வெள்ளி, ஜூன் 02, 2017

உங்கள் வீட்டு பால் –உங்கள் நலத்திற்கு கேடா ? MILK ADULTERATION

உங்கள் வீட்டு பால் –உங்கள் நலத்திற்கு கேடா ?

டாக்டர். அ.முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA.,
டாக்டர். வர்தினி .,BHMS.,

MILK  ADULTERATION

பிறந்த குழந்தை முதல் முதியவர் வரைஎல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. ஏதோ ஒரு காரணத்தால் சிலகுழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போனால்,அதற்கு மாற்று பசும்பால் தான்.கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும்,குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும் பாலில் மட்டும்தான் இருக்கிறது. பால்,மாட்டின் ரத்தம் இல்லை.அது தாவரங்களின் உயிர்ச்சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது. இப்படிப்பட்ட பாலில் கலப்படம்என்றால் ஆச்சரியம் தான்.


இப்போது கிடைக்கிற பால் 64 % கலப்பட பால் என்கிறது ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்


உலகளவில் பால் மிக முக்கிய பங்கு வகிக்கிறது பல சத்துக்களை அடக்கிய பாலில் பல்வேறு கலப்படங்கள் உள்ளது. மனிதர்கள் முதல் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வரை பால் ஒரு அத்தியாவசிய உணவாகும். எனினும் இதில் பல்வேறு கலப்படங்கள் இருந்தாலும் பிறந்த குழந்தைக்கும் சரி,செல்லப்பிராணிகளுக்கும் சரி பாரபட்சம் பார்க்காமல் ஒரே பால் தான் நாம் தருகிறோம்.ஏன்னென்றால்,பாலில் என்ன கலப்படம்? தண்ணீர் தானே கலக்கிறார்கள் அப்படி நினைக்கும் நமக்கு பல அதிர்ச்சியான விஷயங்களை இங்குநான் தெரியப்படுத்துகிறேன்.பால் கலப்படத்தால் அதன் தரம் மட்டும் குறையாமல்,சுகாதாரத்தை பாதிக்கும் அபாயம் பல உள்ளது. பால் மற்றும் பால் உற்பத்திகளில் உள்ள பாலுணர்வை கொண்டிருக்கும் பால்,புரதங்கள், மோர் புரதங்கள், மெலமைன் மற்றும் யூரியா, காய்கறி அல்லது விலங்கு கொழுப்புகள், மற்றும் பல பொருட்களை பாலில் கலந்துள்ளனர்.பாலில் தண்ணீர் கலப்பது மிக வழக்கமே.! பாலில் தண்ணீர் சேர்ப்பது மூலம் அதன் ஊட்டச்சத்து குறையாது. மாறாக அசுத்தமான தண்ணீர் சேர்ப்பதன் மூலம் சுகாதார பிரச்சனைகள் பல ஏற்படக்கூடும்.

பாலில் எதை சேர்த்து கலப்படம் செய்கிறார்கள் ?

முக்கியமாக சோப்பு,கொழுப்பு, ஷ்டார்ச்,சோடியம்,ஹைட்ராக்ஸைடு (காஸ்டிக் சோடா),சர்க்கரை, யூரியா,குளம்நீர், உப்பு,மால்டோடெக்ஸ்ட்ரிக்,சோடியம் கார்போனைட்,ஃபார்மல்லின் மற்றும் அம்மோனியம் சல்பேட் ஆகியவையும் பயன்படுத்தடுகின்றன.பாலில் சோப்பு பயன்படுத்துவதால் இரைப்பை குடல் சிக்கல்கள் ஏற்படுத்தும். அதன் அதிகார அளவை உடல் திசு சேதப்படுத்தி புரதங்களை அழிக்கவும் முடியும். பிற செயற்கை கூறுகள் குறைபாடுகள்,இதய பிரச்சனைகள்,புற்றுநோய் அல்லது மரணம் கூட ஏற்படலாம்.

கலபட பாலினாலே தான் இந்தியா நீரழிவு நோயில் உலக அளவில் முதல் இடம் வகிக்க போகிறது .


யூரியா, காஸ்டிக் சோடா மற்றும் போலாசலின் பயன்படுவதால் உடனடி விளைவாக காஸ்ட்ரோநெரெட்டிஸ் (Gastroenteritis), மற்றும் நீண்டகால விளைவுகள் மிகவும் தீவிரமானவை.வீட்டிலேயே பாலில் கலப்படம் கண்டறிய எளிய வழி :-பாலில் தண்ணீர்  கலந்துள்ளதை என்று கண்டறிய :-

பளபளப்பான சாய்வான மேற்பரப்பில் ஒரு துளி பாலை விடுவதால், பால் துளி மெதுவாக ஒரு வெள்ளை பாதையாக போனால் அது தூய பால், மாறாக விட்ட உடனடியாக ஓட்டம் விட்டால் பாலில் தண்ணீர் கலந்துள்ளது.


பாலில் ஸ்டார்ச் கலந்துள்ளதை என்று கண்டறிய :- 

பாலில் சிறு துளிகள் அயோடின் சேர்க்கவும், பாலின் நிறம் நீலமாக மாறினால் அதில் ஸ்டார்ச் கலந்துள்ளது.


பாலில் யூரியா இருப்பதை அறிய :- 

ஒரு சோதனை குழாயில் ஒரு டீஸ்பூன் பால்எடுத்து அதில் சோயாபீன் அல்லதுஅஹார் பவுடர் அரை  டீஸ்பூன் சேர்க்கவும்,பின்பு அதை நன்றாக கலக்கவும். 5நிமிடங்களுக்கு பிறகு அதில் சிவப்பு லிட்மஸ் காகிதத்தை முக்க வேண்டும் அரை நிமிடத்திற்கு பிறகு காகிதத்தை அகற்றவும். பால் சிவப்பு நிறத்தில் இருந்து நீல நிறத்தில் மாறினால் பாலில் யூரியா கலந்துள்ளது என்று அறியலாம்.


பாலில் சோப்பு இருப்பதை அறிய :-

பாலையும்,தண்ணீரையும் சம அளவில் எடுத்து குலுக்கவும், பின்பு அதில் நுரை போன்று தென்பட்டால் பாலில் சோப்பு கலந்துள்ளது என்று அறியலாம்.


நாம் அருந்தும் பால் செயற்கையானது என்று சந்தேகம் இருந்தால்

அந்த பாலை இரு கைகளுக்கு இடையில் வைத்து தேய்க்கும் பொழுது நுரையாகவோ அல்லதுசூடாக்கினால் மஞ்சளாகவும் மாறும்.மேலும் அந்த பாலை சுவைத்தால், சுவைக்கு பின் கசப்பானதாக இருக்கும். (வண்ண நீர்,பெயிண்ட், எண்ணெய்,அல்காலி, யூரியா மற்றும் சோப்பு முதலியன செயற்கையான பாலில் சேர்க்கப்படுகிறது).


பாலில் யூரியா உள்ளதை கண்டறிய 

யூரேஸ் பட்டைகளை பயன்படுத்தி பால் எளிதில் சோதிக்கப்படலாம். 
யூரேஸ் கீற்றுகளில் உள்ள வண்ண விளக்கப்படம் பாலில் உள்ள யூரியா அளவை சரியாக காட்டுகிறது.


பாலில் க்ளுகோஸ்  உள்ளதை கண்டறிய 

Diacetric துண்டை பாலில் 30 விநாடி முதல்1 நிமிடம் வரை பாலில் முக்க வேண்டும். அந்த துண்டு நிறம் மாறினால் மாறினால் பாலில் குளுக்கோஸ் உள்ளது என்று அறியலாம். துண்டுகள் நிறம் மாறவில்லை என்றால் க்ளுகோஸ் இல்லை .இவ்வாறு நாம் வீட்டிலேயே பாலில் என்னென்ன கலப்படம் உள்ளது என்று அறியலாம். மேலும் இதை தவிர்த்து பாலில் வனஸ்பதி,ஃபார்மலினைஅம்மோனியம் சல்பேட்,உப்பு, ஹைட்ரஜன் ஃபெராக்சைடு,சர்க்கரை, சோடியம் பைகார்பனைட்,ஃபோரிக் அமிலம்,கொழுப்பு ஆகியவற்றை கண்டறிய ஆய்வகங்களில் சோதனை நடத்தி அறியலாம்.


பால் கலப்படத்திற்கான முக்கிய காரணம் நிதி ஆதாயம் ஒன்று மட்டும் கிடையாது உலகெங்கிலும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு போதுமான அளவில் சரிவர பாலை விநியோகிக்க முடியாத காரணமும் கூட தான். போதுமான கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்கம் இல்லாததால் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இந்த சிக்கல் தீவிரமாக உள்ளது.


வெளுத்தல்லாம் பால் இல்லை –நாட்டு மாடு வளர்ப்பவர்களை ஆதரிப்போம் . நம்மால் எதை உறுதியாக நம்ப முடியோமோ அந்த பாலை பயன்படுத்துவோம். வெள்ளையன் வெளியேறி விட்டான் நாம் இன்னும் அவன் கொடுத்த டீ யில் அடிமையாகத்தான் இருக்கிறோம் . நோய்கள் உண்டாக்கும் கலப்பட பாலை அருந்துவதை விட பாலை தவிர்த்தலே நல்லது .

இயற்கை மருத்துவத்தில் பாலை தவிர்க்க சொல்கிறது .இயற்கை –ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)


கலப்படம் இல்லா உலகுக்கு விழிப்புணர்வே முதல் படி ..உங்களால் முடிந்தால் இந்த பதிவை பகிருங்கள்


Post Comment

0 comments:

கருத்துரையிடுக