந்து அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும் உடலில் உள்ள Free Radicals ஐ வெளியேற்றி உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
அஸ்வகந்தா பல ஆராய்ச்சிகளில் ஜின்செங்கை (Panax Schinseng) ஒத்த செயல்பாடுகளை உடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்லது  அஸ்வகந்தா
அஸ்வகந்தாவின் நன்மைகள்
· உங்கள் திறமைகளையும் உடல் வலிமையையும் அதிகரிக்கும்.
· உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
· உங்கள் மூளையின் செயல்பாட்டினை பெருக்கும், ஞாபக சக்தி மற்றும் திறமையை அதிகரிக்கும்.
· உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
· உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்
· உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்
· உங்களது இன பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)
மருத்துவ குணங்கள்
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுப்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் (கிழங்குகள்) மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. அஸ்வகந்தாவின் பழங்கள் பாலை சீஸ்1£க மாற்ற பாலை கட்டிப்படுத்த பயன்படுகிறது. சமஸ்கிருத மொழியில் அஸ்வகந்தா என்பது குதிரையின் நாற்றம் என பொருள்படும்.








Post Comment

நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )


நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை -நெருஞ்சில் (படத்துடன் ).

botonical name -tribulus terrestris..

செப்பு நெருஞ்சில் திரிதோடம் போக்கிவிடும் 
வெப்பு முதலனைத்தும் வீட்டுங்காண்-செப்பரிய 
சுக்கிலமே கம்போர்க்குந் தொல்லையனல் மாற்றும் 
மிக்கு மருந்துநீ விள் ------அகத்தியர் குணபாடம்


எதிர் அடுக்குகளில் முருங்கையிலைப் போன்று சிறுசிறு இலைகள் கொண்ட தரையோடு படர்ந்து வளரக்கூடிய சிறு கொடி நெருஞ்சில். இதன் மலர்கள் சூரியத்திசையோடு திரும்பும் தன்மை உடையது. முள் உள்ள காய்களை உடையது. செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சிறுநீர், தாதுபலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகி, இரத்தக் கசிவை நிறுத்தும் குணம் உடையது. .
வகைகள் : 1.பெரு நெருஞ்சில் 2. சிறு நெருஞ்சில் 3. செப்பு நெருஞ்சில்
பெருநெருஞ்சில் : இது ஒன்றரை அடிவரை வளரக்கூடியது. இதன் காய்கள் ஏறக்குறைய மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு, எட்டு, முட்கள் நீண்டு இருக்கும். இதன் காயளவு அரை நெல்லிக்காய் அளவில் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.
சிறு நெருஞ்சில் : இது தரையோடு படர்ந்து வளரக்கூடியது. இதன் காய்கள் சுண்டைக்காய் அளவில் மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு எட்டு முட்கள் நீண்டிருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.
செப்பு நெருஞ்சில் : இது தரையோடு படர்வதோடு தரையில் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் முட்கள் இருக்காது. சிவப்பு நிறப்பூக்கள் பூக்கும்




எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிய -கருத்துரையில் கேள்வி கேட்கவும் 







Post Comment

விந்தணுக்களை கூட்டும் ,தாது பலமுண்டாகும் மூலிகை part 6 -ஓரிதழ் தாமரை (படத்துடன் )

விந்தணுக்களை கூட்டும் ,தாது பலமுண்டாகும் மூலிகை -ஓரிதழ் தாமரை (படத்துடன் )
Botonical name-HYBANTHUS ENNEASPERMUS/IONIDIUM SUFFRUTIOCOSUM

ஓரிதழ் தாமரை முழு மூலிகையையும் காய வைத்து பொடி செய்து  தொடர்ந்து உண்ண
தொப்பை குறையும் -உடல் எடை குறையும்
விந்தணுக்கள் கூடும் ,விந்து கட்டும்,
மேக சூடு குறையும்,தேக பலம் உண்டாக்கும் 

பாடல் -
தாதுவையுண்டாக்குந் தனிமேகத்தைத் தொலைக்கும் 
ஆதரவா மேனிக் கழகு தருஞ் -சீதம்போம் 
சீரிதழ்த் தாமரைவாழ் செய்ய மடவனமே ?
ஓரிதழ்த் தாமரையை யுண். 

