சனி, மார்ச் 12, 2011

மூத்திர எரிச்சலை குணபடுத்தும் -கோஷுராதி சூர்ணம்-Goshuradhi choornam


மூத்திர எரிச்சலை குணபடுத்தும் -கோஷுராதி சூர்ணம்-Goshuradhi choornam
                                                                               

தேவையான மருந்துகள்:

1.            நெருஞ்சில் கோக்ஷுர                            - 10 கிராம்
2.            மூக்கரட்டை வேர் புனர்னவமூல                   - 10       “
3.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீபலத்வக்   - 10       “
4.            வால் மிளகு கங்கோல                            - 10       “
5.            ரேவல் சீனிக்கட்டை ரேவல் சினி                   - 10       “
6.            வெள்ளை வெங்காரம் ஸ்வேத டங்கண             - 10       “
7.            எண்ணெய் வெங்காரம் க்ருஷ்ண டங்கண         - 10       “
8.            ஸர்ஜக்ஷாரம் ஸர்ஜக்ஷார                         - 10       “
9.            யவக்ஷாரம் யவக்ஷார                            - 10       “
10.          வெடியுப்பு ஸோரக (அ) ஸூராக்ஷார           - 10       “


செய்முறை:      

சரக்குகளைத் தனித் தனியே பொடித்துச் சலிக்கவும். வெங்காரங்களைப் பொரித்த பின்னர் பொடித்துச் சலித்து மற்ற சூர்ணங்களுடன் கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவு:           

1 கிராம் முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.


அனுபானம்:     

 தண்ணீர்


தீரும் நோய்கள்:  
சீழ்மேகம் (பூயமேஹ), மூத்திரக் கட்டு (மூத்ராகாத (அ) மூத்ராசங்க), நீர்ச்சுருக்கு (மூத்ரகிரிச்சர), குன்மம் (குல்ம), வீக்கம் (ஸோப), பெருவயிறு (மஹோதர), பசியின்மை (அக்னிமாந்த்ய), கல்லீரல் மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீஹ வ்ருத்தி), காமாலை (காமால). நல்லதொரு நீர்பெருக்கி. பொதுவாக சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கு நல்லதொரு மருந்து.


Post Comment

2 comments:

கருத்துரையிடுக