செவ்வாய், நவம்பர் 01, 2011

முடி வளர -முடி கருக்க - அணு தைலம்


முடி வளர -முடி கருக்க - அணு தைலம் 
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் ஸூத்ரஸ்தானம் - நஸ்யவிதி)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கீரைப்பாலை ஜீவந்தி                         12.500 கிராம்
2.            குருவேர் க்ருஷ்ண உசீர (அ) ஹ்ரிவேர           12.500       
3.            தேவதாரு தேவதாரு                            12.500       
4.            கோரைக்கிழங்கு முஸ்தா                        12.500       
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்                  12.500       
6.            விளாமிச்சம்வேர் உசீர                          12.500       
7.            நன்னாரி ஸாரிவா                              12.500       
8.            சந்தனம் சந்தன                               12.500       
9.            மரமஞ்சள்பட்டை தாருஹரீத்ரா                  12.500       
10.          அதிமதுரம் யஷ்டீ                              12.500       
11.          கோரைக்கிழங்கு முஸ்தா                        12.500       
12.          அகில்கட்டை அகரு                             12.500       
13.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரிதகீ பலத்வக்   12.500       
14.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக் 12.500       
15.          நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                  12.500       
16.          நாமக்கரும்பு -                                      12.500       
17.          வில்வவேர் பில்வமூல                          12.500       
18.          ஆம்பல் கிழங்கு உத்பல கந்த                    12.500       
19.          கண்டங்கத்திரி கண்டகாரீ                       12.500       
20.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ                       12.500       
21.          ஈச்சம்வேர் பரூசக                              12.500       
22.          ஓரிலை ப்ரிஸ்னி பார்ணீ                        12.500       
23.          மூவிலை சாலிபர்ணீ                            12.500       
24.          வாயுவிடங்கம் விடங்க                         12.500       
25.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரீ                   12.500       
26.          ஏலக்காய் ஏலா                                12.500       
27.          அரேணுகம் அரேணுக                           12.500       
28.          தாமரைக்கேஸரம் பத்மகேஸர                   12.500       

                இவைகளை 35.000 லிட்டர் சுத்தமான தண்ணீரில் கஷாயமாகக் காய்ச்சி 3.500 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதைப் பத்து சமபாகங்களாக்கவும்.

1.            அவ்விதம் பங்கிடப்பட்ட கஷாயம்      350 மி.லி.
2.            சுத்தமான நல்லெண்ணெய் திலதைல  350 கிராம்

                இவைகளைக் கலந்து காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிகட்டவும். இவ்விதம் ஒன்பது பங்கு கஷாயங்களைக் கொண்டு அதே அளவு எண்ணெயை ஒன்பது தடவை மடக்கிக் காய்ச்சிப் பத்தாவது பங்குடன் 350 கிராம் ஆட்டுப் பாலுடன் (அஜக்ஷீர) சேர்த்துக் காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

தயாரிக்கும் முறையில் உள்ள நுணுக்கங்கள் 

வரீஎன்று தண்ணீர்விட்டான் கிழங்கையும், “குஷ்டஎன்று ஜாதிக்கோஷ்டத்தையும், “கிஞ்சல்கடி கமலாத் பலாம்என்று தாமரைக் கேஸரம், சித்தாமுட்டி வேர் இவைகளையும் கிரகிப்பது உண்டு.
        
9  ஆவர்த்தங்களில் எண்ணெயை இறக்கி வடிகட்டாது வற்ற வற்றக் கஷாயத்தைச் சேர்த்துச் சேர்த்துக் காய்ச்சிப் பத்தாவது ஆவர்த்தத்தில் மட்டுமே இறக்கி வடிகட்டுவதும் உண்டு.
             
பத்தாவது ஆவர்த்தத்தில் எண்ணெய்யின் அளவில் நான்கில் ஒரு பங்கில் மேற்கூறிய கஷாயச் சரக்குகளையே கல்கமாக்கிச் சேர்த்துக் காய்ச்சுவதும் உண்டு.

               
சம்பிரதாயத்தில் கஷாயச் சரக்குகளை எண்ணெய்யின் எடைக்குச் சமபாகமாக அமைத்துப் பத்துப் பங்குகளாக்கி ஒவ்வொரு பங்கைக் கொண்டும் முறைப்படி அவ்வப்பொழுது கஷாயமும், கல்கமும் தயார் செய்து 10 ஆவர்த்திகள் செய்யப்படுகின்றன. முழுவதையும் கஷாயமாக்கி அதை 10 ஆவர்த்தம் முடியும்வரை கெடாமல் காப்பதில் உண்டாகும் பிரச்னைகளை உத்தேசித்து இந்த முறை அனுசரிக்கப்படுகிறது.

                

 பயன்படுத்தும் முறையும் அளவும்:    

 

5 முதல் 10 துளிகள் நசியமிட அதாவது மூக்கில் இடும் சொட்டு மருந்தாக (நஸ்ய) பயன்படுத்தப்படுகிறது.


                 
தீரும் நோய்கள்:  


தலை, மூக்கு, தொண்டை போன்ற கழுத்துக்கு மேற்பட்ட உறுப்புகளில் தோன்றும் நோய்கள் (ஊர்த்வஜத்ருகாத ரோக), தோல் வறட்சி (த்வக்ரூக்ஷய), நரை (பாலித). தொடர்ந்து உபயோகிக்க புலன்கள் கூர்மையாவதுடன் நரையும் நீங்குகிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆயுர்வேதத்தில் உயிர் நாடியான பஞ்சகர்மா என்னும் உடலை சுத்தம் செய்யும் ஐந்து வகை விஷயங்களில் நஸ்யம் என்னும் மூக்குதுளி சிகிச்சை தலைக்கு மேல் உள்ள எல்லாவகையான நோய்களுக்கும் சிறந்த ஒன்று ..இந்த பஞ்சகர்ம சிகிச்சைகளை பற்றி அடுத்து விரைவில் பார்க்கலாம் ..
  2. இந்த அணு தைலம் என்ற மருந்து மருந்து அனுதினமும் நாம் பயன்படுத்தினால் -முடி கொட்டாமல் ,முடி நரைக்காமல் ,கண் பார்வையை தெளிவாக்கி கண்ணாடி அணியாமல் ,புலன் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் கொடுத்து ,தைராய்ட் வராமல் தடுத்து ,முக சுருக்கங்களை வர விடாமல் தடுத்து என்றும் இளமையாக வைக்க உதவும் ..
  3. காலை கடமைகளில் தினமும் பல் விளக்குவது மட்டும் தான் இப்போது செய்கிறோம் (சிலர் அதை கூட செய்வதில்லை -பெட் காபி குடிக்கிறார்கள் ),ஆனால் கண்ணுக்கு அஞ்சன மை ,மூக்குக்கு எண்ணை,தலைக்கு எண்ணை வைப்பது என்று ஆயுர்வேதம் தினமும் செய்ய சொல்கிறது ..
  4. இந்த அணு தைலம் -பல தலை சார்ந்த நோய்களுக்கு சிறந்த மருந்து ..

முடி கருக்க,முடி வளர மட்டுமல்லாமல் பல நல்ல பலன்களை இந்த நஸ்ய சிகிச்சை செய்யும்

குறிப்பு -இந்த மருந்தை மூக்கில் எண்ணை விடும் -மூக்கு துளி சிகிச்சையாக -நஸ்ய சிகிச்சையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் 
 
               

Post Comment

6 comments:

கருத்துரையிடுக