வியாழன், டிசம்பர் 15, 2011

தலை நோய்க்கும் ,வலிக்கும் மருந்தாகும் -நிர்குண்டீ தைலம்-Nirgundi thailam


தலை நோய்க்கும் ,வலிக்கும் மருந்தாகும் -நிர்குண்டீ தைலம்-Nirgundi thailam
 (ref-ஸர்வரோக சிகித்ஸாரத்னம் - தரணரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            நொச்சி இலைச்சாறு நிர்குண்டீ ஸ்வரஸ          800 கிராம்
2.            எருக்கன் இலைச்சாறு அர்கபத்ர ஸ்வரஸ         800        
3.            முருங்கை இலைச்சாறு சிக்ருபத்ர ஸ்வரஸ       800        
4.            புளிய இலைச்சாறு திந்திரிணிபத்ர ஸ்வரஸ       800        
5.            துளசிஇலைச்சாறு துளசிபத்ரஸ்வரஸ       800        
6.            ஊமத்தன் இலைச்சாறு தத்தூரபத்ர ஸ்வரஸ 800        
7.            நிலப்பனைக்கிழங்குச்சாறு முஸலீ ரஸ      800        
8.            வாழைக்கிழங்குச்சாறு ரம்பா ரஸ           800        
9.            நாயுருவி இலைச்சாறு அபமார்க ஸ்வரஸ        800        
10.          மஞ்சள் கிழங்குச்சாறு ஹரீத்ரா ரஸ             800        
11.          கரிசாலைச்சாறு ப்ருங்கராஜ ஸ்வரஸ       800        
12.          இஞ்சிச்சாறு ஆர்த்ரக ஸ்வரஸ              800        
13.          வெள்ளாட்டு மூத்திரம் அஜமூத்ர            800        
14.          நல்லெண்ணெய் திலா தைல               800        
இவைகளை ஒன்று கலந்து அத்துடன்
1.            மரமஞ்சள் தாருஹரீத்ரா             25 கிராம்
2.            வசம்பு வச்சா                        25          
3.            பூண்டு லசுன                        25          
4.            கோஷ்டம் கோஷ்ட                  25          
5.            சுக்கு சுந்தீ                           25          
6.            இந்துப்பு ஸைந்தவ லவண           25          
7.            மிளகு மரீச்ச                        25          
8.            திப்பிலி பிப்பலீ                 25          
9.            கொடிவேலி வேர் சித்ரகமூல          25          

இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

க்ஷெ எண்ணெய் வடிகட்டும் பாத்திரத்தில் வெள்ளைக் குங்கிலியம் (ஸர்ஸரஸ) 25 கிராம் பொடித்துப் போட்டு அந்த சூட்டிலேயே கரையும் படி நன்கு கலக்கி பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:       

காதில் சொட்டு மருந்தாகவும் (கர்ணபிந்து), தலைக்குத் தேய்க்கவும் (சிரோப்யங்க) உபயோகிக்கவும்.

தீரும் நோய்கள்:  காதுவலி (கர்ண சூல), காதில் சீழ் வடிதல் (பூதி கர்ண (அ) கர்ண ஸ்ராவ) போன்ற காது நோய்கள் (கர்ண ரோக), பீனிசம் (பீனஸ) முதலியன. நாட்பட்ட புண்களில் (புராண வ்ரண) மேலே பூசப்படுகிறது. கீல்வாயு (சந்திகாதவாத), ஆமவாதம் (ஆமவாத) போன்றவற்றின் அழற்சி நிலைகளில் மேலே பூசி பிடித்துவிடப்படுகிறது. நாட்பட்ட பீனிசத்தில் தலைக்குத் தேய்க்கப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. நாள் பட்ட மண்டை பீனசதிர்க்கு -தலையில் தேய்த்து வர சீக்கிரம் குணமாகும்
  2. காது சார்ந்த நோய்க்கும் தலையில் தேய்க்கலாம்
  3. ஆமவாதம் -நீர் வாத வலிக்கு தக்க கவனத்துடன் தேய்க்க நல்ல பலன் தெரியும்
  4. இந்த மருந்தில் பல மூலிகைகள் சாறு எடுத்து தயாரிக்க பட வேண்டும்
  5. மண்டை கணம் ,தலை பாரத்திற்கு இந்த தைலம் ,பீனச தைலம் ,சுக்கு தைலம்  -போன்றவைகள் நல்ல பலன் தரும்

Post Comment

2 comments:

கருத்துரையிடுக