வீக்கமுள்ள வாத வலிகளுக்கு-விஷமுஷ்டி தைலம்-Visha Mushti thailam
(ref-பஸவராஜீயம் - ரோகப்ரகரணம்)
தேவையான மருந்துகளும்
செய்முறையும்:
1. பழுத்த எட்டிப்பழங்களைப் பிசைந்து கொட்டை
நீக்கி எடுத்த கதுப்பு – விஷமுஷ்டீ பலமஜ்ஜ
800 கிராம்.
2. புளித்தகாடி – காஞ்ஜிக 6.400 கிலோ கிராம் இவ்விரண்டையும் நன்கு கலந்து
அத்துடன்.
3. 800 கிராம் எட்டிப்பழக் கொட்டைகளை சிறிய
துண்டுகளாக நறுக்கி 6.400 லிட்டர் தண்ணீர்
சேர்த்துக் கொதிக்க வைத்து (1.600 லிட்டராகக்)
குறுக்கி வடிகட்டிய கஷாயம் 1.600 லிட்டர்
4. எலுமிச்சம்பழச்சாறு – ஜம்பீரஸ்வரஸ 1.600 கிலோ கிராம்
5. நல்லெண்ணெய் – திலதைல 1.600
“
6. விளக்கெண்ணெய் – எரண்டதைல 0.800 “
7. எட்டிக்கொட்டை – விஷமுஷ்டீ (சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு
அரைத்து விழுதாக்கியது) 0.800 கிலோ கிராம்
இவைகளை நன்கு
கலந்து கொதிக்க வைத்துக் கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.
பயன் படுத்தும்
முறை:
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி
உபயோகத்திற்கு மட்டும்.
குறிப்பு:
வெய்யில் நாட்களிலும், பித்தம் உடையவர்களுக்கும் (பித்த தேஹி)
கொடுக்கும் போதும் மிகவும் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும்
தீரும் நோய்கள்:
மூட்டுகள் மற்றும் அவயவங்களைப் பற்றிய
வாதரோகங்கள் மற்றும் இரண இசிவு (காயத்தின் காரணமாக ஏற்பட்ட வலிப்பு).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- வலிகளை-வீக்கம் கலந்த வலிகளை போக்கும்
- நீர்வாதங்களில் தக்க துணை மருந்தோடு பயன்படுத்தலாம்
- சுத்தம் செய்து தான் -எட்டிபழம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை -வெளிபிரயோகம் என்றால் எட்டி -விஷம் என்று உணருதல் நல்லது
2 comments:
வலிகளை-வீக்கம் கலந்த வலிகளை போக்கும்
நீர்வாதங்களில் தக்க துணை மருந்தோடு பயன்படுத்தலாம்
நன்றி நண்பரே பயனுள்ள மருந்து
நட்புடன் ,
கோவை சக்தி
... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
கருத்துரையிடுக