வியாழன், மார்ச் 31, 2011

பெண்களின் வெள்ளை படுதல் ,மேகப் போக்கை குணப்படுத்தும் - புஷ்யானுக சூர்ணம்-Pushyanaka choornam


பெண்களின் வெள்ளை படுதல் ,மேகப்   போக்கை  குணப்படுத்தும் -
புஷ்யானுக சூர்ணம்-Pushyanaga choornam
 (ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்திரீரோகாதிகார)

தேவையான மருந்துகள்:













1.            பாடக்கிழங்கு பாதா                        - 10 கிராம்
2.            நாவல் கொட்டை ஜம்புபீஜ                 - 10       “
3.            மாம்பருப்பு ஆம்ராபீஜமஜ்ஜா                - 10       “
4.            சிறுபீளை (உலர்ந்த்து) பாஷாணபேத         - 10       “
5.            அஞ்சனக்கல் அஞ்ஜன                     - 10       “
              (ரஸாஞ்சனம் மரமஞ்சள்ரஸக்கிரியை)
6.            மாசிக்காய் மாசிபல                        - 10       “
7.            இலவம்பிசின் சால்மலீநிர்யாஸ             - 10       “
8.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                - 10       “
9.            தாமரைக் கேஸரம் பத்மகேஸர             - 10       “
10.          பெருங்காயம் ஹிங்கு                - 10       “
11.          அதிவிடயம் அதிவிஷா                    - 10       “
12.          கோரைக்கிழங்கு முஸ்தா                  - 10       “
13.          வில்வப்பழக்கதுப்பு (உலர்ந்தது) பில்வபல மஜ்ஜா  - 10       “
14.          பாச்சோத்திப்பட்டை லோத்ராத்வக்                - 10       “
15.          காவிக்கல் கைரிக                         - 10       “
16.          குமிழ்வேர் காஷ்மரீ                       - 10       “
17.          மிளகு மரீச்ச                             - 10       “
18.          சுக்கு சுந்தீ                                - 10       “
19.          திராக்ஷை திராக்ஷா                        - 10       “
20.          செஞ்சந்தனம் ரக்தசந்தன                   - 10       “
21.          பெருவாகை ஸ்யோனாக                   - 10       “
22.          வெட்பாலை அரிசி இந்த்ரயவ               - 10       “
23.          நன்னாரி ஸாரிவா                         - 10       “
24.          காட்டாத்திப்பூ தாதகீ புஷ்ப                 - 10       “
25.          அதிமதுரம் யஷ்டீமது                      - 10       “
26.          மருதம்பட்டை அர்ஜூனத்வக்               - 10       “


செய்முறை:     

 காவிக்கல், திராக்ஷை, பெருங்காயம், இவைகள் நீங்கலாக மற்ற சரக்குகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். திராக்ஷையுடன் சலித்த சூர்ணம் சிறிது சேர்த்து இடித்துச் சலிக்கவும். பெருங்காயத்தைப் பொரித்துப் பொடித்துச் சலிக்கவும். பின்னர் காவிக்கல்லையும் தனியே இடித்துச் சலித்துச் சேர்த்து எல்லாச் சூர்ணங்களையும் ஒன்றுபடக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவு:          

 1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகளுக்கு கொடுக்கவும்.


அனுபானம்:      

தேன், நெய், அரிசி கழுவிய நீர் (கழுநீர்)


தீரும் நோய்கள்:  






இரத்த மூலம் (ரக்தார்ஷ), சீதரத்தபேதி (இரத்தாதிஸாரம்), பெரும்பாடு (ஆர்த்தவசூல (அ) அஸ்ரிக்தர), வெள்ளை படுதல் (ஸ்வேதப்ரதர) மற்றும் மாதவிடாய்க் கோளாறுகள் (ஆர்த்தவ ரோக - ரஜோதோஷ).


குறிப்பு:     

1. ரஸாஞ்சனத்திற்குப் பொருள் மரமஞ்சள் சத்து என்பதாகப் பொருள் கொண்டு அஞ்சனக் கல்லுக்குப் பதிலாக ரஸௌத்தும் (மரமஞ்சள் சத்து), பெருங்காயத்திற்கு பதிலாக குங்குமப்பூவும் சேர்த்துத் தயாரிப்பது உண்டு.


 2. அசோகாரிஷ்டம், லோத்ராஸவ அல்லது சர்க்கரையுடனும் இதனைக் கொடுப்பதுண்டு.

Post Comment

1 comments:

வானவன் யோகி சொன்னது…

ஓரிரண்டு சூரணங்களே மிகச் சிறப்பாக வேலை செய்யும் போது இத்தனை அருமையான மருந்துகள் சேர்ந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...

புதிய பல விடயங்களைச் சொல்லுவதிலும் மக்களுக்குப் பயன் தர வேண்டும் என்பதிலும் உள்ள தங்கள் அக்கறை விலைமதிப்பற்றது.....

மென்மேலும் பொருளும் புகழும் பெற வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக