ஞாயிறு, மார்ச் 06, 2011

கழிச்சலை குணப்படுத்தும் சிறந்த மருந்து -தாடிமாஷ்டக சூர்ணம்-Dadimashtaka choornam


கழிச்சலை குணப்படுத்தும்  சிறந்த மருந்து -தாடிமாஷ்டக சூர்ணம்-Dadimashtaka choornam
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் அதிஸார சிகித்ஸா)




தாடிமம் என்றால் -சமஸ்க்ருதத்தில் மாதுளை என்று பெயர் -மாதுளை ஓட்டை கொண்டு - கூட்டாக இந்த மருந்து தயாரிக்கப்படுவதால் இதற்க்கு தாடிமஷ்டக சூர்ணம் என்று பெயர்


தேவையான மருந்துகள்:
1.            முங்கிலுப்பு வம்ஸலோசன           - 10 கிராம்
2.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்       - 20       “
3.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி        - 20       “
4.            ஏலக்காய் ஏலா                      - 20       “
5.            சிறுநாகப்பூ நாககேஸர               - 20       “
6.            ஓமம் அஜமோதா                    - 20       “
7.            கொத்தமல்லி விதை தான்யக         - 20       “
8.            சீரகம் ஜீரக                          - 20       “
9.            மோடி பிப்பலீமூல                   - 20       “
10.          சுக்கு சுந்தீ                           - 20       “
11.          மிளகு மரீச்ச                        - 20       “
12.          திப்பிலி பிப்பலீ                      - 20       “
13.          மாதுளை ஓடு தாடிமத்வக்            - 20       “
14.          சர்க்கரை ஸர்க்கர                    - 20       “


செய்முறை:    

  சரக்குகளை முறைப்படி பொடித்துச் சலிக்கவும். பின்னர், சர்க்கரையைத் தனியே பொடித்துச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கவும்.


அளவு:          

 1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.


அனுபானம்:     

தேன், மோர்.


தீரும் நோய்கள்: 


 கழிச்சல் (அ) பேதி (அதிஸார), பெருங்கழிச்சல் (கிரஹணீ), சீதபேதி (ப்ரவாஹிக), இரத்த பித்தம்.

குழந்தைகளின் செரியா கழிச்சல் ,மாந்தம் -போன்றவற்றிக்கும் இந்த மருந்தை -உபயோகிப்பதுண்டு
 

Post Comment

1 comments:

வானவன் யோகி சொன்னது…

நாட்டு வைத்தியத்தில் மற்றும் பெரும்பான்மையாக கிராமங்களில் இது போன்ற கழிச்சலுக்கு மாதுளம் பிஞ்சை தயிரில் அரைத்துக் கொடுக்கும் வழ்க்கம் உள்ளது.

இது வைத்தியர்கள்முறை என்பதால் மேலும் சிறப்ப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தகவலுக்கு நன்றியும்....வாழ்த்துக்களும்......

கருத்துரையிடுக