திங்கள், பிப்ரவரி 22, 2010

மூளையை தீட்டும் மூலிகைகள் -part 1(படங்களுடன் )



மூளையை தீட்டும் மூலிகைகள் -
உங்களது அறிவுத்திறன் கம்ப்யூடரை விட வேகமாக வேலை செய்ய வேண்டுமா ?
ஆச்சார்யா சரகரின் கூற்றுப்படி ஞாபக சக்தி வளர்க்கும் மூலிகைகளில் மிக சிறந்தது என்று மேத்ய ரசாயனம் என்று குறிப்பிடுகிறார்.
சரக சம்ஹிதை சிகிச்சா ஸ்தானத்தில் (அத்தியாயம் -ஒன்று 3rd part)- 30லிருந்து 31வரை உள்ள பாட்டுகளில் இதை தெளிவாக குறிப்பிடுகிறார்.

 இந்த மேத்ய ரசாயனத்தில் நான்கே மூலிகைகள் உள்ளது .
1.வல்லாரைச் சாற்றை பயன்படுத்துவது .
2.அதிமதுர சூரணத்தை பாலில் கலந்து பயன்படுத்துவது
3.சீந்தில் கொடியின் சாற்றை பயன்படுத்துவது 
4.வெள்ளை சங்கு புஷ்ப செடியின் வேர் பூ காய் இலை இவற்றை கல்கமாக செய்து பயன்படுத்துவது.

இந்த நான்கு வகையிலும் சேர்ந்த சேர்மானமே மேத்ய ரசாயனமாகும் .
 ஆச்சார்யா சரகரின் கூற்றுப்படி அறிவை வளர்க்கும் மூலிகைகளில் வெள்ளை சங்க புஸ்பி யே சிறந்தது ..
இந்த மேத்ய ரசாயனங்கள் ஆயுளை கொடுத்து நோய்களை தணிக்க வல்லது 
வலிவு,பசி,நிறம் குரல் இவற்றை வளர்த்து அறிவையும் வளர்க்கும் 


வெள்ளை சங்கு புஷ்ப செடியின்(ஸ்வேத சங்க புஸ்பி)  வேர் பூ காய் இலை இவற்றை கல்கமாக செய்து பயன்படுத்துவது.ஆச்சார்யா சரகரின் கூற்றுப்படி அறிவை வளர்க்கும் மூலிகைகளில் வெள்ளை சங்க புஸ்பி யே சிறந்தது 



சீந்தில் கொடியின் சாற்றை பயன்படுத்துவது (குடூசி)

'


அதிமதுர சூரணத்தை பாலில் கலந்து பயன்படுத்துவது(மதுயஷ்டி)




வல்லாரைச் சாற்றை பயன்படுத்துவது (.மண்டூக பர்னி)


Post Comment

2 comments:

வடுவூர் குமார் சொன்னது…

Great info.thanks for sharing.

பெயரில்லா சொன்னது…

பாலில் அதிமதுரம் கலந்து குடிப்பது சளித்தொல்லைக்கு நல்லது என்று மூலிகை வைத்தியர் தாத்தா கூறி இருந்தார். அறிவுக்கு நல்லது என்று இன்று தான் தெரியும். பொதுவாகவே வல்லாரையை எங்கள் ஊரில் ஞாபக சக்திக்காக சாப்பிடுவார்கள். அது தவிர வெண்டிக்காயும் நல்லது என்று சொல்லுவார் அந்த தாத்தா.

Please remove the word verification. Thanks

கருத்துரையிடுக