புதன், ஏப்ரல் 12, 2017

உடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள் –ஜூஸ்கள்

உடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள் –ஜூஸ்கள்

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure) .,BAMS.,M.Sc.,MBA

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்கும் என நினைக்கிற வீட்டில் எல்லாம் ஜீஸ் பவுடர் ஒரு வர பிரசாதம், முன்பெல்லாம் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் டப்பா டப்பாவாக வாங்கி வர சொல்லி வீட்டில் எல்லோரும் பருகுகிற பானமாக இருந்த இந்த டே...  ஜீஸ் –இப்போது எல்லா மளிகை கடைகளிலும் எளிதாக கிடைக்கிறது .

சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த ஜீஸ் பவுடரை சாப்பிடாதவரே இருக்க முடியாது ..

உண்மையில் இது என்ன என்று பார்த்தால் .
அழகான பெயின்ட் பவுடர் என்று நாம் அதில் உள்ள சேர்மான பொருட்களை லேபிளை பார்த்தாலே நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்

குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி குறைவு முதல் ,ஞாபக மறதி, பசியின்மை போன்ற சிறிய நோய் முதல் புற்று நோய் வரை வர வைக்க கூடிய பல தீங்கு செய்யும் பொருட்கள் அதனில் உள்ளதை லேபிளை படித்தாலே நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும் .


ஜூஸ் பவுடர்கள் –ஜூஸ்கள் .

பல ஆண்டுகாலம் இந்தியா மற்றும் எல்லா நாடுகளிலும் பல குளிர் பானங்கள் கிடைக்கபெற்றாலும் அவைகளில் டே...  ,ர......போன்ற பவுடர் ஜீஸ் வகைகள் எல்லோருடைய வீட்டிலும் எளிதாக ஆக்கிரமித்துள்ளது . சமிபகாலத்தில் நடந்த ஓர் ஆராய்ச்சியில் இந்த ஜூஸ் பவுடர்களில்  பல தீங்கு பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவற்றுள் சிட்ரிக் அமிலம் Trisodium Citrate, Tricalcium Phosphate, ஸாந்தன் கம், கம் அரபு, பீட்டா-கரோட்டின், போலிக் ஆசிட் மற்றும் பல.


இந்த கட்டுரையில் ஜூஸ் பவுடர்கள்  –அதிலும் டே....க்,   ர..  பற்றி சில தீங்கான உண்மைகளை பற்றி பார்ப்போம்.


ஜீஸ் பவுடர்களில்  சேரக்கூடிய சேர்மான பொருட்கள் ( அவர்கள் லேபிளில் குறிப்பிட்டது போல் )

             சர்க்கரை

             சிட்ரிக் அமிலம்

             Trisodium Citrate

             Tricalcium Phosphate

             ஸாந்தன் கம்

             கம் அரபு,

             சோடியம் Carboxymethyle Cellulose

             வைட்டமின் சி

             உப்பு

             நிறங்கள் டைட்டானியம் டை ஆக்சைடு / Tatrazine / Sunset மஞ்சள் FCF

             பீட்டா-கரோட்டின்

             போலிக் ஆசிட்

             வைட்டமின் B2


1.            சர்க்கரை

ஜீஸ்களில்  முக்கிய மூலப்பொருள் சர்க்கரை. சர்க்கரை நமது உடல்த்திற்கு எவ்வளவு கேடு என்பது நமக்கு தெரியும். அதனால் அதை பற்றி பேச அவசியம் இல்லை..


2.            சிட்ரிக் அமிலம்

பொது பல் மருத்துவ அகாடமி படி, ஹைட்ரோ க்ளோரிக் அல்லது கந்தக அமிலம் விட சிட்ரிக் அமிலம் பல் எனாமலுக்கு மிகவும் கேடு.இப்போது கிடக்கிற இந்த சிட்ரிக் அமிலம் முழுக்கு முழுக்க ஆய்வகத்தில் தயாரிக்கபடும் ஒரு வேதியியல் கலவை .

3.            Trisodium Citrate

அளவுக்கு அதிகமான ஓர் சேர்க்கை உறுப்பான Trisodium Citrate உபயோகிப்பதனால் சிறுநீரக சீயழிலப்பு ஆபத்து அதிகரிக்கபடுகிறது. மேலும் சில மக்களுக்கு ஓவ்வாமை எதிர்வினைகளுக்கும் ஏற்படலாம். நிச்சயமாக கர்ப்பிணி பெண்களும் ,குழந்தைகளும் இதை பயன்படுத்தவே கூடாது .

4.            Tricalcium Phosphate


இது ஒரு ரசாயன் சேர்மம் ஆகும். ஜீஸ்களில்   சேர்க்கப்படும் Tricalycium பாஸ்பேட், பெரும் அளவில் சொப்புகள், சோப்பு பவுடர் மற்றும் பிற சுத்தம் செய்யப்படும் பொருட்களில் அதிகமாக பயன்படுத்தபடுகிறது.

இதனால் சிறுநீர் அதிகரித்தல், உலர் வாய், தாகம் அதிகரித்தல், பசியின்மை, மலச்சிக்கல், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். புற்று நோய் கூட உருவாகும் .மூத்திரப்பை சார்ந்த நோய்கள் எளிதாக உருவாக காரணமாகும் இந்த பெயின்ட் பவுடர் .

