ஞாயிறு, மார்ச் 13, 2011

தைராய்ட் கண்டறியும் பரிசோதனை முகாம்


இன்று நமது ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தால் -தைராய்ட் கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது

எண்பத்தெட்டு பயனாளிகள் -பயன்பெற்றனர்அவர்கள் அனைவருக்கும் கீழ்கண்ட பரிசோதனைகள் -மிக மிக குறைந்த விலையில் -அதாவது -ரூபாய் -முன்னூற்று ஐம்பது க்கு ( RS -350 )எடுக்கப்பட்டது ..
இரத்தத்தில் -T3,T4,TSH,
Lipid profile( including LDL,HDL,TGL,Sr.Chl..VLDL,Risk factor)
Hb
Fasting blood sugar-
மேலும் - அவர்களின் இரத்த அழுத்தம்
- ஆயுர்வேத -சித்த முறையில் நாடி பரிசோதனை
-அக்குபஞ்சர் முறையில் நாடி பரிசோதனை


அவர்களின் உயரம் ,எடை கண்டு பிடித்து ..Body mass index(BMI),BMR(எவ்வளவு கலோரி ஒரு நாளைக்கு செலவு செய்ய வேண்டும் )-

ஓரிரு நாளில் இந்த பரிசோதனை முடிவுகள் -தைராய்ட் போன்ற வந்தவுடன் -அவர்கள் தைராய்ட் நோயாளியாக இருக்கும் படசத்தில் -

தைராய்ட் க்கு ஆயுர்வேத மருந்துகள் ,ஹோமியோ மருந்துகளும் -கொடுக்கப்பட்ட உள்ளது ..

..

இதற்க்கு முன் --மார்ச் எட்டாம் தேதி இலவச எலும்பு அடர்த்தி
பரிசோதனை முகாம்(bone mineral density test) நடத்தினோம் ..அதன் விவரம் 

மேலும் வருகிற ஞாயிற்று கிழமை 20-3-2011-மாணவர்களின் அறிவு திறனை வளர்க்க -ஞாபக மறதிக்கான சிறப்பு முகாம் -நடைபெற உள்ளது ..

அதிலே -வல்லாரை மாத்திரைகள் ,நீர் பிரம்மியின் சூர்ணம் ,ஹோமியோபதியிலே anacardium 200 ,இது போன்ற மருந்துகள் ,பிரம்மி டானிக் போன்றவைகள் இலவசமாக வழங்க பெற உள்ளது


இது ஒரு -செய்தியே தவிர வேறில்லை ..தயவு செய்து நான் எங்கே இருக்கிறேன் ..கலந்து கொள்ளாலாமா என்று கேட்காதீர்கள் ..

கூடிய விரைவில் இந்த ஆய்வு நிறுவனம் உங்கள் ஊரிலே -உங்களை போன்ற நண்பர்களாலும் -அருகில் உள்ள -படித்த ஆயுர்வேத ஹோமியோபதி ,சித்த  மருத்துவர்களால் -நடைபெற வைக்க உதவுவோம் ..அதற்கு உங்களை போன்ற நண்பர்களின் துணை தேவை படும் ..

இந்திய மருத்துவத்தை உலகறிய செய்ய பாடு பட உழைப்போம் ..

கை கோர்த்து கொள்வோம் ..
 
 

Post Comment

2 comments:

கருத்துரையிடுக