ஞாயிறு, நவம்பர் 06, 2011

வாத வலிகளுக்கு சிறந்த தைலம் - பிரபஞ்ஜனவிமர்தன தைலம்


வாத வலிகளுக்கு சிறந்த தைலம் - பிரபஞ்ஜனவிமர்தன தைலம்
   (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)               
தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            சிற்றாமுட்டி வேர் பலாமூல                     100 கிராம்
2.            தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ        100         “
3.            முருங்கைப்பட்டை சிக்ருத்வக்              100         “
4.            மாவிலிங்கப்பட்டை வருணத்வக்            100         “
5.            எருக்கன் வேர் அர்க்கமூல                 100         “
6.            புங்கின் பட்டை கரஞ்ஜ த்வக்               100         “
7.            ஆமணக்கின் வேர் எரண்ட மூல            100         “
8.            குருஞ்சி வேர் ஸஹஸார மூல            100         “
9.            நாட்டு அமுக்கிராக்கிழங்கு அஸ்வகந்தாமூல 100         “
10.          அம்மையார் கூந்தல் ப்ரஸாரிணீ            100         “
11.          வில்வவேர் பில்வமூல                    100         “
12.          முன்னைவேர் அக்னிமாந்தமூல            100         “
13.          பெருவாகைவேர் ஸ்யோனாகமூல                100         “
14.          குமிழ்வேர் காஷ்மரீ                          100         “
15.          பாதிரிவேர் பாட்டால                          100         “

                இவற்றை 25.600 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 6.400 லிட்டராகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்

1.            நல்லெண்ணெய் திலதைல          1.600 கிலோ கிராம்
2.            பசுவின் பால் கோக்ஷீர               3.200                     “
3.            தயிர் ததி                            3.200                     “
4.            காடி காஞ்ஜிக                       3.200                     “

                இவைகளைச் சேர்த்து அத்துடன்
1.            கிரந்தி தகரம் தகர                   10 கிராம்
2.            தேவதாரு தேவதாரு                 10           “
3.            ஏலக்காய் ஏலா                 10           “
4.            சுக்கு சுந்தீ                           10           “
5.            கடுகு ஸர்ஸப                  10           “
6.            கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ               10           “
7.            சதகுப்பை சதபுஷ்ப                   10           “
8.            கோஷ்டம் கோஷ்ட                  10           “
9.            இந்துப்பு ஸைந்தவலவண            10           “
10.          சித்தரத்தை ராஸ்னா                 10           “
11.          வெந்தயம் மேதீ                     10           “
12.          வசம்பு வச்சா                        10           “
13.          கொடிவேலி வேர் சித்ரக              10           “
14.          சடாமாஞ்சில் ஜடமாம்ஸீ             10           “
15.          ஸரளதேவதாரு ஸரள               10           “
16.          கடுகரோஹிணீ கடூகீ                10           “

                ஆகியவற்றை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

               
பயன்படுத்தும் முறை:

                 
நோயால் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமோ அல்லது உடல் முழுவதற்குமோ மேற் பூச்சாக (அப்யங்க) பயன்படுத்தப்படுகிறது. 5 முதல் 15- மிலி வரை சூடான பாலுடன் 2-3 வேளைகள் வரை சிலர் உள்ளுபயோகத்திற்கும் பயன்படுத்துவதுண்டு.

                 
தீரும் நோய்கள்:  


வாதகுன்மம் (வாதகுல்ம), வாத வீக்கம் (வாத விக்ரதி), குடலிறக்கம் எனும் ஹெர்னியா (ஆந்த்ரவ்ருத்தி), அண்டவீக்கம், சூலை (சூல), முகவாதம் (அர்தித), பலவித வாத நோய்கள் (வாத ரோக), கீழ்முதுகு வலி (கடீசூல), புட்டவலி (ப்ரஷ்ட சூல), துன்பமும், கால தாமதமும் கொண்ட பிரசவ வேதனை (மூத கர்ப).

                இதை வஸ்தி செய்யவும் உபயோகிக்கலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. பிரபஞ்சம் என்றால் உலகம் ,வாயு ,வாதம் என்றும் பொருள் கொள்ளலாம் .,மர்தனம் என்றால்  தேய்தல் ,குறைத்தல் என்றும் உணரலாம் ...வாத நோய்களில் பெரும்பான்மையான மருந்துவர்களின் சிறந்த தேர்ந்து எடுக்கும் தைலம் -இதுவே ..
  2. இடுப்பு சார்ந்த நோய்கள் ,அடி முதுகு சார்ந்த வலிகளுக்கு -சஹாச்சராதி தைலம் போல் இந்த மருந்தும் சிறந்து
  3. வலிகளை பரிபூர்ணமாக குறைக்க உதவும்
  4. வலிகளுக்கு -பல தைலங்கள் உள்ளது -தைலத்தை தேர்ந்தெடுப்பது மருத்துவரின் திறமை ,அனுபவம் ,நோய் கணிப்பு ,வாத ,பித்த ,கப நோய் குற்றங்களின் தன்மை ,நோயாளியின் பிரகிருதி போன்றவைகளை உள்ளடக்கியது ..

Post Comment

2 comments:

கருத்துரையிடுக