5.            அஸ்பார்டேம்

இது ஜீஸ்களில்  உபயோகிக்கும் ஓர் செயற்கையான. இனிப்பு இது தொடர்ந்து பயன்பத்துவதன் மூலம் மூளை திசுக்களின் துளைகள் ஏற்படலாம் . கர்ப்பமான பெண்கள் இதை அருந்துவதால் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு மூளை மற்றும் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது, மேலும் இது வலிப்பு, தலைவலி, ஒற்றைத்தலைவலி, சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்று நோயை கருவில் விளைவிக்கிறது.

இந்த மூலக்கூறான அஸ்பார்டேம் முற்றிலும் சந்தையில் இருந்து அகற்றபட்ட வேண்டியது அவசியம். தற்போது இது ஆரஞ்சு கலந்த ஜீஸ்களில்  காணப்படுகிறது.

6.            அக்சல் ப்ளேம் பொட்டசியம் (Acesulfame Potassium)

FDA ஒப்புதலின் படி இந்த செயற்கையான இனிப்பை ஜீஸ் பவுடர்களில் பயன்படுத்தப்படுகிறது என்பது ஓர் கேள்விக் குறியாகவே உள்ளது. சமிபத்தில் நடந்த ஓர் ஆய்வின் படி இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றது என்று கூறபடுகிறது.

மேலும் ஆராய்ச்சியின் படி இது மார்பக மற்றும் நுரையிரல் கட்டிகள், நாள்ப்பட்ட சுவாச நோய் மற்றும் லுகேமியா நோய் வருவதற்கு இது வழிவகுக்கின்றது. ஜீஸ் பவுடர்களில் இந்த ரசாயனம் பயன்படுத்தபடுகிறது.

7.            Maltodextrin

இது ஜீஸ் பவுடர்களில்  ஒரு கைட்டிதன்மைக்காக பயன்படுத்தபடுகிறது. இது பல பக்க விளைவுகள் கொண்டவையாகும். மனிதன் இதை உட்க்கொள்ளும் அளவை பொறுத்து mild முதல் கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும் மேலும் இது நமது ஆரோகியதிற்கு ஆபத்தானது.

8.            ஸாந்தன் கம்

இதை பயன்படுத்துவதால் குடல் சார்ந்த விளைவுகள், ஏற்பட காரணமாக உள்ளது. ஜீஸ் பவுடர்களில்  இதை பயன்படுத்துவதால் குடல் சார்ந்த சிக்கலான வயிரறு வலி, மலச்சிக்கல், வீக்கம் மற்றும் தோல் எரிச்சல், தலைவலி, மூக்கு, தொண்டை மற்றும் நுறையீரல் எரிச்சல், வயிறு வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

9.            கம் அரபு (Gum அரபிக்)

இது ஒரு கெட்டி தன்மைக்காக கம் அரபு ஜீஸ் பவுடர்களில் பயன்படுத்தபடுகிறது. இதை பயன்ப்படுதுவதால் கொழுப்பு, ஒவ்வாமை, சுவாச பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகங்கள், கல்லீரல் சேதப்படுகிறது.

10.          சோடியம் Carboxymethyle Cellulose

இந்த மூலபொருள் மட்டும் பாதுகாப்பானது. மேலும் இதுவும் கனம் இரசாயன கலவை தான்.

11.          டைட்டனியும் டை ஆக்சைடே

இது நிறத்திற்காக ஜீஸ் பவுடர்களில் பயன்படுத்தபடுகிறது. தொழில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு படி இது மனிதனின் புற்று நோயை உருவாக்குகிறது

12.          Sunset Yellow FCF

இந்த நிறமி பெரும் மக்களுக்கு ஒரு ஓவ்வாமையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆஸ்பிரின் ஒவ்வாமை. உலக சுகாதார அமைப்பின்படி, இதனை நுகர்வதாலே  கட்டிகள் அதிகரிக்கும் தன்மை உண்டாக்குகிறது என்கிறது ஆய்வு ..அப்படியானால் இதை அருந்துபவர்கள் கதி ?

13.          Tartrazine

Tang இல் உபயோகிக்கப்படும் செயற்கை நிறமான மஞ்சள் #5”. இதனை Tartrazine என்று கூறலாம். மேலும் இது சுவாச பிரச்சனை மற்றும் Hyperactivity போன்றவை அதிகரிக்க மிக முக்கிய காரணமாய் அமைகிறது

14.          வைட்டமின்கள்.

செயற்கையான பல வைட்டமின்கள் உள்ளடக்கியது..இதை பருக இயற்கையான பானங்களில் உள்ள வைட்டமின்களை கிரகிக்கும் தன்மையை உடல் இழந்து விடும்.


இந்த டே..,ர.. ஜீஸ் பவுடர்கள் இயற்கையான சிட்ரஸ் உள்ளடக்கிய ஜீஸ் பவுடர் அல்ல .செயற்கையான எசன்ஸ் கலந்த ,ஆய்வகத்தில் உண்டாக்கிய மிக மோசமான விளைவுகளை உருவாகும் ஒரு மிக மோசமான் பவுடர் பெயின்ட்டே ஆகும்

ஜீஸ் பவுடர்கள் அனைத்து சுகாதார இயற்கை சிட்ரஸ் நன்மைகள் கொண்ட Orange சாறு அல்ல; இது ஆரஞ்சு போன்ற சுவை வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பானம் ஆகும்.

இந்த கட்டுரை மொழியாக்கத்தில் உதவியர் டாக்டர்..வர்தினி BHMS

உடலுக்கு கேடான உணவு என்கிற போர்வையில் ஒளிந்துள்ள போலிகளை கண்டறிய ,சிறந்த ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000  (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை )

Post Comment

0 comments:

கருத்துரையிடுக