உண்பது இருபொழுதொழிய முப்பொழுதும் உண்ணோம். உறங்குவது இராவொழியப் பகலுறக்கம் செய்யோம். பெண்கடமை திங்களுக்கு ஓர்கால் அன்றி மருகோம். பெருந்தாகம் எடுத்திடினும் பெயர்த்து நீர்-அருந்தோம். மண்பரவு கிழங்குகளில் கருணை-அன்றிப் புசியோம் வாழை-இளம் பிஞ்சொழியக் கனி-அருந்தல் செய்யோம். நண்பு-பெற உண்டபின்பு குறுநடையும் கொள்வோம். நமனார்க்கு இங்கு-ஏது கவை நாம் இருக்கும் இடத்தே -தேரையர்
பிணி அணுகா விதி
“திண்ண மிரண்டுள்ளே சிக்க லடக்காமற்பெண்ணின்பா லொன்றைப் பெருக்காமல்- உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி.
“பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்;
பகற்புணரோம்; பகற்றுயிலோம்; பயோதரமு மூத்த
ஏலஞ்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்;
இரண்டடக்கோம்: ஒன்றைவிடோம்: இடதுகையிற் படுப்போம்;
மூலஞ்சேர் கறிநுகரோம்: மூத்ததயிர் உண்போம்:
முதனாளிற் சமைத்தகறி யமுதெனினு மருந்தோம்:
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்:
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே”.
“உண்பதிரு பொழுதொழிய மூன்றுபொழு துண்ணோம்:
உறங்குவதி ராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்:
பெண்கடமைத் திங்களுக்கோர் காலன்றி மருவோம்:
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீ ரருந்தோம்:
மண்பரவு கிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்:
வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்:
நண்புபெற வுண்டபின்பு குறுநடையுங் கொள்வோம்:
நமனார்க்கிங் கேதுவை நாமிருக்கு மிடத்தே”.
- பதார்த்த குண சிந்தாமணி
2 comments:
Vilakkam irundhaal naaladhu
Dhayavu seidhu eliya muraiyil vilakkam kodukkavum
கருத்துரையிடுக