வியாழன், ஏப்ரல் 13, 2017

உணவில் நிறம் –உயிருக்கு விஷம்

உணவில் நிறம் –உயிருக்கு விஷம்

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA &
டாக்டர். வர்தினி .,BHMS

உணவில் நிறம் –உயிருக்கு விஷம் -Food Dye
கவர்ச்சியான வண்ணமயமான உணவுகளை சாப்பிட ஆசையா.?
கண் கவரும் உணவுகளை பார்பதற்கு அழகாக இருந்தாலும் அது நமது உடலுக்கு கேடு விளைவிபதாக உள்ளது.
உணவின் நிறத்தை கூட்டுவதால் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிடுவார்கள் என்று நினைத்து நாம் வீட்டிற்கு நோயை கொண்டு வருகிறோம்.

உணவில் சேர்க்கப்படும் சில வண்ணங்கள் :-

Blue-1 (Brilliant Blue)

இந்த Brilliant Blue வை பற்றி மருத்துவரீதியான ஆராய்ச்சின் மூலம் சில எலிகளுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது இதன் மூலம் கண்டறியப்பட்டது என்னவென்றால் இதனை உட்கொண்ட எலிகளுக்கு சிறுநீரக கட்டிகள் ஏற்பட்டுள்ளது. எலிகளுக்கே இப்படியானால் மனிதர்களாகிய நமக்கு.?
இந்த நிறங்கள் பானங்களில், மிட்டாய்களில், தானியங்கள், மருந்துகள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிற பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த Brilliant Blue France, Finland போன்ற நாடுகளில் பயன்படுத்த அங்கிகரிக்கப்படவில்லை.


Blue-2 (Indigo Carnine)


இது குறிப்பாக வண்ண பானங்களில், மிட்டாய்களில், டப்பா உணவுகள் மற்றும் மருந்துகளில் காணப்படுகிறது. இதனால் கட்டிகள், மூளைச்சிதைவு ஏற்படுகிறது.
 இது Norway நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது.


Citrus Red 2இது சிறுநீரகத்தில் கட்டிகளை உருவாக்கும் தன்மை உடையது. இது குறிப்பாக பழங்களை பளபளப்பாக புதிது போல் வைக்க பயன்படுத்துவார்கள்.
  இது United States Of America வில் தடைசெய்யப்பட்டுள்ளது.


Green 3 (Fast Green)


 இதனால் சிறுநீர்ப்பையில் கட்டி மற்றும் விதை வீக்கம் ஏற்படுகிறது. இவை மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மை.
இவை குறிப்பாக அழகு சாதன பொருட்கள், மிட்டாய், ஐஸ், சமையலறை பொருட்கள், மருந்துகளில் காணப்படுகிறது.
இது ஐரோப்பிய நாடுகளில் (Europe) தடைசெய்யப்பட்டுள்ளது.


Red 3 (Erythrosine) இந்த Red 3 (Erythrosine) வை பற்றி மருத்துவரீதியான ஆராய்ச்சின் மூலம் சில விலங்குகளுக்கு  சாப்பிட கொடுக்கப்பட்டது இதன் மூலம் கண்டறியப்பட்டது என்னவென்றால் இதனை உட்கொண்ட விலங்குகளுக்கு தைராய்ட் புற்றுநோய் வருவது கண்டரியப்பட்டுள்ளது.

FDA 1990 களில் அழகு சாதன பொருட்கள் மற்றும் வெளிப்புற செயற்கை பொருட்களில் பயன்படுத்த அங்கீகாரம் தடைசெய்யப்பட்டது.

இருப்பினும் இதை சார்ஸ், சிசஜ், மருந்து, செர்ரிகள் (Cherry Fruit), Baked Food மற்றும் மிட்டாய்களில் பயன்படுத்தப்படுகிறது.

