எலும்பை வலுப்படுத்தும் ,இரத்தம் சார்ந்த நோய்களை குணமாக்கும் -லாக்ஷா சூர்ணம்-Laksha choornam
(ref-பாவப்ரகாச நிகண்டு)
தேவையான மருந்துகள்:
கொம்பரக்கு – லாக்ஷா (போதுமான அளவு)
செய்முறை:
கொம்பரக்கைக் குச்சி முதலியவைகளை நீக்கிச் சுத்தம் செய்து பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.
அனுபானம்:
தேன், வெண்ணெய், நெய், சர்க்கரை, தண்ணீர், பால்
தீரும் நோய்கள்:
மூச்சு மண்டலம், உணவுப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப்போக்கு (ரக்தபித்த), சீத ரத்தபேதி, (ரக்தாதிஸார), இரத்த இருமல் (ரக்தகாஸ), இரத்த வாந்தி (உரக்ஷத), பெரும்பாடு (அஸ்ரிக்தர), மூக்கில் ரத்தம் வடிதல் (நாஸரக்த) போன்ற பலவிதமான ரத்தம் பீறிடும் நிலைகள் (ரக்தஸ்ராவம்)
குறிப்பு:
1. இது ரத்தப்போக்கைத் தடுப்பதில் மிகவும் சிறந்ததொரு மருந்து. மூக்கிலிருந்து ரத்தம் வடியும் சமயங்களில் பாலுடன் கலந்து சில துளிகளை நாசியில் செலுத்தலாம்.
2. சால்மலீ சூர்ணம், சீந்தில் சர்க்கரை (குடூசி சத்வ) போன்றவற்றுடன் நோய்களுக்கு ஏற்ப சமயோசிதமாக உபயோகிப்பதுண்டு.
1 comments:
கொம்பரக்கு எந்த மாதிரி இருக்கும்?,,, அதை எப்படிப் பயன்படுத்துவது?,,,
எதைப் பயன்படுத்தக்கூடாது என தெளிவாகப் பதிவிட்டுள்ளீர்கள்......
தங்களின் சேவைக்கு நன்றியும்......வாழ்த்துக்களும்,,,
கருத்துரையிடுக