வியாழன், மார்ச் 09, 2017

உலக சிறுநீரக தினம் -மார்ச் 9

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை ..இன்பம் தருமே ஆயுள் முழுவதும் ..

எங்கு நோக்கிலும் செயற்கை உரங்கள் -இரசயான மருந்துகள் ...
யாரை கேட்டாலும் சர்க்கரை நோய் /இரத்த அழுத்த நோய் ...

மருந்தின்றி அமையாது வாழ்க்கை என்று ஆங்கில மருந்தை கடைசி வரை நம்பி எதற்கு எடுத்தாலும் மருத்துவர் இன்றி கிடைக்கும் சுயமாய் மருத்துவம் பார்க்கும் மனிதர்கள் ..

தெருவுக்கு இரண்டு ஆங்கில மருந்து கடைகள் ...அங்கே பிரிஸ்கிரிப்ஷன் இன்றி கிடைக்கும் வலி மருந்துகள் ...

ஊசி போடாத மருத்துவரை -மருத்துவர் என்றே நம்பாத கிராமத்து மக்கள் ..எல்லா நோய்க்கும் ஊசியை கேட்டு வாங்கி போட்டுக்கொள்ளும் அறியாமை மனிதர்கள் ..

தாயப்பாலிலும்,இளநீரிலும் கூட பூச்சி கொல்லி மருந்தின் தாக்கம் ..

நாளை எப்படி இருந்தாலும் பரவாயில்லை ..இன்று வலி இன்றி வாழ துடிக்கும் அவசர மனிதர்கள் ..

இயற்கையை மீறி வாழும் ஒவ்வொரு கணமும் நாம் நமது கழிவு நீக்க உறுப்புகளை சிதைத்து கொண்டே இருக்கிறாம் ..


இங்கே கிட்னி பெயிலியருக்கு மருந்துகள் இல்லை ..ஆனாலும் கிட்னி ஸ்பெசலிஸ்ட்கள் மருத்துவரிடம் கட்டுக்கு அடங்காமல் கூட்டம் ..

டயாலிசிஸ்  செய்தாலும் ..தற்காலிகமே என்று ..கிட்னி தானத்தை செய்தே ஆக வேண்டும் என்று வாரம் மும்முறை டயாலிசிஸ் செய்தல் சோகம் ..

கிட்னி தானம் தர உறவுகள் உருப்படி இல்லை ..
இறந்தரிடம் கிட்னி தானம் பெற காத்திருப்பதில் ஆயுளே சீக்கிரம் முடிந்து விடும் நிலை...
அதையும் மீறி கிட்னி  தானம் பெற்றால் ..எங்கே தொற்று வந்து விடுமோ ..தானாக ரேஜெக்சன் ஆகி விடுமோ என்ற பயத்திலே ..பெற்ற கிட்னியை  பாதுகாக்க சைக்லோஸ்போரின் என்ற விலை உயர்ந்த மாத்திரைகள் ..
சிந்திப்பீர்கள் ..வரும் முன் காப்போம் ..
சிறுநீரகம் பாதுகாப்போம் .

சிறுநீரக நோய்களுக்கு ஆலோசனை பெற
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக