ஞாயிறு, நவம்பர் 30, 2014

நான்காயிரம் மக்கள் இலவசமாக பருகிய நில வேம்பு குடிநீர் முகாம்30/11/2014 ஞாயிற்று கிழமை அன்று இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் .


SDPI இயக்கமும் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையும் சேர்ந்து  (30/11/2014 ஞாயிற்று கிழமை) இலவச நில வேம்புகஷாயம் வழங்கும் முகாம் ஒன்றை திருநெல்வேலி மாவட்டம் ,தென்காசி வட்டம் வடகரை என்ற கிராமத்தில் வைத்து நடத்தியது .இந்த முகாமுக்கு தேவையான நில வேம்பு குடிநீரை  நமது அல்ஷிபா ஆயுஷ் மருத்துமனை ஏற்பாடு செய்தது 

இதே கிராமத்தில் பல்வேறு இடங்களில் தெரு முனைகளில் ,வீடு வீடாக மக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது ..இந்த முகாமில்  அதிகமான மக்கள் வயது வித்யாசம் இல்லாமல் விரும்பி நில வேம்பு குடிநீரை பருகி சென்றனர் ..

கிட்டத்தட்ட  4000 மக்களுக்கு  நில வேம்பு வழங்கப்பட்டு மக்கள் பலன் அடைந்தனர்   என்று  முகாமை நடத்தி முடித்த SDPI  தன்னார்வளர்கள் கூறினார்கள் .வடகரை ஊர் முழுவதும் ,வடகரையில் உள்ள பள்ளிகள் ,வடகரை ஊரை சுற்றயுள்ள ஊர்களான அச்சம்புதூர்  கிராமத்திலும் கொடுத்தோம் .நான்காயிரம் Use and Throw Disposable டீ கப்புகளும் தீர்ந்து ,மேலும் பல நூறு டீ கப்புகளை வாங்கினோம் என்றார் SDPI நிர்வாக தலைவர் .


குறிப்பு -நாம் எந்த இயக்கத்தின் கீழோ,எந்த இயக்கத்தின் துணையோடு எப்போதும் இலவச முகாம்கள் நடத்துவதில்லை .நாம் எந்த இயக்கத்தோடும் சேராதவர்கள் ..மக்கள் நல பணியில் சில இயக்கங்கள் நம்மை அணுகும் போது நாம் அதை தவிர்க்க முடிவதில்லை ..மக்கள் நலனே ,மக்கள் சேவையே முக்கியம் .

Post Comment

0 comments:

கருத்துரையிடுக