ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

திருமூலரின் -45 கற்பக மூலிகைகளின் பாடல்

திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும் -

    * "கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
          o கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
    * காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
          o 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
    * கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
          o 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
    * ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
          o ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)

    * "செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
          o 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
    * நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
          o நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
    * பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
          o பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
    * 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
          o மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)

    * "மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
          o 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
    * கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
          o 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
    * கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
          o கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
    * படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
          o 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)

    * "தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
          o தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
    * 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
          o ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
    * பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
          o பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
    * துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
          o சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)

    * "சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
          o சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
    * மத்தான மன்மதன்போல் தேகமாகும்
          o மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
    * எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
          o ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
    * அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
          o அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது மலைகளில்  எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது. விண்வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.

Post Comment

2 comments:

கருத்துரையிடுக