இரத்த சோகையை குணமாக்கும் -லோஹரஸாயனம் Loha Rasayanam
(ஆதாரம் -ரஸயோக ரத்னாகரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ 10 கிராம்
2. சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக 10 “
இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்
3. அயபற்பம் – லோஹபஸ்ம 30 கிராம் சேர்த்து அரைத்து பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து மூன்று நாட்கள் அரைத்துக் கோலி போன்ற மாத்திரைகளாக உருட்டி உலரவைத்து அவற்றை ஓர் தாமிரப் பாத்திரத்தில் போட்டு மூடிச் சீலைமண்பூசி நெற்குவியலில் புதைத்து மூன்று நாட்கள் வைக்கவும். 3- ஆம் நாள் உருண்டைகளைப் பிரித்தெடுத்துக் கல்வத்திலிட்டுப் பொடி செய்து மூன்று நாட்கள் அரைத்துப் பின்னர் அக்கலவையை இரும்புக் கல்வத்திலிட்டு
1. துளசிச்சாறு – துளசி ஸ்வரஸ
2. திரிகடுகஷாயம் – திரிகடுகஷாய
3. சித்தரத்தைக் கஷாயம் – ராஸ்னா கஷாய
4. சீந்தில் கஷாயம் – குடூசீ கஷாய
5. கொடிவேலிவேர் கஷாயம் – சித்ரக கஷாய
இவைகளைக் கொண்டு வகைக்கு மூன்று நாட்கள் அரைத்த பின்னர் அக்கலவையை இரும்புக் கல்வத்திலிட்டு
6. திரிபலா கஷாயம் – திரிபலா கஷாய
7. நொச்சியிலைச்சாறு – நிர்குண்டீ ஸ்வரஸ
8. மாதுளை ஓடு கஷாயம் – தாடிமத்வக் கஷாய
9. தாமரைக்கிழங்குச்சாறு – கமலமூல ஸ்வரஸ
10. கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ஸ்வரஸ
11. அம்மையார் கூந்தல் கஷாயம் – ப்ரஸாரிணி கஷாய
12. புரசம்பட்டை கஷாயம் – பலாஸத்வக் கஷாய
13. வாழைக்கிழங்குச்சாறு – ரம்பா ஸ்வரஸ
14. விஷ்ணுக்கிராந்திச்சாறு – விஷ்ணுகிராந்தி ஸ்வரஸ
15. கருவேலம்பட்டைக் கஷாயம் – பப்பூலத்வக் கஷாய
இவற்றைக் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் வரை வைத்தரைத்து உலர்ந்தபின் பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:
100 முதல் 200 மில்லி கிராம் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்கம் (ஸோப), இரத்தக் குறைவு (ரக்தால்பத), பலவீனம் (பலக்ஷய / தௌர்பல்ய).
இது மற்ற மருந்துகளுடன் சேர்ந்து வலுவூட்டிச் செய்கைக்காக (Tonic Action) கொடுக்கப் படுவதுண்டு.
தெரிந்து கொள்ள வேண்டியவை .
எலும்பு மஜ்ஜைகளில் ஆற்றலை அதிகபடுத்தி -இரத்தத்தை அதிகபடுத்தும் .
ஹீமோ க்லோபின் அளவு ஆறுக்கு குறைவாக இருந்தாலும் வெகு வேகமாக நார்மல் அளவுக்கு கொண்டு வரும் நல்ல மருந்து இது ..
0 comments:
கருத்துரையிடுக