வியாழன், மார்ச் 24, 2011

நூறு காப்F(இருமல்) சிரப்பை விட சிறந்த -இருமல் நிவாரணி -கற்பூராதி சூர்ணம்-Karpooradhi choornam


நூறு காப் (இருமல்) சிரப்பை விட சிறந்த -இருமல் நிவாரணி -கற்பூராதி சூர்ணம்-Karpooradhi choornam
(ref-ஸஹஸ்ரயோகம் - சூர்ணப்ரகரணம்)


தேவையான மருந்துகள்:



1.            கற்பூரம் கற்பூர                    - 10 கிராம்
2.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்       - 10       “             
3.            தக்கோலம் தக்கோல               - 10       “             
4.            ஜாதிக்காய் ஜாதீபல               - 10       “             
5.            ஜாதிபத்திரி ஜாதீபத்ரீ              - 10       “             
6.            இலவங்கம் லவங்க                - 10       “             
7.            சிறுநாகப்பூ நாககேஸர             - 10       “             
8.            மிளகு மரீச்ச                   - 10       “             
9.            திப்பிலி பிப்பலீ                 - 10       “             
10.          சுக்கு சுந்தீ                     - 10       “             
11.          சர்க்கரை ஸர்க்கர               - 10       “              



செய்முறை:    

கற்பூரம், சர்க்கரை நீங்கலாக மற்ற சரக்குகளைப் பொடித்துச் சலித்துப் பின்னர் அவைகளையும் தனியே பொடித்துச்ச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து வைக்கவும்.


அளவு:      

1முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.


அனுபானம்:     

 தேன்


தீரும் நோய்கள்: 

 இருமல் (காஸ), இழைப்பு (அ) இரைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் (ஸ்வாஸகாஸ), விக்கல் (ஹிக்க), உணவில் விருப்பமின்மை (அரோசக).

தெரிந்து கொள்ள வேண்டியவை –

அண்ணாச்சி பூ –இந்த மூலிகையில் இருந்தே பன்றி காய்ச்சல் மற்றும் ஃப்ளு நோய்க்கு தடுப்பு மருந்தாக உதவுகிற ஆங்கில மருந்தான டேமிஃப்ளு மாத்திரை தயாரிக்கபடுகிறது ..இந்த அண்ணாச்சிபூ சேர்ந்த இந்த மருந்து ஃப்ளு போன்ற வைரஸ் காய்ச்சலை தடுக்கவும் ..குணமாக்கவும் இந்த மருந்து உதவும் 

Post Comment

1 comments:

வானவன் யோகி சொன்னது…

ஆயுள்வேதத்தில் கூறப்பட்ட இது போன்ற மருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்திடில் தொல்லை தரும் நோய்கள் ஒன்றும் இல்லை.

மேலும்மேலும் அறிவித்தலுக்கு நன்றிகள்.....

கருத்துரையிடுக