செவ்வாய், மார்ச் 22, 2011

நரம்புக்கு உரமூட்டும் -விந்து முந்துதலில் -பயன்படும் -ஜாதீபலாதி சூர்ணம்-Jathiphaladhi choornam


நரம்புக்கு உரமூட்டும் -விந்து முந்துதலில் -பயன்படும் -ஜாதீபலாதி சூர்ணம்-Jathiphaladhi choornam
(சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)


தேவையான மருந்துகள்:

1.            ஜாதிக்காய் ஜாதீபல                       - 10 கிராம்
2.            இலவங்கம் லவங்க                       - 10       “
3.            ஏலக்காய் ஏலா                             - 10       “
4.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி                - 10       “
5.            இலவங்கப்பட்டை லவங்கப்பட்டை            - 10       “
6.            சிறுநாகப்பூ நாககேஸர                        - 10       “
7.            கற்பூரம் கற்பூர                               - 10       “
8.            சந்தனம் சந்தன                             - 10       “
9.            எள்ளு தில                                  - 10       “
10.          மூங்கிலுப்பு வம்ஸலோசன                   - 10       “
11.          கிரந்தி தகரம் தகர                             - 10       “
12.          நெல்லிமுள்ளி ஆமலகீ                       - 10       “
13.          தாளீசபத்திரி தாளீசபத்ரி                        - 10       “
14.          திப்பிலி பிப்பலீ                                 - 10       “
15.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீபலத்வக்   - 10       “
16.          சோம்பு ஸ்தூல ஜீரக                             - 10       “
17.          கொடிவேலிவேர் சித்ரக                           - 10       “
18.          சுக்கு சுந்தீ                                       - 10       “
19.          வாயுவிடங்கம் விடங்க                           - 10       “
20.          மிளகு மரீச்ச                                   - 10       “
21.          சர்க்கரை ஸர்க்கர                               - 200    “


செய்முறை:      

சரக்குகளை முறைப்படி பொடித்துச் சலிக்கவும்.  சர்க்கரையையும் கற்பூரத்தையும் தனித்தனியே பொடித்துச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவு:     

 1முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் உணவுக்கு ஒரு மணி நேரம் முன்போ அல்லது பின்போ.


அனுபானம்:      

தேன், மோர், தண்ணீர்.


தீரும் நோய்கள்:  

வயிற்றுப்போக்கு (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சீதபேதி (பிரவாஹிக), ருசியின்மை மற்றும் பசியின்மை (அருசி, அக்னிமாந்த்ய), இருமல் (காஸ), இரைப்பு(ஸ்வாஸ), ஜலதோஷம் (பிரதிஸ்யாய).


                ஜலதோஷத்தில் மூக்குப் பொடி போன்று, உபயோகிக்கப்படுகிறது. இரைப்பு, இருமல், ஜலதோஷத்திற்கு தேனுடன் தரப்படுகிறது.


                இதில் கஞ்சா சேர்க்கப்பட்டிருப்பின் நரம்புகளுக்கு அமைதியைக் கொடுப்பதுடன், மூச்சுமண்டல நோய்களுக்கு நல்ல நிவாரணமுமளிக்கிறது.


 குறிப்பு:    சரக்குகளின் மொத்த அளவுக்கு சமமாக கஞ்சா இலையைச் சேர்த்துப் பொடித்து எல்லாச் சூர்ணத்திற்கும் சமமாக சர்க்கரையைச் சேர்க்க வேண்டுமென நூல் கூறுகிறது. ஆனால் அரசின் கட்டுப்பாடு காரணமாக கஞ்சாவை எந்த மருந்து கம்பெனியாலும் சேர்க்க முடிவதில்லை .(இது ஒரு தகவலுக்காக மட்டுமே ..யாரிடமும் கஞ்சா சேர்ந்து மருந்து கிடைக்கும் என்று ஏமாந்து விடாதீர்கள் )

ஜாதிக்காயை சுத்தம் செய்த பின்னே சேர்க்க வேண்டும் (ஆயுர்வேதத்தில் ஜாதிக்காயை சுத்தம் செய்யும் முறைகள் எனக்கு தெரிந்து நான்கு வகைகள் உள்ளது -அதை பற்றி பின்னர் எழுதுகிறேன் )


மேலே சொன்ன பார்முலாவில் -ஜாதிக்காய் சூர்ணம் -கழிச்சலை போக்கவும் ,கிராணி கழிச்சல் குணமாகவும் தான் பயன்படுத்த முடியும் ..

விந்து முந்துதலில் பலர் என்னிடம் கேள்விகளை கேட்கின்றனர் -எனது பழைய இடுகை விந்து முந்துதலில் உள்ள கட்டுரைக்கு விளக்கம் இன்னமும் சொல்ல வேண்டியுள்ளது .. 

இந்த ஜாதிபலாதி சூரணத்தில் கடுக்காய் தோல் தவிர ..ஓரிதழ் தாமரை சூர்ணம் ,நிலப்பனங் கிழங்கு  சூர்ணம் மற்றும் நெருஞ்சில் முள் சூரணம் கலந்து -விந்து முந்துதலுக்கு -மற்ற ஆயுர்வேத யுனானி நான் மருந்துகளோடு தருவதுண்டு..

விரைவில் விந்து முந்துதல் குணப்படுத்தக்கூடிய வழி முறைகள் ,மருந்துகள் ,மூலிகைகள் பற்றி எழுதுகிறேன் ..
 

Post Comment

4 comments:

மதுரை சரவணன் சொன்னது…

pakirvukku nanari

வானவன் யோகி சொன்னது…

//புளியுமிது நவநீதம் இதுதான் கேளு
புகழாகக் கற்பமுண்டோர்க்கெய்தும் வாதம்
அழியாத கோரக்கர் மூலிதானும்
அப்பனே கஞ்சாவென்றுண்டு செத்தார்
புளியதுவே கோரக்கர் மூலியாகும்
புகழாக உண்டவர்கள் சித்தரானார்// என அகத்தியர் சொல்லியிருப்பதைப் பார்த்தால் புதிராகவே உள்ளது

நினைவிலே இருப்பதொன்று வெளியிலே சொல்வதொன்று
நெஞ்சிரக்கமில்லாத சித்தர் பாடை(ஷை) எனவும் அகத்தியர் கூறியிருப்பதால் புத்தகங்களில் சொல்ல்ப்பட்ட அனைத்தும் வெளிப்படையானது அல்ல என்பது திண்ணம்.

மென்மேலும் நாங்கள் தெரிந்துகொள்ள பதிவிடும் தங்களை மனமார வாழ்த்துகிறோம்

பெயரில்லா சொன்னது…

விரைவில் விந்து முந்துதல் குணப்படுத்தக்கூடிய வழி முறைகள் ,மருந்துகள் ,மூலிகைகள் பற்றி எழுதுகிறேன் .. thankyou

sakthi சொன்னது…

அருமை தொடருங்கள் .
வாழ்த்துக்கள்
நட்புடன்,
கோவை சக்தி

கருத்துரையிடுக