ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )


நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை -நெருஞ்சில் (படத்துடன் ).

botonical name -tribulus terrestris..

செப்பு நெருஞ்சில் திரிதோடம் போக்கிவிடும் 
வெப்பு முதலனைத்தும் வீட்டுங்காண்-செப்பரிய 
சுக்கிலமே கம்போர்க்குந் தொல்லையனல் மாற்றும் 
மிக்கு மருந்துநீ விள் ------அகத்தியர் குணபாடம்


எதிர் அடுக்குகளில் முருங்கையிலைப் போன்று சிறுசிறு இலைகள் கொண்ட தரையோடு படர்ந்து வளரக்கூடிய சிறு கொடி நெருஞ்சில். இதன் மலர்கள் சூரியத்திசையோடு திரும்பும் தன்மை உடையது. முள் உள்ள காய்களை உடையது. செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சிறுநீர், தாதுபலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகி, இரத்தக் கசிவை நிறுத்தும் குணம் உடையது. .
வகைகள் : 1.பெரு நெருஞ்சில் 2. சிறு நெருஞ்சில் 3. செப்பு நெருஞ்சில்
பெருநெருஞ்சில் : இது ஒன்றரை அடிவரை வளரக்கூடியது. இதன் காய்கள் ஏறக்குறைய மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு, எட்டு, முட்கள் நீண்டு இருக்கும். இதன் காயளவு அரை நெல்லிக்காய் அளவில் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.
சிறு நெருஞ்சில் : இது தரையோடு படர்ந்து வளரக்கூடியது. இதன் காய்கள் சுண்டைக்காய் அளவில் மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு எட்டு முட்கள் நீண்டிருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.
செப்பு நெருஞ்சில் : இது தரையோடு படர்வதோடு தரையில் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் முட்கள் இருக்காது. சிவப்பு நிறப்பூக்கள் பூக்கும்
எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிய -கருத்துரையில் கேள்வி கேட்கவும் Post Comment

15 comments:

கருத்துரையிடுக