வெள்ளி, மார்ச் 11, 2011

கழிச்சலை நிறுத்தும் -கங்காதர சூர்ணம்-Gangadhara choornam


கழிச்சலை நிறுத்தும் -கங்காதர சூர்ணம்-Gangadhara choornam
(ref -சாரங்கதர சம்ஹிதா மத்யம கண்டம்)


தேவையான மருந்துகள்:

1.            கோரைக்கிழங்கு முஸ்தா                       - 10 கிராம்
2.            வெட்பாலை அரிசி குடஜபீஜ                     - 10       “
3.            வில்வப்பழக் கதுப்பு (காய்ந்தது) பில்வபல மஜ்ஜ   - 10       “
4.            பாச்சோத்திப்பட்டை லோத்ராத்வக்                - 10       “
5.            இலவம்பிசின் சால்மலீ நிர்யாஸ                - 10       “
6.            காட்டாத்திப்பூ தாதகீபுஷ்ப                      - 10       “


செய்முறை:      

இவைகளை நன்கு உலர்த்திப் பொடித்துச் சலித்து ஒன்று சேர்க்கவும்.


அளவு:          

 1 கிராம் முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள். குழந்தைகளுக்குப் பாதியளவு. நோய்க்குத் தகுந்தபடி 3-4 தடவைகள் கொடுக்கலாம்.


அனுபானம்:    

வெல்லம், மோர், தேன்.


தீரும் நோய்கள்: 

 வயிற்றுப் போக்கு எனப்படும் பேதி (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சீதபேதி (பிரவாஹிக).

Post Comment

1 comments:

பெயரில்லா சொன்னது…

Very simple medicine Thank you.

கருத்துரையிடுக