கர்ப்பிணிகளுக்கு ஆயுர்வேதம் சொல்லும்
அறிவுரைகள்
டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.M.Sc.,MBA
டாக்டர் .ஜீவா .,BAMS
டாக்டர்.கீர்த்திகா .,BAMS
இயற்கை முறையில் கர்ப்பத்தை காப்போம்
பெண்களின் அடுத்த பிறவியாக கருதப்படும் பிரசவமானது இன்றைய காலத்தில் பணம்
பறிக்கும் தொழிலாக மாறிவிட்டது. பெண்கள் நாட்டின் கண்களாக கருதப்படுபவர்கள். ஆனால், இக்காலக்கட்டத்தில் பெண்களே, கண்மூடித்தனமாக
தேவையற்ற மருந்து, மாத்திரைகளை கர்ப்பகாலத்தில்
பயன்படுத்துகிறார்கள்.
நம் முன்னோர்களின் காலத்தில் எவ்வித மருந்து மாத்திரைகளும் இல்லாமல் இயற்கை
உணவு முறைகள் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலமாக நான்கு ஐந்து
குழந்த்தைகலானாலும் சுகப்ரசவமாகவே அமைந்தது.பிரசவத்திற்கு பிறகும் தாயும் சேயும்
எவ்வித குறைபாடும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
நவீன காலக்கட்டத்தில் உதாரணமாக கர்பிணி பெண்களில் multivitamins மாத்திரைகள் உட்கொள்ளாதவர்களை காண்பது மிக அரிது. ஆனால் தேவியற்ற பல இம்மாத்திரைகளால் தாய்க்கோ அல்லது
சேய்க்கோ எவ்வித ஆரோக்யமும் பலனும் கிடைப்பதில்லை.
இவ்வாறு தேவையின்றி பணத்தையும் காலத்தையும் வீணாக செலவிட்டாலும்
இக்காலத்தில் pre eclampsia,வரம்பு மீறிய கருவளர்ச்சி(Restricted
Fetal Growth),நரம்பு குழாயில் குறைபாடு(Nural Tube
Defect ),எலும்புகளில் குறைபாடு (Skeletal
Deformity ),குறைந்த எடைகொண்ட குழந்தை (Low Birth
Weight) ஆகிய பாதிப்புகள் நாளுக்கு நாள்
பெருகிக்கொண்டேதான் வருகிறது.
அம்மாவாக போகிற தாய்மார்களின் கனவு
எல்லாம் –நல்ல அறிவான ,அழகான ,ஆரோக்யமான குழந்தை –அதற்காக எதை வேண்டுமானாலும்
செய்ய தயாராக உள்ளார்கள் ..வெறும் மதர் ஹார்லிக்ஸ் சாப்பிட்டால் போதும் என்கிற மன
நிலைக்கு இன்றைய விளம்பரங்கள் நம்மை புத்தி மழுங்க செய்து விட்டது.
ஆயுர்வேதம் என்கிற வாழ்கை அறிவியல் –கரு
தரித்த நாள் முதல் சுக பிரசவம் வரை செய்ய வேண்டிய வழிமுறைகளை தொகுத்து
வழங்கியுள்ளது..ஆங்கில மருத்துவ பரிசோதனைகள் நாம் ஒட்டு மொத்தமாக தவிர்க்க
முடியாது என்றாலும் –தேவை இல்லாமல் பல பரிசோதனைகள் –தேவை இல்லாத மருந்துகள்
எடுப்பதற்கு வழி வகுக்கும் என்பதை மறந்து விட கூடாது .
அம்மாவாக போகிறவர்களுக்கு ஆயுர்வேதம்
சொல்கிற வாழ்வியல் –உணவியல் ஆலோசனைகள்
ஆரோக்ய குழந்தை பெற மாதா மாதம் கர்ப்பிணிகளுக்கான
உணவு முறைகள் -ஆயுர்வேதம் சொல்வது என்ன ?
ஆயுர்வேத ஆச்சர்யாக்களின் கூற்றுப்படி மாசானுமாசிக பத்தியம்
ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணி பெண்கள்
உட்கொள்ள வேண்டிய ஆயுர்வேத உணவு முறைகள் :-
முதல் மாதம் :-
பால்,இனிப்பான குளிர்ச்சியான திரவ உணவுகள்,அதிமதுரம் + வெண்ணெய் சேர்த்து உண்ணவேண்டும், குறுந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும் .கருப்பு உலர் திராட்சை
பருகலாம்.ஆச்சார்யர் சரகர் எதையும் கலக்காத தூய்மையான பாலை காய்ச்சி குளிர செய்து
தக்க அளவில் அடிக்கடி பருக சொல்கிறார்
இரண்டாவது மாதம் :-
இனிப்பு சுவைக்கொண்ட மூலிகைப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட பாலினை
உட்கொள்ள வேண்டும்,இனிப்பான பாலில் காகோலி சேர்த்து பருக
வேண்டும்,லக்ஷண மூலிகையின் பால் கஷாயம் பருக
வேண்டும்.காகோலி மூலிகை கிடைக்காதவர்கள் சதாவரியை பயன்படுத்தலாம்
மூன்றாவது மாதம் :-
பாலில் தேன் மற்றும் நெய் சேர்த்து பருக வேண்டும்.
