செவ்வாய், மார்ச் 14, 2017

எசன்ஸ் என்கிற எமன்.

எசன்ஸ் என்கிற எமன்.

Natural flavours-இயற்கையான எசன்ஸ் என்றால் என்ன ?


நாக்கின் சுவை நரம்பை ஏமாற்றும் ஒரு வித்தையை மனிதன் எசன்ஸ் என்கிற ஒரு மாயையை கண்டு பிடித்தான்.. இயற்கையான பழங்கள்,பூக்கள் ,பட்டைகள் ,மூலிகைகள் ,வாசனை பொருட்கள் போன்றவற்றில் இருந்து பதங்கமாதல் ,எசன்சியல் ஆயில் என்னும் த்ரவ்யங்கள் ,வாசனை பிசின்கள் ,ஆல்கஹால் கலந்து ,பிழிந்து ,கொதிக்க வைத்து ,ஆவியாக்கி ,சுருக்கி இன்னும் பல பல வழிகளில் இயற்கையான Flavors –எசன்சுகளை கண்டு பிடித்தான் ..இந்த வழியில் Natural flavours உருவாக்க இயற்கையான பொருட்கள் பல நூறு மடங்குகள் தேவை. உதாரணத்திற்கு ரோஜா பூவின் எசன்ஸ் Natural flavours ஒரு ஐம்பது மிலி தயாரிக்க குறைந்த பட்சம் இருபது கிலோவாவது இயற்கையான ரோஜா தேவை.


லேபிளில்இ யற்கை எசன்ஸ் என்று எழுதி -Artificial flavours களை விற்கும் போலி உணவுகள் ஏன்?மூளையின் சுவை பதிவை –நாக்கின் சுவை நரம்பை ஏமாற்றும் ஒரு செயற்கை முறையில் தயாரிக்கபடுகிற Artificial flavours கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட செயற்கை முறையில் –இயற்கையான ஐந்நூறுக்கு மேற்பட்ட Natural flavours களை கொண்டு மனிதன் உருவாக்கி விட்டான்..அதாவது வெறும் 500 natural flavours Combination கெமிக்கல் 2000 வகை செயற்கை Artificial flavours களை உருவாக்கி ..அதையும் கூட Natural flavours இயற்கை சுவையூட்டி –எசன்ஸ் என்றும் –இயற்கை என்றும் லேபில் போட்டு ஏமாற்றிவிடுகிறார்கள் .

உண்மையில் செயற்கையில் உருவாக்கும் Artifical flavours என்பது –நூற்றுக்கு நூறு கெமிகல் –வேதி பொருட்களை கொண்டும் ,பெட்ரோலியம் பொருட்களில் இருந்தும் தயாரிக்கபட்டு அவை –மனிதன் சாப்பிட உள்ளே பயன்படுத்த படுகிறது ..

எசன்ஸ் என்னும் ஏமாற்றும் மாயை 


இந்த எசன்ஸ் சுவையூட்டி கலந்த பொருளை சாப்பிடும் போது உண்மையாக அந்த உணவு பொருளையே சாப்பிடுகிற ஒரு மாயையை மூளைக்கு தெரிவித்து ..அந்த போலியான சுவைக்கு நம்மை இந்த எசன்ஸ் என்னும் செயற்கை Artifical flavours அழைத்து சென்று விடுகிறது என்பது உண்மை .


ஜீஸ் கடைகளில் விற்பது அனைத்தும் போலிகளை -ஜூசே இல்லை உதாரணத்திற்கு ஒரு ஜூஸ் கடையில் இருந்து நாம் பாதாம் பால் அல்லது அண்ணாச்சி ஜூஸ் சாப்பிடுகிறோம் என்று வைத்து கொள்வோம் ..உண்மையில் அவர்கள் பாதாம் பருப்போ அல்லது அண்ணாச்சி பழமோ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை ஒரு சொட்டு செயற்கை எசன்ஸ் சேர்த்தால் மட்டுமே போதுமானது..கலப்படம் –ஏமாற்று வேலையில்-குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் அனைவருமே இப்படி செய்து உண்மையாய் நாம் சாப்பிடுவது இயற்கை என்று நம்பி விடுகிறோம் .


கடையில் சாப்பிடுகிற ரோஸ் மில்க் அப்படிதான் .


ஏலக்காய் சேர்க்க தேவையே இல்லை ஒரு சொட்டு ஏலகாய் எசன்சு போதும்


மிளகாய்க்கு மிளகாய் எசன்ஸ் போதுமானது 

வாழைப்பழ எசன்ஸ் உள்ளது ..
முந்திரி எசன்ஸ் -ஏமாற்ற அதைபோல் தயாரித்து சந்தையில் கிடைக்கிறது 

எலுமிச்சம் பழம் விற்கும் விலையில் ஒரு மிலி கொண்டு பத்து பேருக்கு எலுமிச்சம் ஜீஸ் தயாரிக்கலாம் 


எண்ணெய்களும் உண்மை இல்லை 

வெண்ணைக்கு Artifical flavours எசன்ஸ் இருக்கிறது .

