மீள முடியா பாதிப்பை ஏற்படுத்தும் தலைமுடி
சாயங்கள் (ஹேர் டை ஓர் எச்சரிக்கை )
டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA
&
டாக்டர் வர்தினி .,BHMS
முடி சாயம் பூசினால் ஆயுள் முடிந்தே போகும் -Hair
Dye
மனிதனில்
யாருக்கு தான் ஆசை இல்லை. நாம் இளமையாக இருக்க வேண்டும் என்று...
என்ன தான் அழகாக
இருந்தாலும் 20 வயதில் நரைமுடி
வந்துவிட்டால் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நமக்கு வயதாகி விட்டதோ என்ற கவலை தோன்றிவிடும். அதை
மறைக்க நாம் தேர்ந்தெடுப்பது தான் Hair Colouring. இன்னும் சிலர் இந்த Hair Colour-ஐ புற அழகு தோற்றத்திற்காகவும்
பயன்படுத்துகிறார்கள்.
இந்த Hair Colour-ஐ பயன்படுத்தி நம் விருப்பம் போல் எந்த
நிறத்திலும் தலை முடியை வண்ணமயமாக்கலாம். ஆனால் இந்த Hair Dye நமக்கு எவ்வளவு கேடு என்பது எத்தனை பேருக்கு
தெரியும். அதை பற்றி தெரிந்தாலும் நாம் அதை பற்றி கவலை படுவதில்லை.
Hair Dye-ல்
பயன்படுத்தப்படும் சில முக்கியமான பொருட்கள் :-
Ammonia –அம்மோனியா
அதிக விலையில்
கிடைக்ககூடிய Hair Dye-ல் Ammonia
இல்லை என்று
குறிப்பிடுவார்கள் ஆனால், அது அத்தனையும்
பொய்யே காரணம் Ammonia இல்லாத Hair
Dye-யே கிடையாது. இதிலில்
ஆச்சரியம் என்னவென்றால் Hair Dye –ன் முக்கிய
மூலக்குறே Ammonia தான். Ammonia
பயன்படுத்துவதால் தோள், கண், தொண்டை எரிச்சல், கண்களில் நீர் வழிதல், நுரையிரல் எரிச்சல் போன்றவை உண்டாகும்.
Resorcinol
இது ஒரு பொதுவான
மூலப்பொருள் ஆகும். இது தலை முடிக்கு நிறத்தை மட்டுமல்லாது ஒவ்வாமையையும் அளிக்க
வல்லது மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நஞ்சு தன்மையை உண்டாக்குகிறது.
PPD (Para-Phenylenediamine)
முடிக்கு அழகான வண்ணங்களை தரவல்லது இந்த PPD.
ஆனால் இதனால் வரும்
விளைவுகளோ பற்பல. இதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமா, குடல் புண், சிறுநீரக செயலிழப்பு, தலைசுற்றல், நடுக்கம், வலிப்பு மற்றும் கோமா ஏற்பட அதிக
வாய்ப்புள்ளது.
Ethanol Alcohol
இது சாய
உறிஞ்சிதல் செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. இதை Alcohol Denat எனப்படுகிறது. இது செயற்கையாக இருக்கும்
நிறத்தை மாற்றத்தக்கது.
Parabens
இது பாக்டடிரியா மற்றும் புஞ்சை வளர்ச்சியை
தடுக்க பயன்படுத்தபடுவதாகும். மேலும் இது நாளமில்லா சுரபிக்கு ஆபத்து தரவல்லது.
ஆக, இவ்வளவு கலவையை சேர்த்த Hair Dye பயன்படுவதனால் புற்றுநோய் வரையிலான அனைத்து
பாதிப்புகளும் உண்டாக்கும்.
இயற்கை நிலையானது
இதை உணர்ந்த மக்கள் மருதாணி இலையை பயன்படுத்துவர்.
ஆனால், இன்று அந்த மருதாணி இலையை
பறித்து அரைப்பதற்கு நேரமின்றி பாக்கெட்டில் கிடைக்ககூடிய “Henna” வை வாங்கி பயன்படுத்துகிறோம் ஆனால் அதுவும்
ரசாயன கலவையே.!
வெளுத்ததெல்லாம்
பால் என்று ஆகுமா.? அது போல் தான் Organic
கடைகளில் கிடைக்கும் Henna-வும் கலப்படமே.
` இயற்கை அழகானது
அது நமக்கு அனைத்து நன்மைகளும் தரவல்லது. ஆனால் நாம் தான் அதிலிருந்து பயன்பெற
மறுக்கிறோம்.
உண்மையில் இயற்கை
ஹேர் டை என்று பாக்கெட்டில் அடைத்து விற்பதில் –மார்கெட்டில் கிடைக்கூடிய ஹேர்
டை-இயற்க்கை என்று பொய்யை சொல்லி தான் விற்கிறார்கள் ..இயற்கை ஹேர் டை ரெடிமேட்
பாக்கெட்களில் வராது .
Hair Dye என்பது அழகிற்காக பயன்படுத்துவதே. அதனால் அதை
தவிர்த்து, அது உடல்
நலத்திற்கு கேடு விளைவிக்க உள்ளது என்பதை உணர்ந்து, இயற்கை தரும் பொருட்களை பயன்படுத்துங்கள்.
முடி சார்ந்த
பிரச்சனைகளில் வரும் முன் காக்க –தக்க ஆலோசனை பெற ஒருங்கிணைந்த பாரம்பரிய
சிகிச்சைக்கு ஆலோசனை பெற
அல் ஷிபா ஆயுஷ்
மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை )
0 comments:
கருத்துரையிடுக