சிறு நாகபூ நாட்டு சர்க்கரையுடன் பால் கஷாயம் செய்து பருக வேண்டும்.
நான்காவது மாதம் :-
பால்,வெண்ணெய்,குறுவை அரிசி,தயிர்,மாமிச ரசம்,ஓரிலை பால் கஷாயம் ஆகியவற்றை பருக
வேண்டும் .
ஐந்தாவது மாதம்:-
வெண்ணையை உருக்கி எடுத்த நெய்,குறுவை அரிசி,மாம்சரசம்,பால்,நெய்,சீந்தில் பால் கஷாயம் ஆகியவற்றை பருக
வேண்டும் .பாலில் இருந்து எடுத்த வெண்ணெயை ஒரு கவள அளவு அருந்த வேண்டும் .
ஆறாவது மாதம் :-
நெய்யில் செய்த இனிப்பு பண்டங்கள்,நெருஞ்சில்
மூலிகையை நெய்யுடன் சேர்த்து எடுக்க வேண்டும், ஓரிலை பால் கஷாயம் செய்து
பருக வேண்டும்.
பாலில் இருந்து எடுத்த வெண்ணையில்
தயாரான நெய்யை இனிப்பு மருந்துகளுடன் கலந்து பக்குவம் செய்து அந்த நெய்யை பருக
வேண்டும்
ஏழாவது மாதம்:-
விதாரிகந்த முதலிய மூலிகைகளை நெய்யுடன் சேர்த்து உண்ண வேண்டும்,பார்லி அரிசி, கோதுமை பால் கஷாயம் ஆகியவற்றை உண்ண வேண்டும்
.
ஏழாவது மாதத்தில் ஆறாவது மாதத்தில்
சொன்ன அதே நெய்யை பருக வேண்டும்
எட்டாவது மாதம் :-
கஞ்சியுடன் பால் சேர்த்து உண்ண வேண்டும்.
குறுந்தொட்டி முதலிய மூலிகைகளைக் கொண்டு கஷாயவஸ்தியும், மதுர கன திரவியங்களில் ஸ்நேகங்களைக் கொண்டு அனுவாசன வஸ்தியும்
மேற்கொள்ள வேண்டும்.
மூர்வா அல்லது குருந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும்.
ஒன்பதாவது மாதம்:-
நெய் சேர்த்த அரிசி கஞ்சி,மாம்ச ரசம் ஆகியவற்றை பருக வேண்டும். குருந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும்.
அனுவாசன வஸ்தி,யோனி பிச்சு ஆகியவற்றை மேற்கொள்வதன்
மூலம் வலியற்ற சுகப்ரசவம் நடைபெறும்.
கர்பகாலத்தில் தவிர்க்க வேண்டியவை :-
காரமான குளிர்ச்சியான உணவு வகைகள்.
கடினமான உடற்பயிற்சி.
உடலுறவு கொள்ளுதல்.
தொலைதூர பயணம்.
பகலில் உறங்குவது.
இரவில் கண்விழித்தல்.
இயற்கை உபாதைகளை அடக்கி வைத்தல்.
அதிக எடையினை சுமத்தல்.
சிவப்பு நிற ஆடைகளை அணிவது.
அதிக நேரம் நிமிர்த்து படுத்திருப்பது .
இறுக்கமான ஆடைகளை அணிவது.
விரதம் இருப்பது.
கோபம்,துக்கம்,பயம்.
இனிவரும் கர்ப்பங்கள் அனைத்தும்
ஆரோக்கியமாக இவ்வுலகில் கால்பதிக்க ஆயுர்வேத மருத்துவத்தை பின்பற்றுவீர்.
தரமான ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை –ஆங்கில
மருந்துகளோடும் தொடரலாம். தேவையான மருந்து எது ,தேவையற்ற மருந்து எது என்றும்
ஆலோசனை பெற்று ,ஆயுர்வேத முறைப்படி அழகான ஆரோக்ய குழந்தை பெற ஆலோசனைக்கு –அல் ஷிபா
ஆயுஷ் மருத்துவனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000
0 comments:
கருத்துரையிடுக