இதனை பல முறை FDA தடை செய்ய முயன்றும் பலன் இல்லை என்பது மிகவும் வருந்தக்கூடிய ஒன்று ஆகையால் இதனை நாமே விளக்கி வைப்பது நன்று.Red #40 (Allura Red) இது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சாயமாகும் . இந்த Red #40 (Allura Red) வை பற்றி மருத்துவரீதியான ஆராய்ச்சின் மூலம் சில எலிகளுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது இதன் மூலம் கண்டறியப்பட்டது என்னவென்றால் இதனை உட்கொண்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையப்பட்டதை கண்டறிந்தனர். மேலும் இதனை சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதை பானங்களில், பேக்கரி பொருட்கள், இனிப்பு பொருட்கள், மிட்டாய்கள், தானியங்கள், உணவுகள், மருந்துகள் மற்றும் அழகு சம்மந்தமான பொருட்களில் உபயோகப்படுகிறது.


Yellow #5 (Tartrazine)


இதனை உட்கொண்டால்  நமக்கு உணர்திறன் குறைபடுதல் (Sense), Hyperacitivity, Behavioral Effect போன்றவை ஏற்படும்.
இதை நமது செல்லபிராணி உணவுகள், பேக்கரி பொருட்கள், இனிப்பு பொருட்கள், மிட்டாய்கள், தானியங்கள், ஜெலட்டின் இனிப்புகள், உணவுகள், மருந்துகள் மற்றும் பல அழகு சம்மந்தமான பொருட்களில் பயன்படுத்தபடுகிறது.
இது Norway நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது.


Yellow #6 (Sunset Yellow)


இது விலங்குகள் அட்ரினல் கட்டிகள் மற்றும் அதிக உணர்திறன் குறைவு ஏற்படுகிறது.
இதை பேக்கரி பொருட்கள், சாஸ், இனிப்பு பொருட்கள், மிட்டாய்கள், தானியங்கள், ஜெலட்டின் இனிப்புகள், உணவுகள், மருந்துகள் மற்றும் பல அழகு சம்மந்தமான பொருட்களில் பயன்படுத்தபடுகிறது.
இது Norway மற்றும் Swedan நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது.
உணவில் சேர்க்கப்படும் இந்த செயற்கையான நிறங்கள் பார்பதற்கு அழகாக இருந்தாலும், இது நஞ்சு பொருட்களே.!

இதை உபயோகிக்க நமது நாட்டில் அங்கீகாரம் தராவிட்டாலும் நமது உணவுகளில்  இது பெரும் அளவில் பங்கு  வகிக்கிறது.

அழகிற்காக உணவில் வண்ணங்களை பயன்படுத்துவதால் புற்றுநோய், தைராய்ட் கட்டிகள், Bladder Cancer, சிறுநீரகம் மற்றும் அட்ரினல் கட்டிகளால் நாம் பாதிக்கப்படுகிறோம்.

உணவு என்பது நாம் உயிர் வாழ்வதற்காக சாப்பிடுவதே தவிர அழகிற்காக இல்லை.

உணவில் நிறத்திற்கு செயற்கையான நிறங்களை தவிர்த்து, இயற்கையான நிறங்களை பயன்படுத்தவும்.

அவைகளில் சில :-

Blue - Bluberries
Yellow - Carrot, Paprika Powder
Red - Tomato Juice, Red Carrot
Green – Greens, Spinach

செயற்கையான உணவுகளை தவிர்த்து இயற்கையான உணவுகளை உண்டு, நோயின்றி வாழ வாழ்த்துகிறோம்.

இயற்கையான வாழ்வியல் கோட்பாடுகளுடன் நோயை வேரிலிருந்து களைய மருத்துவ ஆலோசனைக்கு –சிறந்த ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சைக்கு-
அல்_ஷிபா_ஆயுஷ்_மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000( ஹெர்ப்ஸ்ஹீல்ஸ் மருத்துவமனை )

Post Comment

0 comments:

கருத்துரையிடுக