வெள்ளி, ஏப்ரல் 21, 2017

உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..

உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..
டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure).,BAMS.,M.Sc.,MBA

ஆயுர்வேத மருந்து சாபிட்டால் கிட்னி பெயிலியர் ஆகி விடுமா சார்  என்று கேட்கும் பல நோயாளிகள் இங்கே உள்ளனர்.நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத ,சித்த மருந்துகளை நோயாளிக்கு பரிந்துரைத்தால் நோயாளிகள் நம்மிடம் கேட்கும் முதல் கேள்வி பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா சார் ? அவர்களுக்கு நாம் பொறுமையாக எப்போதும் சொல்வது –நிச்சயம் இல்லவே இல்லை .தகுதி வாய்ந்த மருத்துவர் ,தகுதி வாய்ந்த மருந்துகளை ,எப்படி சாப்பிட வேண்டும் ,எவ்வளவு அளவு எடுத்து கொள்ள வேண்டும் ,எந்த அனுபானத்துடன் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை பொருத்து மருந்துகளின் நல்ல விளைவுகளில் நோயின் நிவாரணம் இருக்கிறது .



கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ,மருத்தவரின் எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் மெடிகல் ஷாப்பில்,பல சமயங்களில் மளிகை கடைகளிலும் கிடைக்க கூடிய ஆங்கில மருந்தை எடுத்து கொள்ள கூடிய மக்களை நினைத்து ஒரு ஆச்சர்யம் ஏற்படத்தான் செய்கிறது..

இன்றைக்கு உள்ள கஷ்டம் நீங்கினால் போதும் –நாளை என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் தான் பல நோயாளிகள் –ஆங்கில மருந்தை எடுத்து கொண்டு உள்ளார்கள் ..உண்மையில் அவர்கள் மனதில் ஆங்கில மருந்து ஆபத்து இல்லை என்ற எண்ணம் உள்ளது என்றே தோன்றுகிறது.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து ,அந்த சோதனை ,இந்த சோதனை என்று பல அறிவியல் அணுகு முறைக்கு மேலே தான் ஒரு ஆங்கில மருந்து உருவாக்கபடுகிறது. பல ஆண்டுகள் மக்கள் பயன்படுத்திய பின்னரும் அவர்களது ஆராய்ச்சிகள் தொடர செய்கிறது.ஆனால் பக்க விளைவுகள் உள்ளது என்று பின்னர் அதே மருந்தை தடை செய்ய வேண்டும் என்றும் திடீர் என்று சொல்லி விடுகிறார்கள். தடை என்று சொன்ன அதே மருந்துகள் இந்தியாவில் மட்டுமே தாராளமாக கிடைக்கிறது. மருந்து கம்பெனிகளின் வணிக முறைகள் நினைத்தால் ஒரு போரை விட பயங்கரமாக உள்ளது ..என்ன செய்ய

கடந்த சில வருடங்களில் உலகம் எங்கும் தடை செய்யபட்ட ஆங்கில மருந்தின் எண்ணிக்கை முன்னூறுக்கும் மேலே ..அவை எல்லாம் சரியான பல வருட ஆராய்ச்சிக்கு பின் தான் வெளிவந்துள்ளது என்பது தான் ஆச்சர்யமான தகவல் .




மருந்துகளின் combination என்ற ஒரு நிலை இந்தியாவில் மட்டுமே தான் அதிகம் உள்ளது . ஒரு மருந்தோடு இன்னொரு மருந்தை இணைத்து ஒரு மருந்தாக்கும் இந்த combination நிலை எல்லாமே ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்த படவே இல்லை என்பது தான் உண்மை .இந்திய அரசாங்கமே முன்னூறுக்கும் மேற்பட்ட Combination அங்கில மருந்தை தடை செய்துள்ளது –அதை அரசு gezzetலும் வெளி விட்ட பின்னும் அவை மிக மிக தாராளமாக கிடைக்க செய்கிறது


இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகிறது. ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.

பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? முன்னூறுக்கும்  மேலே ..


சரி, இப்போது அதில் சில மருந்துகளை அவை என்ன என்ன மருந்துகள் என்று  பார்ப்போம்.

1 . அனால்ஜின் ( Analgin) பயன்பாடு வலி நிவாரணி
பக்க விளைவு எலும்பு மஜ்ஜை சீர்கேடு

2 . நிமிசுலைட் (Nimisulide) பயன்பாடு வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு கல்லீரல் செயல் இழப்பு

3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine பயன்பாடு சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்

4 . சிசாபிரைடு ( cisapride ) பயன்பாடு மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்துவது.
பக்க விளைவு இதயத் துடிப்பு சீர்கேடு

5 . குயிநோடக்ளர் (quinodochlor ) பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு கண்பார்வை பாதிப்பு

6 . பியுரசொளிடன் (Furazolidone ) பயன்பாடு வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு புற்றுநோய்

7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone ) பயன்பாடு கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு புற்றுநோய்

8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone ) பயன்பாடு வலி நிவாரணி
பக்க விளைவு எலும்பு மஜ்ஜை சீர்கேடு

9 . பைப்பரசின் ( Piperazine ) பயன்பாடு வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு நரம்புச் சிதைவு

10 . பினப்தலின் (Phenophthalein ) பயன்பாடு மலமிலக்கி
பக்க விளைவு புற்றுநோய்

சரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா

1 . அனால்ஜின் – Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் – D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் – Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் – Entero quinol

இதைத்தான் நம் சில ஆங்கில மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நோயாளிகளே  வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்து விடுகிறார்கள் . நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் , சில மருத்துவர்களுமேதான். 

ஒட்டு மொத்த ஆங்கில மருத்துவர்களை குறை சொல்லவே முடியாது. மிக சில நாட்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கும் பல ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்தைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பல ஆண்டுகள் ஒரு துளி பயமும் இன்றி மெடிகல் ஷாப்பில் எடுத்து கொள்ளும் நோயாளிகளே இந்தியாவில் மிக மிக அதிகம்

தேவை விழிப்புணர்வு –
மருந்தின் அட்டைபெட்டியில் ஆபத்து என்று போட தேவை இல்லை ...உள்ளே வைக்கும் மிக மிக மிக சிறிய பேப்பரில் மிக மிக மிக பொடி எழுத்தில் இந்த மருந்து ஆபத்து விளைவிக்கும் என்று சொன்னால் போதும் என்று இங்கே ஆட்சியாளர்களே  –மருந்து கம்பெனிகளின் வேலையாட்களாய் மாறிய இந்தியா தான் என்னை போன்ற சராசரி மக்களை பயமுறுத்துகிறது.

இந்தியா நமது தாய் நாடு என்றால் ..இந்திய மருத்துவமே நமது தாய் மருத்துவம் .தாய் மருத்துவம் முதலில் நாடுவோம் ..அதையும் தரமான படித்த அனுபவும் வாய்ந்த அல்லது உண்மையில் மருத்துவ பாரம்பரிய மிக்க மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதில் தவறு இல்லை என்பது எனது தனிபட்ட கருத்து..போலி மருத்துவரிடம் ,போலி மருந்துகளிடம் ,தடை செய்யப்பட அங்கில மருந்துகளிடம் நாம் எச்சரிக்கையாய் இருப்போம்

தரமான இந்திய மருத்துவ சிகிச்சைக்கு ,தரமான் தாய் மருத்துவ சிகிச்சைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை #அல்_ஷிபா_ஆயுஷ்_மருத்துவனை
#கடையநல்லூர் 90 4222 5333
#திருநெல்வேலி 90 4222 5999
#ராஜபாளையம் 90 4333 6888
#சென்னை 90 4333 6000


Post Comment

0 comments:

கருத்துரையிடுக