திங்கள், பிப்ரவரி 15, 2010

நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகளின் படங்கள்


யார் சொன்னார்கள் ஆயுர்வேத சித்தா மருந்துகள் தாமதமாக வேலை செய்யும் என்று ?.
ஆங்கில மருந்துகளே தோற்று போய் நிற்கும் மர்ம காய்ச்சல் போன்ற பெயர் தெரியாத காய்ச்சலுக்கு -மூலிகை பெராசிடமாலாக விளங்கும் இந்த நிலவேம்பு கஷாயத்தில் ஒன்பது இந்த மூல பொருட்கள் சேர வேண்டும் .நிலவேம்பு குடிநீர் என்று வெறும் நிலவேம்பை மட்டும் குடித்தால் பலன் கிடைக்காது.எனவே உங்களுக்க்காக ஒன்பது மூலிகை சேர் மானங்களின்  படங்கள் .
இந்த ஒன்பது மூலிகைகளையும் கடைகளில் காயவைத்து விற்பார்கள்.சம அளவில் எடுத்து இதனை குடிநீர் பொடியாக அரைத்து வைத்துகொள்ள வேண்டும்.
இதனை காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடிக்க -வந்த காய்ச்சல் ஓடும்,காய்ச்சல் தடுப்பு மருந்தாகவும் பயன்படும்.காய்ச்சல் வந்த பின் வருகிற உடல் வலிக்கும் கேட்கும்.
ஆயுர்வேதத்தில் இந்த மருந்துகளில் ஆறு மருந்தை மட்டும் வைத்து -ஷடங்க பாநீயம் எனும் கஷாயமாகவும் தருவோம்.
மேலும் சந்தேகங்களுக்கு கேள்வி கேளுங்கள் .
மேலும் எனது http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/blog-post_23.html  பாருங்கள் நிலவேம்பு -Andrographis paniculata


வெட்டிவேர் -vetiveria zizanoides


விலாமிச்சை வேர்-plectranthus vettiveroides
 
சந்தனம் -santalum album

பேய் புடல் -trichosanthes cucumerina

கோரை கிழங்கு -cyperus rotundus root


சுக்கு 
மிளகு 

பற்படாகம்


Post Comment

7 comments:

கருத்துரையிடுக