வியாழன், மார்ச் 03, 2011

புளித்த ஏப்பத்தை சரிசெய்யும் -பாஸ்கர லவணம்-Baskara lavanam


புளித்த ஏப்பத்தை சரிசெய்யும் -பாஸ்கர லவணம்-Baskara lavanam
(anti-spasamodic)


(ref-சாரங்கதரஸம்ஹிதா மத்யமகண்டம்)

தேவையான மருந்துகள்:
1.            சமுத்திர உப்பு ஸாமுத்ரலவண       - 80 கிராம்
2.            கல்லுப்பு ஸௌர்ச்சலவண            - 50       “
3.            கருப்பு உப்பு பிடாலவண              - 20       “
4.            இந்துப்பு ஸைந்தவலவண            - 20       “

5.            கொத்தமல்லி விதை தான்யக         - 20       “
6.            திப்பிலி பிப்பலீ                 - 20       “
7.            மோடி பிப்பலீமூல                   - 20       “
8.            கருஞ்சீரகம் க்ருஷ்ணஜீரக            - 20       “
9.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி        - 20       “
10.          சிறுநாகப்பூ நாக்கேஸர               - 20       “
11.          தாளீசப் பத்திரி தாளீஸபத்ரி                - 20       “
12.          சீமைக் கொடுக்காய்ப் புளி ஆம்லவேதஸ    - 20       “
13.          மிளகு மரீச்ச                        - 10       “
14.          சீரகம் ஜீரக                          - 10       “
15.          சுக்கு சுந்தீ                           - 10       “
16.          மாதுளை ஓடு தாடிமபலத்வக்         - 40       “
17.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்       - 5         “
18.          ஏலக்காய் ஏலா                        - 5         “


செய்முறை:    

முறைப்படி சரக்குகளைப் பொடித்துச் சலிக்கவும். உப்பு வகைகளைத் தனியே சிறிது வறுத்து இடித்துச் சலித்துச் சேர்க்கவும். சீமைக் கொடுக்காய்ப் புளியைச் சிறிது சலித்த சூரணம் சேர்த்து இடித்துச் சலித்து கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவு:          

 1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் உணவுக்கு முன்.


அனுபானம்:     

தயிர்த்தெளிவு, மோர், வெந்நீர், ஆஸவம்.


தீரும் நோய்கள்:  


குன்மம் (குல்ம), வாதகபகுன்மம் (வாதகபஜகுல்ம), சூலை (சூல), மூலம் (அர்ஷ), பசியின்மை (அக்னிமாந்த்ய), செரியாமை (அஜீர்ண), மலச்சிக்கல் (மலபந்த), கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீஹவ்ருத்தி). இதனை மோருடன் கலந்து கொடுக்க பேதி (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ) ஆகியன நிற்கும். கடினமான வலியுடன் கூடிய மாதாந்திர ரத்தப்போக்கில் (ஆர்த்தவசூல) இந்துப்புடனும், சணல் செடியின் குடிநீருடனும் இஃது தரப்படுகிறது.

குறிப்பு:    இதற்கு லவணபாஸ்கர சூர்ணம் என்றொரு பெயருமுண்டு.    

Post Comment

5 comments:

Chitra சொன்னது…

மருத்துவ குறிப்புக்கு நன்றிங்க.

sakthi சொன்னது…

தொடர் மருத்துவ சேவை வளர்க .
நட்புடன் ,
கோவை சக்தி

வானவன் யோகி சொன்னது…

அருமையான தகவல்...

ஒவ்வொரு மருந்தைப் பற்றிய இடுகையிலும் அந்த நோய்வாய்ப்பட்டவர் சாப்பிடக்கூடாதவைகள் குறித்து தகவல் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அதேவேளை புளித்த ஏப்பம் விடுபவர்கள் எந்தெந்த உணவு வகைகளை ஒதுக்க வேண்டும்.எவ்வளவு சாப்பிடலாம்.எதைச் சாப்பிடுவது நல்லது என்பதையும் அறிந்து கொள்வது மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

தமிழில் ஆயுர்வேதத்தை பொறுத்தவரையில் தங்களின் சேவை விலைமதிப்பே சொல்ல இயலாது.

தாங்களும் நலமுடன் வாழ்ந்து இந்த வைத்தியத்தையும் வாழ வைப்பீர்கள் என்ற ந்ம்பிக்கையில்.....!!!!!


















RAVINDRAN சொன்னது…

நன்றி

curesure Mohamad சொன்னது…

நன்றி -நண்பர்களே ..
வானுவன் யோகி நண்பரே ..புளித்த ஏப்பம் என் வருகிறது என்பதை -அப்புறமாக வேறு ஒரு கட்டுரையில் எழுதலாம் என எண்ணுகிறேன்

கருத்துரையிடுக