பசியின்மை -சளி போக்கும் ஏலாதிச் சூரணம்-Eladhi choornam
(ref- கதநிக்ரஹ - சூர்ணாதிகாரம்)
தேவையான மருந்துகள்:
1. ஏலக்காய் – ஏலா - 10 கிராம்
2. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் - 20 “
3. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி - 30 “
4. சிறுநாகப்பூ – நாக்கேஸர - 40 “
5. மிளகு – மரீச்ச - 50 “
6. திப்பிலி – பிப்பலீ - 60 “
7. சுக்கு – சுந்தீ - 70 “
8. சர்க்கரை – ஸர்க்கர - 280 “
செய்முறை:
மேற்கூரிய சரக்குகளையும், சர்க்கரையையும் தனித்தனியே பொடித்துச் சலித்து பின் எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கவும்.
அளவு:
1 முதல் 2 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்
அனுபானம்:
தேன், நெய், பால், தண்ணீர்.
தீரும் நோய்கள்:
செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), குன்மம் (குல்ம), இதய நோய் (ஹ்ருத்ரோக), இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), மார்பு மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்படும் அழற்சிகள், நுறையீரல், உணவுப் பாகை போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவித இரத்தப் போக்ககுகள் (ரத்தபித்த). இதயத்தைத் தூண்டக்கூடாது.
இருமல் மற்றும் இரைப்பில் வாஸாரிஷ்டத்துடன் இஃது தரப்படுகிறது. இதயநோய்களில் இது அர்ஜூனாரிஷ்டத்துடன் தரப்படுகிறது.
8 comments:
ஆயுர்வேதத்தை அனைவரும் அறிந்து அதைப் பயன்பாட்டில் கொண்டு வந்தால் நீண்ட நெடிய நாட்கள்
விடாமல் துன்புறுத்தும் பல நோய்களை கொன்று நீண்ட ஆயுள் பெற முடியும் என்பதை
தாங்கள் இடுகைகள் மூலம் மிக அதிகமானோர் அறியவும் சேவை செய்துவருவதால்
மென்மேலும்.....வாழ்க......வளர்க.......!!!!
informative post. Thank you.
தொடர் பயனுள்ள பதிவுகள் .வாழ்த்துக்கள் .
இந்த தொடர்களை படிப்போர் ஒரு பின்னோட்டம் இட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் .ஏனென்றால் நண்பரது வேலை பளுவிற்கு இடையே மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் .எல்லோரும் நோயற்ற வாழ்வு வாழ அரிய சேவை செய்துவருகிறார் .படிப்போரின் பாராட்டும் ,பின்னோட்டமும் ,அவருக்கு தரும் விருதுகள் ஆகும் .அவருக்கும் தனது எழுத்துகள் பயனுள்ளதாய் இருக்கிறது என்ற திருப்தி கிடைக்கும் .
நட்புடன் ,
கோவை சக்தி
இதில் சிறு நாகப்பூவிற்கு ஆங்கிலப்பெயர் என்ன?
சிறுநாகப்பூ ஏன்பது மண்புழு.இதை சுத்தி செய்ய வேண்டும்.
உங்களின் சேவை தொடற வாழ்த்துக்கள்.
@bandhu
botonical name-Woodfordia fruticosa
@yuvaraj Anand
சிறு நாகப்பூ என்பது -ஒரு புஷ்பத்தின் பெயர் -மண்புழு இல்லை -இதன் விளக்கத்தை -பின்னர் எழுதுகிறேன் ..இதனை சுத்தம் செய்ய தேவை இல்லை ..
இந்த மலரை கொண்டு தான் -அரிஷ்டங்கள்,ஆசவங்கள் என்னும் ஆயுர்வேத மருந்துகள் -தயாரிக்க -புளிக்க வைக்க உதவுகிறது இதன் தாவரவியல் பெயர்
Woodfordia fruticosa
கருத்துரையிடுக