பித்தத்தை குறைக்கும் -திராக்ஷாதி சூர்ணம்-Drakshadhi choornam
(ref-வைத்யசிந்தாமணி - க்ஷயப்ரகரணம்)
தேவையான மருந்துகள்:
1. திராக்ஷை – த்ராக்ஷா - 10 கிராம்
2. நெற்பொரி – லஜ - 10 “
3. வெள்ளை ஆம்பல் கிழங்கு – ஸ்வேதோத்பலகந்த - 10 “
4. அதிமதுரம் – யஷ்டீமது - 10 “
5. பேரீச்சங்காய் – கர்ஜூரபல - 10 “
6. நன்னாரி – ஸாரிவா - 10 “
7. மூங்கிலுப்பு – வம்ஸலோசன - 10 “
8. குருவேர் – ஹ்ரிவேர - 10 “
9. நெல்லிமுள்ளி – ஆமலகீ - 10 “
10. கோரைக்கிழங்கு – முஸ்தா - 10 “
11. சந்தனம் – சந்தன - 10 “
12. விளாமிச்சவேர் – உஸீர - 10 “
13. திப்பிலி – பிப்பலீ - 10 “
14. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் - 10 “
15. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி - 10 “
16. ஏலக்காய் – ஏலா - 10 “
17. சிறுநாகப்பூ – நாககேஸர - 10 “
18. நெருஞ்சில் – கோக்ஷுர - 10 “
19. வாயுவிடங்கம் – விடங்க - 10 “
20. கொத்தமல்லிவிதை – தான்யக - 10 “
21. சுக்கு – சுந்தீ - 10 “
22. கிச்சலிக் கிழங்கு – ஸட்டீ - 10 “
23. கற்பூரம் – கற்பூர - 10 “
24. தாளிசபத்திரி – தாளீசபத்ரி - 10 “
25. சர்க்கரை – ஸர்க்கர - 240 “
செய்முறை:
திராக்ஷை, பேரீச்சங்காய், கற்பூரம், சர்க்கரை நீங்கலாக மற்ற சரக்குகளைப் பொடித்துச் சலிக்கவும். திராக்ஷை, பேரீச்சங்காய் இவைகளின் கொட்டைகளை நீக்கி விட்டு சலித்த சூர்ணம் சிறிது கலந்து அவற்றை பொடித்துச் சேர்க்கவும். பின்னர் கற்பூரத்தையும், சர்க்கரையையும் தனியே பொடித்துச் சலித்துச் சேர்க்கவும்.
அளவு:
1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் உணவுக்கு முன்.
அனுபானம்: தேன், நெய், பால், தண்ணீர்.
தீரும் நோய்கள்:
பசியின்மை (அக்னி மாந்த்ய), வாந்தி (சர்தி), பலவீனம் (பலக்ஷய (அ) தௌர்பல்ய), இளைப்பு (கார்ஸ்ய), க்ஷய இருமல் (க்ஷயஜகாஸ), வெள்ளை படுதல் (ஸ்வேதப்ரதர), சூதகசூலை (ஆர்த்தவ சூல).
க்ஷய இருமலில் இது நெய்யுடன் தரப்படுகிறது. சூதக சூலை போன்ற நிலைகளில் நெல்லிக்காய், தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகியவற்றின் விழுதுடனும், வெட்டிவேர் கியாழத்துடனும் (கஷாயம்) இது தரப்படுகிறது.
வெள்ளைப் போக்கில் இது நன்கு பொடித்த பனையிலைத் துளிருடனோ நெய்யுடனோ தரப்படுகிறது.
2 comments:
மிகச் சிறப்பான சேவை...
தற்போதைய வெயில் காலத்தில் ஏற்படும் வியாதிகள்..
மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றிச் சொன்னால் மக்களுக்கு இன்னும் பயன்பெற வச்தியாக இருக்கும்..
தயவாய்ச் செவிமடுப்பீர்கள் என ந்ம்புகிறேன்..
பாராட்டுக்களும்........வாழ்த்துக்களும்....!!!!!
எப்போதும்போல நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்சார்.
கருத்துரையிடுக