சுரத்தை கடித்து சுவாசத்தைப் போக்கி
யுரத்தை யுடலுக் குதவும் - பருத்தவுடல்
வாடாதனுதினமும் வைத்தடிக்கு மேகத்தை
யேடேக கோகனகமே

- தேரர் வெண்பா











\




Post Comment

நரம்புக்கு வலுவூட்டும்,ஆண்மை பெருக்கும் மூலிகை part 5 -வெள்ளை முசலி (சபேத் ) முசலி -படத்துடன்




நரம்புக்கு வலுவூட்டும்,ஆண்மை பெருக்கும் மூலிகை -வெள்ளை முசலி (சபேத் ) முசலி -

botonical name-Chlorophytum borivilianum/Chlorophytum Arundinaceum

விவசாயத்தில் அதிகம் பலன் தரக்கொடிய ,ஏற்றுமதி அதிகம் ஆகும் மூலிகைகளை ஒன்று இந்த சபேத் முசலி எனும் வெள்ளை முசலி.

இந்த வெள்ளை முசலி -நரம்புக்கு தெம்பூட்டும் ,ஆண்மை பெருக்கும்.
கண்ட கண்ட மாத்திரையை முழுங்குவதை விட -நாட்டு மருந்து கடைகளில் இதனை வாங்கி பொடியாக்கி பாலில் உண்டு வர பலன் அளிக்கும்.
முசலியின் பெயர் சொல்லி ஏமாற்றுபவர்கள் பலர் இருப்பதால் விழிப்புணர்வு தேவை.






Post Comment

சனி, பிப்ரவரி 13, 2010

விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)

விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-
ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)


botonical name- myristica fragrans 

விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன,அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காயும் ,ஜாதி பத்ரி யும் .

ஜாதிக்காயை ஊறுகாயாக சாப்பிடவே கூடாது.
ஜாதிக்காய் சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து சாப்பிட விண்டு முந்துதல் நிற்கும்.ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

விந்து முந்துதல் சரியாக்கும் பல ஆயுர்வேத மருந்துகள் உள்ளது.விவரம் அறிய கேள்வி கேளுங்கள்..

இந்த பாட்டு படித்தால் -எளிதாக புரியும் ..

ஜாதிக்காய் 

தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய்
ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ 
டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங் 
குலக்கா யருந்துவர்க்குக் கூறு   

ஜாதி பத்ரி

சாதி தரும் பத்திரிக்குத் தாபச் சுரந்தணியும்
ஓது கின்ற பித்தம் உயருன்காண்-தாது விர்த்தி
யுண்டாங் கிரகணியோ டோதக் கழிச்சலறும்
பண்டாங் குறையே பகர்   



Post Comment

ஆண்மை வீர்யம் பெருக்கும் ,காதல் வளர்க்கும் மூலிகைகள் part 3-நில பனை கிழங்கு (படங்களுடன் )



ஆண்மை வீர்யம் பெருக்கும் ,காதல் வளர்க்கும் மூலிகைகள்-நில பனை கிழங்கு (படங்களுடன் )-

botonical name- curculigo orchioides

நிலபனங் கிழங்கு,சீந்தில் சர்க்கரை ,பூனை காலி விதை,நெருஞ்சில்,இலவம்பிசின்,நெல்லிவற்றல் சர்க்கரை ஓர் எடையாய் எடுத்துக் கலந்து வேளைக்கு கால் பலம் வீதம் பாலுடன் உட்கொள்ள ஆண்மை வீர்யம் பெருகும்.




Post Comment