தேங்காய் எண்ணைக்கு Artifical flavours எசன்ஸ் உள்ளது ..கலப்பட எண்ணையில் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் ஒரு சொட்டு விட தேங்காய் எண்ணையின் மணத்தில் ஒரு போலி தேங்காய் எண்ணெய் ரெடி ..
இதேபோல் நல்லெண்ணெய்  மற்றும் எல்லா எண்ணெய்களுக்கும் நெய்யுக்கும் Artifical flavours எசன்ஸ் –ஏமாற்ற வழி உள்ளது.

தேனுக்கு எசன்ஸ் Artifical flavours உள்ளது 
.

மூலிகைகளிலும் செயற்கை எசன்ஸ் உள்ளது 

இப்போது கிட்டத்தட்ட எல்லா மூலிகைகளுக்கும் Artifical flavours எசன்ஸ் உள்ளது ..நான் வசித்து வருகிற கடையநல்லூருக்கு அருகே தான் குற்றாலம் உள்ளது ..இங்கே குற்றாலம் அருவில் குளிப்பதற்கு முன் வெளியே சைக்கிளில் பொன்னாங்கண்ணி தைலம் அழகான பச்சை கலரில் நல்ல பொன்னாங்கண்ணி மணத்துடன் தைலம் விற்ப்பார்கள் ..சுற்றுலா பயணிகள் வாங்கி தேய்த்து குளித்து மகிழ்வார்கள் .வெறும் பச்சை கலரையும் பொன்னாங்கண்ணி எசன்ஸ் கலந்த போலி தைலம் என்று தென்காசியில் இருக்கும் ராகவா பிளாஸ்டிக் –எசன்ஸ் கடைகாரர் சொல்லி தெரிந்து நொந்து கொண்டேன். போலி அசலை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் .

பிரியாணிக்கு Artifical flavours எசன்ஸ் உள்ளது 

பிரியாணிக்கு Artifical flavours எசன்ஸ் உள்ளது ..தக்காளி சாதத்தில் பிரியாணி எசன்ஸ் கலந்தால் கம கம பிரியாணி ரெடி ..

ஆயுர்வேத மருந்துக்கும் Artifical flavours எசன்ஸ் உள்ளது


ச்யவனப்ராஷ் லேஹ்யதிற்க்கும் Artifical flavours எசன்ஸ், ஓவ்வொரு மூலிகை தைலங்கள் கொட்டம்சுக்காதி எசன்ஸ் ,கற்பூராதி எசன்ஸ் என்று ஆயுர்வேத Artifical flavours எசன்ஸ் களும் –கொச்சி மற்றும் கேரளாவில் கிடைக்கிறது ..அப்போ எது உண்மை எது பொய் ..??


செயற்கை மணமூட்டி  - Artifical flavours எசன்ஸ் வரும் பக்க விளைவுகளில் சில ..

புற்று நோய்
மூளை கட்டிகள்
தைராய்ட் கட்டிகள்
நீர் கட்டிகள்
முறையற்ற மாதவிலக்கு
தலை சுற்று ,மயக்கம்
ஒற்றை தலை வலி
மன அழுத்தம்
மன நோய்கள்
வலிப்பு
மரபியல் குறைபாடு
ஊனமான குழந்தைகள்
அதிக பலஹீனம்
நரம்பு தளர்ச்சி
பசியின்மை –
கல்லீரல் வீக்கம் –கொழுப்புள்ள கல்லீரல்
சர்க்கரை நோய்
இரத்த கொதிப்பு
படிப்பில் நாட்டமில்லா தன்மை –மறதி நோய்
எலும்பு அடர்த்தி குறை நோய்
அலர்ஜி –ஆஸ்த்மா
தோல் நோய்கள் ..
இன்னும் பல பல நோய்கள் இந்த எசன்ஸ் என்னும் எமனால் வர காத்திருக்கிறது ..


நாம் செய்ய வேண்டியவை என்ன ?

பேக்கிங் லேபிளில் Natural flavours added என்று எழுதி இருந்தாலும் அதுவும் போலி தான் செயற்கையானது தான்-நம்ப வேண்டாம்

அழகான பேக்கிங்களில் Artifical flavours added என்று சிறியதாக எழுதி இருக்கும் –அதை கவனிக்க தவற வேண்டாம் ..எல்லா கடைகளில் விற்கும் –டப்பாக்களில் அடைத்து –பாட்டில்களில் அடைத்து விற்கும் –ரெடிமேட் உணவுகள் எல்லாவற்றிலும் இந்த எசன்ஸ் என்கிற எமன் ஒளிந்து இருக்கிறான் ,

நமது ஊருக்கு அருகில் விளைகிற –இயற்கையான பலன்கள் ,காய்கறிகள் மட்டுமே பயன்படுத்தவும்

டப்பாக்களில் –பாட்டில்களில் அடைத்து விற்கும் உணவுகள் முடிந்த அளவில் தவிருங்கள் .

இயற்கையை விரும்புவோம் .
இயற்கையான மருத்துவத்தால் நலம் பெறுவோம் .
ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000..


Post Comment

1 comments:

கருத்துரையிடுக