புதன், டிசம்பர் 21, 2011

முடி கொட்டுவதை நிறுத்தி -முடி அடர்த்தியாக வளர -திரிபலாதி தைலம்-Triphladhi thailam


முடி கொட்டுவதை நிறுத்தி -முடி அடர்த்தியாக வளர -திரிபலாதி தைலம்-Triphladhi thailam
  (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       90 கிராம்
2.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     90          
3.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 90          
4.            சீந்தில்கொடி குடூசி                             90          
5.            தாழம் விழுது கேதகீ மூல                      90          
6.            வேங்கை அஸன                               90          
7.            சித்தாமுட்டி வேர் பலாமூல                          90          
8.            ஆமணக்கு வேர் எரண்ட மூல                   90          
9.            முடக்கத்தான் வேர் இந்த்ரவல்லி                 90          
10.          தண்ணீர் ஜல                                12.800 லிட்டர்

இவைகளைக் கொதிக்கவைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்

1.            நல்லெண்ணெய் திலதைல            800 கிராம்
2.            கரிசாலைச்சாறு ப்ருங்கராஜ ஸ்வரஸ  800        
3.            நெல்லிக்காய்ச்சாறு ஆமலகீ ரஸ      800        
4.            பசுவின் பால் கோக்ஷீர               1.600 கிலோ கிராம்

இவைகளைச் சேர்த்து அதில்

1.            கோஷ்டம் கோஷ்ட                  6.750 கிராம்
2.            அதிமதுரம் யஷ்டீ                    6.750    
3.            பதிமுகம் பத்மக                     6.750    
4.            விளாமிச்ச வேர் உசீர              6.750    
5.            சந்தனம் சந்தன                     6.750    
6.            கோரைக்கிழங்கு முஸ்தா             6.750    
7.            ஏலக்காய் ஏலா                     6.750    
8.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர         6.750    
9.            சடாமாஞ்சில் ஜடாமாம்ஸீ            6.750    
10.          அமுக்கராக்கிழங்கு அஸ்வகந்தா       6.750    
11.          சித்தாமுட்டிவேர் பலாமூல           6.750    
12.          சீந்தில்கொடி குடூசி                   6.750    
13.          நன்னாரி ஸாரிவா                    6.750    
14.          தேவதாரு தேவதாரு                 6.750    
15.          இலவங்கம் லவங்க                  6.750    
16.          கிரந்தி தகரம் தகர                   6.750    
17.          கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ               6.750    
18.          நீல ஆம்பல் கிழங்கு மற்றும் 
இது போன்ற கிழங்குகள் –     பஞ்சகமலமூல         6.750    
19.          அஞ்சனக்கல் அஞ்ஜன                6.750    
20.          அவுரிவேர் நீலீமூல                  6.750    

இவைகளை அஞ்சனக்கல் நீங்கலாக அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். அஞ்சனக்கல்லைப் பொடித்துப் பாத்திர பாகமாகப் போட்டு பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:     

முடக்கத்தானைக் கஷாயத்தில் உபயோகிப்பதற்கு பதிலாக அதன் பசுமையான சாறு 800 கிராம் சேர்ப்பது சம்பிரதாயம்.


பயன் படுத்தும் முறை:           
  
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 


 நரை (காலித்ய), வழுக்கை (பாலித்ய), முடியுதிரல் (அ) கொட்டுதல் (கேஸஸாத), ஜலதோஷம் (ப்ரதிஸ்யாய), பீனிசம் (பீனஸ), தலைவலி (சிரோருஜா), தலை நோய்கள் (சிரோரோக), கண்நோய்கள் (நேத்ர ரோக) மற்றும் கழுத்திற்கு மேலுள்ள உறுப்பு நோய்கள் (ஊர்த்வ ஜத்ருகாத ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. முடி வளர -முடி அடர்த்தியாக வளர -இந்த தைலம் நன்றாக உதவும்
  2. உஷ்ண உடம்பாய் இருந்தாலும் -அடிக்கடி சளி ஜலதோஷம் பிடிக்கும் உடம்பாய் இருந்தாலும் -கவலை இன்றி பயம் இன்றி தேய்க்கலாம் ..
  3. குளிர்ச்சி தைலம் என்றாலும் இந்த தைலத்தால் சளி பிடிக்காது
  4. திரிபலா தைலம் -கண்களுக்கு ஒளி கூட்டும் -கண்களுக்கு நல்லது
  5. மண்டை பீனசதில் வேலை செய்யும் மருந்து -தலை முடி வளர செய்வதில் -ஆச்சிர்யம் ஆனால் உண்மை
  6. எனக்கு தெரிந்து இந்த தைலம் -ஏறு நெற்றி உள்ள வழுக்கை தடுப்பதில் நல்ல பலன் தரும்


Post Comment

6 comments:

கருத்துரையிடுக