புதன், மார்ச் 30, 2011

தோல் நோய்களை குணப்படுத்தும் -மதுஸ்னுஹீ சூர்ணம்-Madusnuhi choornam


தோல் நோய்களை குணப்படுத்தும் -மதுஸ்னுஹீ சூர்ணம்-Madusnuhi choornam
 (ref-பாவப்ரகாச நிகண்டு)

தேவையான மருந்துகள்:

பரங்கிச் சக்கை மதுஸ்னுஹீ (போதிய அளவு)


செய்முறை:     

நன்கு முதிர்ந்து தேறிய பரங்கிச் சக்கையைப் பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.


அளவு:    

1முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.


அனுமானம்:     தேன், நெய், பால்

சித்த மருத்துவத்தில் -இதனை பரங்கிபட்டைசூர்ணம் என்று சொல்வார்கள்
 


தீரும் நோய்கள்:  



தோல் நோய்கள் (சர்ம ரோக), பரங்கிப்புண் (பீரங்கரோக), கீல்வாயு (வாதரக்த). ரத்தத்தை சுத்தம்செய்ய வல்லது. 
மூட்டுகளில் வலியும் வீக்கமும் கூடிய நிலையில் ஏற்படும் காய்ச்சலில் (ஆமவாத ஜ்வர) ( சீந்தில் கொடி குடூசீ- 12 கிராம்மிளகு மரீச்ச - 12    கிராம், கோரைக்கிழங்கு முஸ்தா - 12     கிராம்,ஓமம் அஜோவான் - 12     கிராம், பரங்கிச்சக்கை மதுஸ்னுஹி  - 12      கிராம்-
ஆகியவைகளை நன்கு பொடி செய்து 16 அவுன்ஸ் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து 4 அவுன்ஸாக குறுக்கி வடிகட்டக் கிடைக்கும் கஷாயத்தை மேற் கூறியபடி உபயோகிக்கவும்)  கொடுக்கலாம் 

Post Comment

4 comments:

வானவன் யோகி சொன்னது…

மிக அற்புதமான மருந்து,........

உபயோகம் செய்வோர் மிகச் சிறந்த பயன் தெரிவார்..

மேலும் வலிமையும் வளமையும் பெற வாழ்த்துகிறோம்

sakthi சொன்னது…

அருமை தொடருங்கள் ,
நட்புடன் ,
கோவை சக்தி

curesure Mohamad சொன்னது…

நன்றி நண்பர்களே

Unknown சொன்னது…

super continue yours post

கருத்துரையிடுக